Published:Updated:

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

உங்கள் குழந்தையைப் பாதுகாக்க...அவேர்னஸ்

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

உங்கள் குழந்தையைப் பாதுகாக்க...அவேர்னஸ்

Published:Updated:
##~##

ஒரு விஷயம், நமக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால், எதிரிலிருக்கும் குழந்தையும்கூட அந்த விஷயத்தின்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் பலருடைய வழக்கமாக இருக்கிறது! ஆனால், இது எந்த அளவுக்கு சரி? குறைந்தபட்சம், அந்த விஷயத்தைப் பற்றி

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

முன்கூட்டியே விவாதித்துவிட்டு எதிர்பார்ப்பதுதானே சரியானதாக இருக்கும்? நமக்குத் தெரிந்துவிட்ட விஷயம், அவர்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக அநியாயத்துக்கு கோபப்படுவது எத்தனை அபத்தம்?

இப்படி குழந்தைகள் மற்றும் அவர்களுக்கான உலகம் பற்றி நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்... 'ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்' என்கிற தலைப்பில் இடம்பிடித்திருக்கிறது. இனி இதழ்தோறும், இப்படிப்பட்ட யோசனைகள் தொடர்ந்து வெளியாகும். வீட்டில் அனைவரின் கண்களும் படும் இடத்தில் ஒட்டி வைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுடன் விவாதியுங்கள்... சகலரும் பலன் பெறுங்கள்!

'இந்தியாவில் பெண்களுக்கு... பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இ

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

ல்லை' என்பது தினம் தினம் யாராவது ஒருவரின் வலியோடு நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

பொம்மைகளைப் பிடிக்கும் பிஞ்சுகள்கூட, ஈவு இரக்கம் இல்லாமல் பாலியல் வக்கிரன்களால் சிதைக்கப்படுகிறார்கள். 'அப்பாடா, இன்னிக்கு எந்தப் பிரச்னையும் என் குழந்தைக்கு வரவில்லை... தப்பித்தேன்' என்று பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், இரவு படுக்கைக்குப் போகும்முன்... நிம்மதி பெருமூச்சு விடும் அளவுக்கு பதற்றம் அதிகரித்தபடியே இருக்கிறது.

''எப்படித்தான் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்த்தெடுக்கப் போகிறோமோ..?'' என்று கவலையோடு பேசும் தாய்மார்களுக்கு, இங்கே விழிப்பு உணர்வு ஊட்டுகிறார்... சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல நிபுணர் டாக்டர் ஜெயந்தினி.

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

1. நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாத வயதில் இருக்கும் நான்கு அல்லது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம்... ஃபேஸ் டச் (முகத்தில் தொடுவது), அன் ஃபேஸ் டச் (முகம் தவிர பிற இடங்கள் எல்லாம்) பற்றி சொல்லிக் கொடுங்கள். 'உன் னோட கழுத்துக்கு கீழ யாரை யும் தொடவிடாதே. அப்படி யாராவது தொட்டா... அம்மா கிட்ட வந்து சொல்லணும்' என்று சொல்லி வையுங்கள்.

2. 'அம்மா... மாமா என்னை கண்ட இடத்துல தொடறார்' என்று குழந்தை உங்களிடம்

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

சொல்லும்பட்சத்தில், குடும்பத்தில் நம்பிக்கையானவரிடம் பேசி, இந்த விஷயத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை யோசியுங்கள். இங்கே பிரச்னையே உறவுக்குள்ளிருந்துதான் என்பதால்... விஷயத்தை மிகக்கவனமாக கையாள வேண்டும்.

3. டியூஷன் அனுப்புகிறீர்களா... ஆசிரியர், அவருடைய இடம், சூழல் பற்றியெல்லாம் விசாரித்து வைத்துக் கொள்ளுங்கள் 'நீ மட்டும் இன்னிக்கு தனியா இருந்து படிச்சுட்டு போ' என்று சொன்னால் 'அம்மா திட்டுவாங்க சார்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிடச் சொல்லுங்கள். தனியாக ஸ்பெஷல் கோச் என்பதெல்லாம் வேண்டவே வேண்டாம். தேவை எனும் பட்சத்தில், வீட்டுக்கு வரும் ஆசிரியராக பாருங்கள். 'டியூஷனைவிட எனக்கு நீ முக்கியம்' என்று உங்கள் வளர்ந்த பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள்.

4.

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

து சம்மர் நேரம். பிள்ளைகளை தனியாக விளையாட விடாதீர்கள். பக்கத்து வீட்டில் அல்லது குழந்தைகளின் நண்பர்கள் வீட்டில் பெண்கள் இருந்தால் மட்டுமே அங்கு விளையாட அனுப்புங்கள். முடிந்தவரை உங்கள் வீட்டு முன்பாக கூட்டமாக விளையாடினால் மட்டுமே விளையாட அனுமதியுங்கள்.

5. ஸ்கூல் வேன் அல்லது பஸ்ஸில் உங்கள் குழந்தை பயணித்தால், கடைசி ஸ்டாப்பில் இறங்கும் வரை காத்திருக்காமல், அதற்கு முந்தின ஸ்டாப்பிங்கில் சென்று நின்று, அழைத்து வந்துவிடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால்... சைக்கிளில் அனுப்புங்கள். நண்பர்களோடு கூட்டமாக வரச் சொல்லுங்கள்.

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

6. திடீரென பள்ளி விடுமுறை அறிவித்துவிட்டால், 'அம்மாவுக்கு டீச்சர் கால் பண்ணுவாங்க. நான் கண்டிப்பா வந்திடுவேன். அதுவரைக்கு டீச்சர் பக்கத்துல உட்கார்ந்திருக்கணும்’ என்று அடிக்கடி சொல்லி வையுங்கள். டீச்சரிடம் உங்கள் செல்போன் எண்ணை கொடுத்து வையுங்கள்.

7. குரூப் ஸ்டடி, நைட் நண்பர்கள் வீட்டில் தங்கப் போகிறேன் என்பதற்கெல்லாம் சம்மதிக்காதீர்கள். தேவை இருக்கும்பட்சத்தில் அவர்கள் வீட்டில் பெண்கள் இருந்தால் மட்டும் அனுப்புங்கள்.

8. வளர்ந்த பிள்ளைகள் ரோட்டில் நடந்து வரும்போது, யாராவது பின் தொடர்வதாக நினைத்தால்... அருகில் உள்ள நர்ஸிங் ஹோம், பெட்ரோல் பங்க், கூட்டமான பஸ் ஸ்டாப் என சென்று உட்கார்ந்துவிட வேண்டும். அங்கிருப்பவர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, பெற்றோருக்கு போன் போட்டு வரச்சொல்லலாம்!

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்!

9. கல்யாணம், சுபநிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு குழந்தையை அழைத்துப் போகும்போது அவர்கள் மீது ஒரு கண் வைத்து கொண்டே இருங்கள்.

10. உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் துவங்கி, தண்ணீர் கேன் போட வருகிறவர்கள் வரை அத்தனை பேரும் உங்கள் பிள்ளைகளிடம் எப்படி பழகுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். சில வீட்டில், இவர்கள்தான் குழந்தைகளிடத்தில் தவறான வெஃப்சைட் உள்ளிட்ட தகவல்களையெல்லாம் பரிமாறுவது, தவறான புகைப்படங்களைக் காட்டுவது என்பது போன்ற வேலைகளை செய்கிறார்கள்... உஷார்!

11. குழந்தைகளைக் கொஞ்சு கிறவர்கள், மடியில் தூக்கி வைக்கிறவர்கள் மீது எல்லாம் ஒரு கண் வையுங்கள். அவர்கள் நடத்தையை தொடர்ந்து கண்காணியுங்கள். உங்கள் மனதுக்கு அவர்கள் சரியாகப் படவில்லையென்றால், அத் தகையோரிடம் குழந்தையைக் கொடுக்காதீர்கள். இல்லை என்றால், நீங்கள் அருகில் இருக்கும்போது மட்டும் கொடுங்கள்.

12. கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் விளையாடும்போது பாத்ரூம் போக தனியாக ஒதுங்குவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் கயவர்களிடம் சிக்குகிறார்கள். 'உனக்கு பாத்ரூம் வந்துச்சுனா, வீட்டுக்குத் தான் வரணும். பாத்ரூம் போய்ட்டு நீ எவ்வளவு நேரம் னாலும் விளையாடு... தப்பில்ல. கண்டிப்பா வீட்டை தவிர வேற எந்த இடத்திலேயும் பாத்ரூம் போகக் கூடாது' என்று சொல்லி வையுங்கள்.

- ம.பிரியதர்ஷினி