பரிசு:

200

அறிவிப்பை பார்த்ததுமே... அசத்திவிட்டனர் நம்முடைய தோழிகள்!

''வாம்மா, அவள் விகடன் தோழியே! உன்னைத்தான் தேடிக்கிட்டிருந்தேன். யாராவது 'பெரிய லீவு’ அனுபவங்களைப் பற்றி கேட்க மாட்டாங்களா என்று ஏங்கிக் கொண்டே இருந்த நிலையில், 'என்கிட்டே சொல்லுங்க!’ என்றபடி பக்கத்தில் வந்து உட்கார்ந்துவிட்டாயே... இது போதாதா!'' என்றபடி வாசகிகள் குவித்திருக்கும் சம்மர் ஆட்டோகிராஃபிலிருந்து ஒன்று இங்கே இடம் பிடிக்கிறது...

எங்க தாத்தா மிராசுதார். எங்க பண்ணையில் வேலை செய்யும், ஒரு தம்பதி பரம்பரையாக இருப்பவர்கள். நாங்கள் அங்கே போன உடனேயே தோட்டத்துக்கு அழைத்துப் போய் தென்னை மரத்தில் மிகச் சுலபமாக ஏறி சுவையான இளநீர் பறித்துப் போடுவார்கள் (இப்போது அந்தத் தம்பதிக்கு வயது 80-90). பைசா செலவில்லாமல், குளத்திலேயே நீச்சல் கற்றுக் கொடுப்பார்கள் (என் பேத்தி இப்போது சம்மர் கேம்ப்பில் 1,500 ரூபாய் பணம் கட்டி மூன்று வாரங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்கிறாள்)!

ஒரு நாள் எல்லோரும் வீட்டு திண்ணையில் படுத்திருந்தோம். நடு இரவு... ஓர் உருவம் திண்ணைக்கு கீழே பதுங்கிப் பதுங்கி வந்தது. சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட நான் (எட்டு வயது) பயத்துடன் லேசாக கண் திறந்தேன். பண்ணையில் வேலை செய்யும் அந்தப் பெண்மணியின் தம்பி மெள்ள வந்து என் காதிலிருந்த பவுன் தோடை கழற்றிக் கொண்டான். சற்றுத் தள்ளி என் மாமா பெண்ணின் தோடையும் கழற்றிக் கொண்டு ஓடினான். அவன் போன பிறகே உள்ளே போய் அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன். ஒரே அமர்க்களம்.

பொழுது புலர்ந்ததுதான் தாமதம்... தம்பியை அழைத்துக் கொண்டு வந்த அந்தத் தம்பதி, தாத்தா காலில் வந்து விழுந்து மன்னிப்பு கேட்க... கோபக்கார தாத்தா என்ன செய்யப் போகிறாரோ என்று வீடே நடுங்கியது. ''ஊர்ல இப்படி தப்பு பண்ணா கொடுக்கற தண்டனையை (மரத்தில் கட்டி அடிப்பார்களாம்) இவனுக்கும் கொடுங்க எஜமான்'' என்று அந்தத் தம்பதி கலங்கியபடியே சொன்னார்கள். என்ன நினைத்தாரோ தாத்தா... ''போனால் போகட்டும். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டான். சின்ன வயது. தண்டனையெல்லாம் வேண்டாம். நம்ம பண்ணையிலேயே வேலை செய்யட்டும்'' என தீர்ப்பளித்தார்!

எங்கள் தாத்தா காலம் முடியும் வரை உண்மையான பண்ணையாளாக அவர் இருந்தார். இப்போதுகூட கிராமத்துக்கு நாங்கள் போனால்... இளநீர் குலையோடு முகத்தில் ஏராளமான சிரிப்புடன் வரவேற்க தவறுவதில்லை அந்தத் தம்பதி!

- மாலதி நாராயணன், பெங்களூரு

இந்தப் பகுதிக்கு உங்கள் அனுபவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
'சம்மர் ஆட்டோகிராஃப்’, அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2
இ-மெயில்: aval@vikatan.com