Published:Updated:

அபலை ‘அஞ்சலிகள்!’

நியூஸ்

அபலை ‘அஞ்சலிகள்!’

நியூஸ்

Published:Updated:

வெள்ளித்திரைக்குப் பின்னே சிதறும் கண்ணீர்த் துளிகள்

##~##

பொதுதளத்தில் இயங்கும் பெண்களின் சொந்த விஷயங்கள்கூட ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாவதுதான் இங்கே வாடிக்கை. அந்த வகையில் சமீபத்திய பலி... நடிகை அஞ்சலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கற்றது தமிழ்' படம் மூலமாக அறிமுகமாகி, 'அங்காடித் தெரு' மூலமாக பிரபலமாகி அடுத்தடுத்து முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருந்த அஞ்சலி, அவர் நடித்து வெளியான 'சேட்டை' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்க... 'அஞ்சலி வீட்டை விட்டே ஓடிவிட்டார்' என்று பரபரப்பு கிளம்பியது. அஞ்சலியின் சித்தி காவல் நிலையத்தில் புகார், அஞ்சலி தலைமறைவு, அஞ்சலி தன் சித்தி மற்றும் இயக்குநர் களஞ்சியம் மீது குற்றச்சாட்டு,   'அஞ்சலி அவ்வப்போது காதல் கொண்டு ஓடிவிடுவாள்... அவளுக்கு மிகக் கொடிய நோய் இருக்கிறது' என்று சித்தியின் பேட்டி

அபலை ‘அஞ்சலிகள்!’

- இப்படி வரிசைகட்டின செய்திகள். இறுதியாக, 'வேலைப்பளு அதிகமாக இருந்ததால் நான் ஓய்வெடுக்க வேண்டிஇருந்தது. மற்றபடி யாரும் என்னை கடத்தவில்லை, நான் யாருடனும் ஓடிவிடவும் இல்லை! இனி யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்கப் போவதில்லை. என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிப்பேன்’ என்றபடி அஞ்ச லியே ஊடகத்தின் முன்பாக வந்து நின்றபிறகுதான் பிரச்னை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஒரு பெண் என்பதால் அஞ்சலி எதிர்கொள்ள நேர்ந்த துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பாக, எப்போதும் போல அம்பாக பாய்ந்து வந்த பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டைத்தான் கூற வேண்டும். இந்நிலையில், இதற்குக் காரணமான ஆணாதிக்க மற்றும் பத்தாம்பசலி சமூகத்தின் வேர்களையும் எதிர்த்து தங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்கிறார்கள் இவர்கள்...

சுகிர்தராணி, கவிஞர்: ''காலம் காலமாக பெண் களை பலவீனப்படுத்தி பணிய வைக்க ஆண்கள் பயன்படுத்துவது, பாலியல் சார்ந்த அவதூறுகளைத்தான். அதைத்தான் களஞ்சியமும் கையில் எடுத்திருக்கிறார். பொதுதளத்தில் இயங்கும் பெண்களின் ஒழுக்க நிலை கேள்விக்குரியது என்கிற ஆண் மடமைக் கருத்தையும் முன் வைக்கிறார்கள் களஞ்சியம் போன்றவர்கள். இன்னொரு பக்கம், கலைத் துறைகளில் இயங்கும் பெண்களை இந்த சமூகமும் அதே கண்ணோடுதான் பார்க்கிறது. அதிகம் சிந்திக்காமல் மிகச்சுலபமாக 'அப்படித்தான் இருக்கும்’ என்ற முடிவுக்கு வந்து, அவர்களை அதிக வசவுகளுக்கும், அவதூறுகளுக்கும் உள்ளாக்கு கிறார்கள். இப்படி உண்மைக்கு புறம்பாக சித்தரிக்கப்பட்ட நடிகைக்கான இலக்  கணத்தால்தான் தமிழ்ப் பெண்கள் இங்கே நடிக்க வருவதற்கு தயங்குகிறார்கள். உடனே வெளிமாநிலத்தில் இருந்து

அபலை ‘அஞ்சலிகள்!’

பல 'எதிர்பார்ப்புகளோடு’ நடிகைகளை அழைத்து வருகிறார்கள். ஆனால், உலகின் எந்த மூலையிலும் பெண் என்பவள் பெண்ணாகத்தான் இருப்பாள். அதேபோல நடிகை என்பவளும் தனக்குள்ள மரியாதையுடன் இயங்கும், தனக் கென ஆசைகள் வைத்திருக்கும் சக, சம மனுஷியே!  

இப்பிரச்னையில் களஞ்சியம் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் பேட்டியை கவனிக்க வேண்டும். 'நான்தான் அஞ்சலியை முதல் படத்தில் அறிமுகம் செய்தேன். ஆறுமாத காலம் நடிப்பு பயிற்சி கொடுத்தேன்’ என்பவர், தான் முன்னேற்றிவிட்டதால் அஞ்சலி தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை அஞ்சலிக்கு ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.

உதவிக்கு நன்றியை எதிர் பார்க்கலாமே தவிர, ஒட்டு மொத்தமாக எதிர்பார்ப்பது புத்திக்கோளாறு, வக்கிரம். இன்னும் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ சகோதரிகள் இதேபோன்ற பிரச்னைகள், கொடுமைகளின் பிடியில் இருக்கிறார்கள். அவையெல்லாம் செய்தியானால்... பொழுதுகழிக்கக் காத்திருக்கிறது சமூகம்!''

அபலை ‘அஞ்சலிகள்!’

பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ, திண்டுக்கல்: ''கிராமத்தில் படித்த    பெண்கள் கூட இப்போது சென்னை, பெங்களூரு என்று பெரு  நகரங் களில் வேலையில் இருக்கப் பழகிக் கொண்டார்கள். அப்படியிருக்க, 'நான்தான் அஞ்சலிக்கு எல்லாம் செய்தேன்’ என்று அவர் சித்தியும், களஞ்சியமும் மாறி மாறி கூறுவது அபத்தம். சொற்பமான கூலி கிடைக்கும் வேலையில் இருக்கும் பெண்கூட, தன் பொருளாதார பலத்தை வைத்து, சார்பு எடுக்காமல் வாழப் பழகும் இந்தச் சூழலில், லட்சங்களில் சம்பளம் பெறுமளவுக்கு வளர்ந்த ஒரு நடிகையை, தொடர்ந்து தன் கட்டுப் பாட்டுக்குள்ளேயே பணம் காய்க்கும் மரமாக வைக்க நினைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

சினிமாத்துறை ஒரு பக்கம் பாராட்டத் தகுந்த வளர்ச்சி பெற்றிருந்தாலும், இன்னொரு பக்கம் அதில் ஆணாதிக்கம் கட்டாயமாகவும், பெண்ணடிமைத்தனம் பரவலாகவும் இருக்கிறது என்பது உண்மை. பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணை கமிட்டி பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அதை சினிமாத்துறையில் இருந்துதான் தொடங்க வேண்டும். அந்தளவுக்கு அங்கு பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிகிறார்கள். இதற்கு அஞ்சலியும் விதிவிலக்கல்ல. இன்னொரு பக்கம், நடிகைகளின் படங்கள், பேட்டிகளால் தங்கள் விற்பனையை அதிகரிக்க மெனக்கெடும் பத்திரிகைகள், அதே நடிகையின் வாழ்க்கையில் பிரச்னை என்றால், வெறும் வாய்க்கு அவல் என்கிற நிலைப்பாட்டில் செய்தி வெளியிடாமல், அந்த நடிகையின் பிரச்னைக்கு உதவும்

அபலை ‘அஞ்சலிகள்!’

பொறுப்பை எடுக்க வேண்டும். நடிகை என்றில்லை... எந்தப் பெண்ணின் பிரச்னை பொதுவுக்கு வந்தாலும் மீடியாவுக்கு இந்தப் பொறுப்பு வேண்டும்.''

மீனா கந்தசாமி, எழுத்தாளர்: ''நிறைய வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் ஒரு பெண் தனியாக வாழ்வதும், தனியாளாக முன்னேறுவதும் இயல்பானது. இங்கோ ஒரு பெண் கோயிலுக்குச் சென்றால்கூட, 'தனியாவா வந்திருக்க?’ என்கிற கேள்விகள் துரத்தும். ஆக, பெண் என்பவள் இங்கே தனியாகவோ, சுதந்திரமாகவோ இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. அதுதான் அஞ்சலிக் கும் நேர்ந்திருக்கிறது. சித்தி, களஞ்சியம் என்று அவரைச் சுற்றியிருப்பவர்கள் அஞ்சலியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைத்து, அந்த விலங்கில் இருந்து அஞ்சலி விடுபட நினைத்ததும், 'கொடுமையான நோய் இருக்கிறது’ என்று சொல்லி அஞ்சலியின் எதிர்காலத்துக்கே உலை வைக்குமளவுக்கு சென்றுவிட்டார்கள்.

2,000 வருடங்களாக இங்கு இப்படித்தான் மதம், சாதி, உறவுக் கட்டுப்பாடு என்று பலவற்றின் பெயராலும் கட்டுண்டு கிடக்கிறாள் பெண். கல்வி, வேலைவாய்ப்பு பெற்று இப்போதுதான் பெண் ஓரளவுக்கு அந்தக் கட்டுகளில் இருந்து வெளிவர முயற்சிக்கிறாள். அந்த முன்னேற்றத்துக்காக அவள் தந்த அத்தனை வருட உழைப்பையும், முயற்சியையும் அவள் மீதான ஒரேயரு பாலியல் குற்றச்சாட்டில் சுலபமாக எரித்துவிடுகிறது இந்த சமூகம். அஞ்சலி விஷயத்திலும் அப்படித்தான்

அபலை ‘அஞ்சலிகள்!’

'அவனுடன் காதல்’, 'இவன் கட்டுப்பாட்டில் இருக்கிறாள்’ என்று செய்தி பரப்புகிறார்கள். உடனே களஞ்சியம் போன்றவர்கள் 'கலாசாரக் காவலன்' வேடம் ஏற்றுப் பேசுகிறார்கள். இந்த சூழ்நிலையில் அஞ்சலி மட்டுமல்ல, நடிகைகள் மட்டுமல்ல, எல்லா பெண்களுமே இந்த ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்து இயங்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வதே காலத்தின் அவசியம்!''

ரோகிணி, திரைப்பட நடிகை: ''பெண்களுக்கு எதிரான பாலியல்  தீண்டல்களும், பயமுறுத்தல்களும் மற்ற துறைகளை விடவும் சினிமாத் துறையில்தான் குறைவு. ஏனென்றால், எந்த ஒரு வேலையிலும் பெற்றோரையோ, குடும்பத்தில் ஒருவரையோ தன்னுடைய பணியிடத்தில் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால், சினிமா துறையில் மட்டும் அது சாத்தியம்.

'மகளிர் மட்டும்' என்றொரு படம். அலுவலகங்களில் நடக்கிற விஷயங்களை அதில்      வெளிச்சம் போட்டிருந்தோம். 'ஆமா, கரெக்டா சொல்லியிருக்காங்க. இந்த மாதிரிதான்       ஆபீஸ் கள்ல நடக்குது. பஸ்ல இப்படித்தான் ஒருத்தன் உரசுறான்’ என படம் பார்த்த பல பெண்களும் சொன்னார்கள். ஆக, எல்லா இடங்களிலுமே பெண்களுக்கு பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நடிகை என்றால் மட்டும் இந்த ஊடகங்கள் இவ்வளவு வெளிப்படையாக கண்டபடி எழுதிக் குவிக்கின்றன.

அஞ்சலியைப் போன்ற ஒரு நடிகையை பற்றிய செய்தியை வெளியிட்டால் பரபரப்பாகும். அதனால், நல்ல வருமானமும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்று இஷ்டம் போல எழுதுகிறார்கள். இதெல்லாம், அந்தப் பெண்ணை, அவள் சார்ந்த குடும்பத்தை, சுற்றத்தை, நட்பு வட்டத்தை என மிகப்பெரிய ஒரு கூட்டத்தையே காயப்படுத்தும் என்பதை ஊடகங்கள் ஏன் உணர்வதில்லை?

அபலை ‘அஞ்சலிகள்!’

எங்களுக்கும் இது ஒரு தொழில். இதில் இருக்கும் எல்லோரையும் ஏன் தப்பாகவே பார்க்கிறீர்கள்? இந்த மனநிலை முதலில் மாற வேண்டும். அப்படி மாறினால்தான் எங்களைப் போன்ற நடிகைகளைப் பற்றிய தவறான பிம்பம் உடையும்.

அஞ்சலி விஷயத்துக்கு வருகிறேன். அவர் எந்த வயதில் நடிக்க வந்திருப்பார்... அவருக்கு இந்த சினிமாவைப் பற்றி என்ன தெரியும்... ஏதோ ஒரு டார்ச்சர் இருக்கப் போய்தான் வீட்டை விட்டு வெளியில் சென்றிருக்கிறார். குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டால்... எந்த பெண்ணாவது வீட்டை விட்டு ஓடிப் போவார்களா? எது எப்படி இருந்தாலும், அது அவருடைய சொந்த விஷயம். அதை அவரே பார்த்துக் கொள்வார். என்றாலும், இனிதான் அவர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.''

-  வே.கிருஷ்ணவேணி

அபலை ‘அஞ்சலிகள்!’

இயக்குநர் களஞ்சியம் என்ன சொல்கிறார்?

''அஞ்சலி பிரச்னையால் என் பெயரை களங்கப்படுத்தும் இந்த சூழ்ச்சிக்குப் பின் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இணையதளத்தில் பலரும் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டுஇருக்கிறார்கள். உண்மையில் தமிழ்ப் பெண்களை கதாநாயகியாக்க விரும்பும் இயக்குநர்களில் நானும் ஒருவன். மேலும், எல்லா துறைகளிலும் பெண் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதையும், ஆணாதிக்கக் கட்டுப்பாட்டில் இருப்பத்தையும் முற்றிலும் எதிர்ப்பவன் நான். ஆனால், என்னையே ஒரு ஆணாதிக்கவாதியாக சித்திரித்துப் பேசுவது அபத்தம். அஞ்சலி பிரச்னை அவரின் குடும்ப விஷயம். அதில் வெளியாளான நான் அடிபடுவது எந்த வகையில் சரி? விடுங்கள்... தேவயானியையும் என்னையும் இணைத்து இந்த மீடியாக்கள் கிளப்பாத வதந்தியா? ஒருவழியாக அவருக்கு திருமணம் முடிந்தபின்தான் என்னை விட்டார்கள். அதேபோல இனி அஞ்சலியும் திருமணம் செய்துகொண்டு சென்றபின்தான் என்னை விடுவார்கள் போல!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism