Published:Updated:

கதை கேளு... கதை கேளு..! - 11

விலை உயர்ந்தது காரா... கையா..?இ.மாலா

கதை கேளு... கதை கேளு..! - 11

விலை உயர்ந்தது காரா... கையா..?இ.மாலா

Published:Updated:

சுட்டீஸ்

##~##

ன்ன வாண்டுகளா லீவ் விட்டாச்சா?! வெயில்ல அலையாம கொஞ்சம் நேரம் சமர்த்தா உட்கார்ந்து இந்தக் கதையைக் கேளுங்க பார்ப்போம்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லா குட்டிப் பையன்களுக்கும் அப்பானா... ரொம்பப் பிடிக்கும்தானே?! அப்படித்தான் ராமுவுக்கும். 'மை டாடி இஸ் த பெஸ்ட்’னு friendsகிட்ட எல்லாம் பெருமையா சொல்வான். அதேபோல ராமுவோட அப்பாவுக்கும் ராமுனா உயிர். ஆனா, அவன் சேட்டை பண்ணும்போதெல்லாம் திட்டுறது, அடிக்கறதுனு அவனை punish பண்ணுவார். ஆனாலும் ராமுவுக்கு தன் அப்பா மேல பாசம் குறையாது.

ராமுவோட அப்பா ஒரு விலை உயர்ந்த புது கார் வாங்கினார். ராமுவுக்கு சந்தோஷம் தாங்கல. ஒரு லீவ் நாள்ல, ராமுவோட அப்பா தன் புது காரை clean பண்ணிட்டு இருந்தார். ஓடி வந்த ராமு, அப்பாவுக்கு ஹெல்ப் பண்ண அவர் பக்கத்துலயே இருந்து அவர் கேட்கறதை எல்லாம் எடுத்துக் கொடுத்தான். கொஞ்ச நேரத்துல ''bore அடிக்குதுப்பா...''னு சொல்லிட்டுப் போயிட்டான். காரோட முன் பகுதியை clean  பண்ணி முடிச்ச அவங்கப்பா, எங்க பையனைக் காணோமேனு தேடினார். ராமுவைப் பார்த்தவருக்கு பயங்கர ஷாக். அவன் என்ன செய்துட்டு இருந்தான் தெரியுமா? ஒரு கூர்மையான கல்லை வெச்சு காரோட பின்பக்கம் ஏதோ கீறிட்டு இருந்தான்.

இதைப் பார்த்த அப்பாவுக்கு பயங்கரமா கோபம் வந்துடுச்சு. அவனை அடிக்க ஏதாவது கிடைக்குமானு தேடினார். அந்த நேரம் பார்த்து, ஜன்னல்ல இருந்த சுத்தியல் ஒண்ணு அவர் கண்ணுல பட்டுச்சு. கோபத்துல அதை எடுத்து, ''எவ்வளவு தைரியம் இருந்தா கார்ல கிறுக்குவே? இனிமே கார்கிட்டே வருவியா''னு கேட்டு, சுத்தியலை வெச்சு ராமுவோட கை விரல்களில் பலமா அடிச்சுட்டார். ராமு கதறி அழ, அதுக்கு அப்புறம்தான் கோபத்துல கண்மண் தெரியாம தன் பையனை சுத்தியலை வெச்சு அடிச்சுட்டோமேனு அவர் உணர்ந்தார்.

கதை கேளு... கதை கேளு..! - 11

ராமுவுக்கு கை விரல்கள் வீங்கி, ரத்தம் கட்டிப்போக, அவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனார். ஸ்கேன் செய்த டாக்டர்ஸ், மூணு விரல்கள்ல எலும்புகள் நொறுங்கி சேதம் அடைஞ்சுருக்கிறதா சொன்னாங்க. வலி மறக்கக் கொடுத்திருந்த மருந்தால, பெட்ல ராமு தூங்கிட்டு இருந்தான். அவனோட விரல்களில் கட்டு. ராமுவோட அம்மா, ''உங்க முன்கோபத்தால என்ன செய்றோம்னே தெரியாம செய்து, இப்படி பையனோட விரல்களைப் பாழாக்கிட்டீங்களே...''னு அவங்க அப்பாகிட்ட கண்ணீர் வடிச்சாங்க.

அவருக்கு தன் மேலேயும் தன் கோபத்தின் மேலேயும் வெறுப்பு வந்தது. கண்ணீரோடு வீட்டுக்கு வந்தவர், தன் கார்கிட்ட போனார். ராமு கிறுக்கினதை உத்துப் பார்த்தார்... அழகான கையெழுத்தில் 'ஐ லவ் யூ டாட்'(I Love You Dad) அப்படினு எழுதி இருந்தான். பார்த்தவருக்கு கண்ணீரை அடக்க முடியல. விலை கொடுத்து வாங்கின இந்த காருக்கு முக்கியத்துவம் கொடுத்து, விலைமதிக்க முடியாத தன் பையனோட விரல்களை கோபத்தில் சிதைச்சுட்டோமேனு கதறி அழுதார். ராமுவுக்கு சீக்கிரம் குணமாகி, அவனோட fingers பழைய நிலைமைக்கு வந்துடணும்னு கண்ணீரோட வேண்டிக்கிட்டார். 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’னு நம்ம முன்னோர்கள் ஏன் சொல்லியிருக்காங்கனு இப்பப் புரியுதா..?!

நீங்களும் உங்க அப்பா, அம்மாகிட்ட, ஏன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கூட இனிமே கோபப்படக்கூடாது. சரியா..?! அதேசமயம், அப்பா, அம்மாவுக்கு கோபம் வர்ற மாதிரியும் நடந்துக்க வேண்டாம். பெற்றோர்களே... சூடு வைக்கிறது, கையில் கிடைக்கறதை எல்லாம் கொண்டு அடிக்கிறது நீங்களும் கோபத்தில் குழந்தைகள்கிட்ட முரட்டுத்தனமா நடந்துக் காதீங்க. குழந்தைகளைத் திருத்த அன்பைவிட பெரிய ஆயுதம் எதுவும் இல்லை! நல்ல நல்ல கதைகளைச் சொல்லிச் சொல்லியே அவங்கள நல்வழிப்படுத்திட முடியும்கிறத நம்புங்க!

நிறைவடைந்தது

விரல்கள்...

சில தகவல்கள்!

லகிலேயே பெரிய கைகளை உடையவர் சீனா நாட்டைச் சேர்ந்த லுய் ஹுவா. இடது கட்டை விரல் 10.2 இன்ச், ஆட்காட்டி விரல் 12 இன்ச். எண்ணிக்கையில் அதிக விரல்கள் கொண்ட உலக சாதனைக்குச் சொந்தக்காரர்கள், இரண்டு இந்தியர்கள். 2005-ல் பிறந்த மெனேரியா மற்றும் 1995-ல் பிறந்த தேவேந்திரா. ரெண்டு பேருக்கும் கைகளில் 12 விரல்களும், கால்களில் 13 விரல்களும் உண்டு.

திருமணங்களின் போது மண மக்களின் விரல்களில் மோதிரம் அணியும் பழக்கம் உலகின் பல நாடுகளிலும் இருக்கிறது. குறிப்பாக மோதிர விரல்களில்தான் முக்கியமாக இதை அணிகிறார்கள். அதனால்தான் அந்த விரலுக்கே அப்படி ஒரு பெயர். மோதிர விரல் நரம்புதான் நேரடியாக இதயத்தை இணைக்கிறது (Vein of Love) என்கிற நம்பிக்கை மேற்கத்திய நாடுகளில் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism