நம் பெண்களுக்கு தொழில் நம்பிக்கை யூட்ட 'அவள் விகடன்', திருச்சி ஏ.எம் ஃபேன்ஸி நிறுவனம் இணைந்து தமிழகமெங்கும் நடத்தி வரும் 'நீங்களும் தொழிலதிபர்தான்’ பயிற்சிப் பட்டறை இம்முறை திருச்சியில்! வெக்காளி அம்மன் கல்யாண மகாலில் ஏப்ரல் 28 அன்று நடைபெற்ற நிகழ்வில்... அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

'த்ரீ கார்னர் மாலை’ செய்வதற்கான செய்முறை, படிப்படியாக கற்றுத்தரப்பட, ஆரம்பத்தில் சிறிது சிரமமாக உணர்ந்த வாசகிகள், பயிற்றுனர்களின் தெளிவான வழிகாட்டலால் சீக்கிரமே விரல் நுணுக்கம் வரப்பெற்றனர். இறுதியாக, அந்த மாலையை செய்து முடித்தபோது, 'இது நான் செஞ்சதா?!’ என்று வாசகிகளுக்கு ஆச்சர்யமும் சந்தோஷமும்!

''இனி, என் மகளுக்கும் பேத்திக்கும் நானே ஃபேஷன் நகைகள் செய்து கொடுத்து அசத்தப் போறேன்!'' என்றார் வனஜா சந்தோஷத்துடன்.

சத்யா, ''அவள் விகடனோட தீவிர வாசகி நான். எல்லா ஊரிலும் பயிற்சிப் பட்டறை நடத்தும்போது, நம்ம ஊருக்கு எப்ப வருவாங்கனு காத்துட்டு இருந்தேன். நெடுநாள் ஆசை நிறைவேறிடுச்சு. என்னாலும் கை வேலைப்பாடு செய்ய முடியும்னு நம்பிக்கை விதையை விதைச்சுருக்கு அவள் விகடன். அதை மரம் ஆக்கறது... என்னோட பொறுப்பு!'' என்றார் நம்பிக்கையுடன்.

''நேத்து நைட் 1.30 மணிக்கு போன் பண்ணி பதிவு பண்ணி இங்க வந்திருக்கேன்...'' என்று கர்ப்பிணியான ஹேமா பரவசப்பட,

''இன்னிக்கு பெங்களூருவில் இருக்க வேண்டிய நான்... டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டு இங்க வந்தேன். அதுக்குப் பலனா ஒரு தொழிலை கத்துக்கிட்ட நிறைவும் நம்பிக்கையும் வந்திருக்கு. நாளைக்கே வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்!'' என்றார் சுஜாதா.

''ஏற்கெனவே இத்தகைய பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட பெண்களில் பலரும் இப்போது கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர்'' என்கிற தகவலை ஏஎம். ஃபேன்ஸி உரிமையாளர் அப்துல் ஹமீது பகிர்ந்துகொள்ள... பங்கேற்ற வாசகிகளின் மனதில் கரைபுரண்டது நம்பிக்கையும் உற்சாகமும்!

- பி.விவேக் ஆனந்த்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்