தன்மான சிங்கங்களே...
சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறு வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். ராசிநாதன் செவ்வாய், ராகுவுடன் நிற்பதால்... சகோதர வகையில் சங்கடங்கள், சொத்து சிக்கல்கள் வந்து நீங்கும். குருவால் சுபச் செலவுகள், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விட்டுக் கொடுப்பதால் வெற்றி பெறும் வேளையிது.
தோல்வியைக் கண்டு துவளாதவர்களே....
புதன் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். 16-ம் தேதி முதல் 8-ல் நிற்கும் செவ்வாய், ராகுவுடன் சூரியன் சேர்வதால்... காரிய தாமதம், உறவினர் வகையில் செலவுகள் வந்து போகும். 8-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால், அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை தீரும்.
எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் வேளையிது.
கடலளவு அன்பு கொண்டவர்களே....
சுக்கிரன் வலுவாக இருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஓரளவு பணம் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது விரைந்து முடியும். 16-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதால்... முன்கோபம், உடல் உபாதை வந்து விலகும். 9-ம் தேதி முதல் 11-ம் தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை தவிருங்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
விடாமுயற்சியால் சாதிக்கும் தருணமிது.
தளராத தன்னம்பிக்கை கொண்டவர்களே...
குருபகவான் வலுவாக நிற்பதால், புது முயற்சிகள் வெற்றியடையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையைத் தந்து முடிப்பீர்கள். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். ராகுவுடன் செவ்வாய் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். 11-ம் தேதி மதியம் 1 மணி முதல் 13-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
செல்வாக்கு கூடும் நேரமிது.
நியாயத்துக்காக போராடுபவர்களே...
சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால்... தடைகளைக் கண்டு தளர்ந்துவிட மாட்டீர்கள். வீடு வாங்க, வீடு கட்ட லோன் கிடைக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். 16-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன், ராகுவுடன் இணைவதால்... உடல் நலக் கோளாறு, வீண் அலைச்சல் வந்து போகும். 14-ம் தேதி முதல் 16-ம் தேதி நண்பகல் வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால், வேலைச்சுமை இருக்கும். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்க்க வேண்டாம்.
சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் தருணமிது.
மலர்ந்த முகத்துடன் உதவி செய்யும் குணம் கொண்டவர்களே!
சூரியன் சாதகமாக இருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. புது வீடு கட்டி குடி புகுவீர்கள். கணவர் உங்களைப் பாராட்டுவார். குரு சாதகமாக இருப்பதால், செல்வாக்கு கூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். 4-ல் செவ்வாயும், ராகுவும் நிற்பதால், மன உளைச்சல் வந்து நீங்கும். 16-ம் தேதி நண்பகல் முதல் 18-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.
புதுமையாக யோசித்து வெற்றி பெறும் வேளையிது.
நடுநிலையாக செயல்படுபவர்களே...
ராகுவும், செவ்வாயும் வலுவாக இருப்பதால், சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். குருவால் வேலைச்சுமை, கவலைகள் வந்து நீங்கும். சூரியன் 16-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். 19, 20 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், பொறுமையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் தருணமிது.
முன் வைத்த காலைப் பின் வைக்காத குணமுடையவர்களே...
குரு வலுவாக நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவர் உங்களுக்காக பரிந்து பேசுவார். பிள்ளைகளால் மதிப்பு கூடும். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். 21-ம் தேதி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால், உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சிக்கல்களில் இருந்து விடுபடும் வேளையிது.
எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே...
சனி வலுவாக இருப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். வெளியூர் பயணம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் பேசி முடிப்பீர்கள். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். சூரியனும், செவ்வாயும் சரியில்லாததால்... முன்கோபம்,சலிப்பு வந்து நீங்கும். உறவினர்களிடம் இடைவெளி தேவை. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும்.
கோபத்தை அடக்குவதால், மகிழ்ச்சி பொங்கும் நேரமிது.
அறிவுபூர்வமாக எதையும் யோசிக்கும் தன்மையுடையவர்களே...
சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவர் பொறுப்பாக நடந்து கொள்வார். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ராசிக்கு 12-ல் செவ்வாய் நிற்பதால், சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். எதிர்பாராத பயணம் உண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுங்கள். உத்யோகத் தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
மன உறுதியால் வெல்லும் காலமிது.
இளகிய மனம் கொண்டவர்களே...
குரு வலுவாக இருப்பதால்... தடுமாற்றம், தயக்கம் நீங்கி, தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது வீடு வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவர் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார். பிள்ளைகள் நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.
இங்கிதமான பேச்சால் உயரும் தருணமிது.
மற்றவர்களை மகிழ்விப்பதன் மூலம் மகிழ்ச்சியடைபவர்களே...
புதன் சாதகமாக இருப்பதால், சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவர் மனம் விட்டுப் பேசுவார். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று, புது இடம் வாங்குவீர்கள். சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், பணம் வரும். வெள்ளியிலான பொருட்கள் வாங்குவீர்கள். ஜென்ம குருவால் வீண் செலவுகள், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும்.
புதிய முயற்சிகளில் வெற்றி காணும் வேளையிது.