அவள் விகடனும், திருச்சி ஏ.எம் ஃபேன்ஸி நிறுவனமும் இணைந்து திருநெல்வேலி ஆர்.கே.வி திருமண மண்டபத்தில் மார்ச் 24 அன்று நடத்திய 'நீங்களும் தொழிலதிபர்தான்’ ஒருநாள் பயிற்சி முகாமில், ஆர்வத் துடன் குவிந்தனர் வாசகிகள். திருநெல்வேலி மட்டுமல்லாமல், சுற்று வட்டாரத்தில் இருந்தும் பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், பணிபுரிவோர் என அனைத்துத் தரப்பில் இருந்தும் ஆஜராகிவிட, மண்டபத்தின் கீழ்தளத் திலும் தனித் திரையிட்டு பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

வந்திருந்த அனைவருக்கும் அன்று செய்யப்போகும் நகைக்கான பொருட்கள் அடங்கிய 160 ரூபாய் மதிப்புள்ள 'கிட்’ தரப்பட்டது. காலை 10 மணி அளவில் பயிற்சி தொடங்க, தொலைவில் இருப்பவர்களுக்கும் தெரியும் வண்ணம் நகைகளின் செய்முறைகள் அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஸ்க்ரீனில் திரையிடப்பட்டது. திருநெல் வேலி வாசகிகளுக்கு புதிதாக 'த்ரீ கார்னர் மாலை’யும், 'கிரிஸ்டல் வித் டியூப் மாலை’யும் கற்றுத்தரப்பட்டது. ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்ட பெண்கள், இறுதியில்... 'என்னால் இவ்வளவு அழகாக ஒரு நகையைத் தயாரிக்க முடியுமா!' என வியந்து போனார்கள்.

மேடையில் ஏறி மைக் பிடித்த வாசகிகளில் ஒருவரான கனகரத்தினம், ''மதுரையில் நடக்கும்போதே கலந்துக்க ஆசைப்பட்டேன். முடியல. இப்போ திருநெல்வேலி வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டேன். இத்தனை பேருக்கும் இவ்வளவு நேர்த்தியா சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்த அவள் விகடனுக்கு ஒரு 'ஓ’ போடுங்க!'' என்று அழைக்க, அரங்கமே ஆர்ப்பரித்து 'ஓ’ போட்டது.

''நெல்லையில சுயதொழில் செய்யும் பெண்கள் குறைவு. அதை அதிகப்படுத்த 'அவள் விகடன்’ போட்ட பிள்ளையார் சுழிதான் இந்த நிகழ்ச்சி!' என்று நன்றி சொன்னார் தனலட்சுமி.

''இந்தத் தொழிலுக்கு பெரிய முதலீடு எதுவும் தேவை இல்லை. ஆரம்பத்தில் வீட்டு வேலைகளுக்கு இடையேகூட சின்னச் சின்ன நகைகளான கொலுசு, ஜிமிக்கி, பிரேஸ்லெட் போன்றவற்றை செய்யத் தொடங்குங்க. நீங்க செய்யும் முதலீடு 25 - 100 ரூபாய்க்குள் இருந்தா, 250 - 400 சதவிகிதம்வரைகூட மார்ஜின் வைத்து விற்கலாம். இதுவே முதலீடு உயர உயர, மார்ஜின் குறையணும். 100 ரூபாய்க்கு மேல் உள்ள முதலீட்டுக்கு 200 சதவிகிதம் வரை மார்ஜின் வைக்கலாம். இந்தப் பயிற்சி நீங்க சுயதொழில் செய்வதற்கு ஒரு உந்துதலா இருக்கும். உங்களுக்கு உதவ அவள் விகடனும், நாங்களும் தயாராக இருக்கோம்...'' என ஏ.எம் ஃபேன்ஸி உரிமையாளர் அப்துல் ஹமீது தன்னம்பிக்கை ஊட்ட... குளூக்கோஸ் ஏறிய உற்சாகத்துடன் விடை பெற்றனர் தோழிகள்!

- ச.பா.முத்துகுமார் படங்கள்: எல்.ராஜேந்திரன்