Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

ரீடர்ஸ், ஓவியங்கள்: ஹரன்

குட்டீஸ் குறும்பு!

ரீடர்ஸ், ஓவியங்கள்: ஹரன்

Published:Updated:
குட்டீஸ் குறும்பு!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

150  

##~##

கடவுளுக்கே 'கால்’!

குட்டீஸ் குறும்பு!

குடும்பத்துடன் ஊரில் உள்ள குலத்தெய்வ கோயிலுக்குச் சென்றிருந்தோம். மாலை பூஜை முடிந்ததும், பூசாரி 'சாமி ஆடி’ அருள்வாக்கு சொல்வார். அதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். நான்கு வயதான என் மகன் பிரபு, ''வீட்டுக்குப் போகலாம்'’ என நச்சரிக்க ஆரம்பித்தான். ''இருடா இன்னும் சாமி வரல (பூசாரியின் மேல் வரும் சாமி). வந்ததும் கும்பிட்டுப் போகலாம்'' என்றேன். உடனே அவன், ''எவ்வளவு நேரம்தான் வெயிட் பண்ணுவீங்க? அதான் எல்லோரும் மொபைல் வெச்சிருக்கீங்கள்ல... சாமிக்கு ஒரு போன் போட்டு லேட்டாகுதுனு வரச்சொல்லுங்க!'' என்று ஆர்டர் போட, காத்திருந்த பக்தர்கள் அனைவரும் அந்த சுட்டியின் பேச்சில் சிரித்துவிட்டனர்!  

- ரேவதி ரமேஷ், தூத்துக்குடி

ரைட் ஆன்ஸர்... லெஃப்ட் ஆன்ஸர்!

என்னுடைய மூன்று வயதுப் பேரன் ஆதித்யாவுக்கு இடது, வலது கை சொல்லிக் கொடுத்துக்

குட்டீஸ் குறும்பு!

கொண்டிருந்தேன். அப்போது, ''அந்தப் பக்கம் ரைட், இந்தப் பக்கம் லெஃப்ட்... சரியா?'' என்று அவனும் சமர்த்தாக கற்றுக் கொண்டான். அன்று தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளரிடம் நிகழ்ச்சியை நடத்துபவர், ''இது ரைட் ஆன்ஸராக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார். அந்தக் கேள்விக்கான பதில் எனக்குத் தெரியும் என்பதால், ''இல்ல... இது தப்பு'' என்றேன். உடனே என் பேரன், ''அப்போ இது ரைட் ஆன்ஸர் இல்ல, லெஃப்ட் ஆன்ஸர்!'' என்று சொல்ல, வீடே சிரித்துவிட்டது. பிறகு, அவனிடம் 'ரைட்’டுக்கு எதிர்ச்சொல் 'ராங்’ என்று சொல்லிப் புரியவைத்தோம்!

-  ரமா ஜெயராமன், ஸ்ரீரங்கம்

குட்டீஸ் குறும்பு!

கேட்டாளே ஒரு கேள்வி!

எட்டு வயதாகிறது என் பெரிய வாண்டுக்கு. பேருந்துக்குள் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள், திருக்குறள் என அனைத்தையும் தமிழ் பழக்கத்துக்காக அவளை வாசிக்கச் சொல்வேன். ஒரு முறை அப்படி 'திருடர்கள் ஜாக்கிரதை’ என்பதை வாசித்தவள், ''ஏம்மா... திருடர்கள் இருக்காங்கன்னா, 'மக்களே ஜாக்கிரதை’னுதானே போடணும்? இவங்க என்ன திருடர்களை ஜாக்கிரதையா இருக்கச் சொல்றாங்க!'' என்று கேட்டதுடன், பதில் சொல்லச் சொல்லி ஒரே நச்சரிப்பு வேறு. ''இல்லம்மா... யாராச்சும் திருடினா இந்த பஸ்ல இருக்கிறவங்க எல்லோரும் அவனை உதைச்சு, போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துடுவோம். அதனால, 'திருடர்களே... திருடாம ஜாக்கிரதையா இருங்க!’னு சொல்லி அப்படிப் போட்டிருக்காங்க!'' என்று பதிலுடன் ஒரு

குட்டீஸ் குறும்பு!

பெருமூச்சும் விட்டுக்கொண்டேன் நான். குட்டிகள் ரூம் போட்டு யோசித்து கேள்வி கேட்டால், பெற்றோர் நாம் மண்டபமே பிடித்தல்லவா யோசித்து பதில் சொல்ல வேண்டியிருக்கிறது!

- ஜெ.கே.பிரியா, அயனாவரம்

பலே பதில்!

என் தோழியின் மகனுக்கு மூன்று வயதாகிறது. அவன் அப்பா எப்போது வெளியில் புறப்பட்டாலும், 'விடமாட்டேன்' என்றே அழுவான். அவர் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்வான். ஒருநாள், ''ஏண்டா, அப்பா வேலைக்குப் போகாம உன் கூடவே இருந்தா எப்படி சாப்பிடுவ?'' என்று நான் கேட்டேன். உடனே அவன், ''அப்பாகூட உட்கார்ந்து வாயால சாப்பிடுவேன்!'' என்று சீரியஸாக சொல்ல, நாங்கள் அனைவரும் சிரித்துவிட்டோம்!

- வெ.கிருஷ்ணவேணி, ஓசூர்