ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

அவருக்கென்ன... எழுதிவிட்டார்..!

கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, என் பேரன் விஷாலுக்கு ஏகக் கொண்டாட்டம். அதுவும் கடற்கரைக்குச் சென்று கால் நனைத்து நிற்கவும் அவனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அப்போது, ''ம்... இவர் பாட்டுக்கு எழுதிட்டு இங்க வந்து நின்னுட்டார். எல்லாத்தையும் யார் கஷ்டப்பட்டுப் படிக்கிறதாம்... நாங்கதான்!'' என்று அவன் சலித்துக்கொள்ள, அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல், ''என்னடா... யாரடா சொல்றே?'' என்றேன் நான். உடனே அவன் அங்கே பாறையின் மீது நின்றிருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையைக் காட்டி, ''இதோ... இவரைத்தான்!'' என்று சொல்ல... நாங்கள் மட்டுமல்ல, அருகில் நின்றிருந்த சில சுற்றுலாப் பயணிகளும் ரசித்துச் சிரித்தனர் அந்த வாண்டுவின் குறும்பை!

- டி.எம்.பானுமதி, ஆதம்பாக்கம்

'நான்... ஸ்கூல் கேர்ள்!'

எங்களுடைய லேடீஸ் கிளப் சார்பில் பெண்கள் தினம் கொண்டாடியபோது, குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி நடத்தினோம். எங்கள் ஃப்ளாட்டை சேர்ந்த இரண்டரை வயதான சுட்டி லயா, தானும் போட்டியில் கலந்துகொள்வேன் என்று அடம்பிடிக்க, அவளை சமாதானப்படுத்துவதற்காக மேடை ஏற்றி, ''ஜட்ஜ் என்ன வேஷம்னு கேட்டா, ஸ்கூல் கேர்ள்னு சொல்லு'' என்று சொல்லி அனுப்பினோம். எந்த கூச்சமும், பயமும் இன்றி மேடை ஏறி ''நான் ஸ்கூல் கேர்ள்...'' என்று அவள் அலட்ட, ''ஏன் யூனிஃபார்ம் போடல..?'' என்றார் ஜட்ஜ். உடனே அந்த சுட்டி, ''இன்னிக்கு ஸ்கூல் ஹாலிடே!'' என்று அசத்த, அனைவ ரும் ரசித்து சிரித்து கைதட்டினர்.

அவளுக்குத்தான் இரண்டாவது பரிசு!

- ஜெயசுந்தரி, மேற்கு மாம்பலம்

'பூக்காரருக்குத்தான் கட்டி வைக்கணும்!’

ஐந்து வயதான என் பெண்ணுக்கு நிறைய முடி. தினமும் பூ வைக்க வேண்டும் அவளுக்கு. ஒருநாள் பூக்காரர் வராவிட்டாலும் என்னைப் படுத்தி எடுத்துவிடுவாள். ஒருமுறை நான்கு நாட்களாக தொடர்ந்து பூக்காரர் வராமல் போக, அவள் பூ வேண்டும் என்று என்னை அழுது நச்சரிக்க, ''உன்னை ஒரு பூக்காரருக்கே கல்யாணம் செஞ்சு கொடுத்துடறேன். தினமும் பூ வெச்சுக்கலாம்'' என்றேன் நான் கடுப்பில். ஐந்தாவது நாள் பூக்காரர் வந்தவுடன் சந்தோஷம் பொங்கியவளாக அவரை வாசலில் நிற்க வைத்துவிட்டு என்னை உள்ளிருந்து அழைத்து வந்தவள், ''அம்மா, என்னை பூக்காரருக்கு கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொன்னியே? இதோ பூக்கார அங்கிள் வந்துட்டாங்க!'' என்று சொல்ல, அனைவரும் சிரித்துவிட்டோம்.

இன்றும் பூக்காரரைப் பார்க்கும்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து, ஒரே சிரிப்புதான்!

- ஏ.அனிதா நேசராணி, கொரட்டூர்

கொம்பு இல்ல... மீசை!

பக்கத்து வீட்டின் மூன்று வயது சிறுவன், எந்நேரமும் துறுதுறு என்று எதையாவது எடுப்பது... ஏட்டிக்கு போட்டியாக பேசுவதுமாக இருப்பான். ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்தவனிடம், ''எதுலயாவது கை வைச்சா... அடி வாங்குவே பார்’' என்றேன் மிரட்டலாக. அதற்கு அவன், ''என்னைய அடிச்சா... எங்க அப்பாகிட்ட சொல்லுவேன்'’ என்றான். அதற்கு என் மகள், ''உங்கப்பாவுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?'’ என்றாள். ஒரு நிமிடம்கூட யோசிக்காத அந்தச் சுட்டி பையன், ''எங்கப்பாவுக்கு பெரிய மீசை முளைச்சிருக்கு'’ என்று அதட்டலாகச் சொல்லி, அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டான்.

- சாந்தகுமாரி ஜெயராஜ், திருச்சி-2