அப்பாவுக்கு தூத்துக்குடியில வேலை. முழுப்பரீட்சை முடிஞ்ச அடுத்த நாளு... சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்ட குக்கிராமத்து அத்தை வீட்டுல விட்டுருவாங்க. வெளிநாட்டுக்குப் போற மாதிரி தெரு முழுக்க சொல்லிட்டுக் கிளம்புவோம்!

சொந்த ஊருல நெறைய சொந்தபந்தம். அதனால போற சமயத்துல சாப்பாட்டுக்கு பிரச்னை இல்ல. எங்க அத்தை, ''இதப்பாருங்க மதினி... இன்னிக்குப் பாத்து உங்க அண்ணன் புளித் தண்ணி வெச்சு, பொரிகடலை துவையல் அரைச்சா போதும்னு சொல்லிட்டாங்க. திடீர்னு ஊர்ல இருந்து, பிள்ளைகளோட அண்ணன் வந்திருக்காரு. உங்க வீட்டுல கத்திரிக்காய் புளிக்கறியா..?

சந்தானம் சித்திகிட்ட முருங்கைக்காய் சாம்பார் வாங்கிட்டேன். வீட்டுல இருக்குற முட்டையை அடை சுட்டுக்குறேன்''னு வீடு வீடா போய் சாப்பாடு வாங்கிட்டு வந்துடுவாங்க.

இப்ப மாதிரி அப்ப யாரும் அளவா பொங்குறதில்ல. எந்த நேரம் போனாலும் தண்ணி சோறு - நார்த்தங்கா ஊறுகாய் - உறை ஊத்தி வெச்ச மோர் இது மூணும் இருக்கும். விருந்து கிடைக்கலை னாலும், நிச்சயமா வயிறு வாடாது.

வாண்டுகள் எல்லாரும் பாட்டியோட குளத்துக்கு குளிக்கப் போவோம். பாட்டியை படுத்தி எடுக்குறதுல எங்களுக்குள்ள அவ்வளவு ஒற்றுமை. அந்த செம்மண் தண்ணியில துவைக்குற துணி எப்படி அம்புட்டு வெளுப்பாகும்னு இப்பகூட புரியல. குளத்துல முளைச்சுக் கிடக்கிற கொடுப்பக்கீரையை புடுங்கிட்டு வந்து, பொரியல் வெக்கச் சொல்லி சாப்பிடுவோம். நாங்க பறிச்ச கீரைங்கறதால ருசி தூக்கலாவே இருக்கும்!

முழுப்பரீட்சை லீவு, வயல்ல உளுந்து பறிக்கிற நேரம். புள்ளகுட்டிக எல்லோரும் வயக்காட்டுக்கு போவோம். நாலு பெட்டி உளுந்து பறிச்சா... ஒரு பெட்டி உளுந்து கூலியா தருவாங்க. அதுல எங்க அத்தைய உளுந்து சோறு பொங்கித் தரச் சொல்லுவோம். தொட்டுக்க... மாமாகிட்ட காசு தாராளமா புழங்குனா... கறிக்குழம்பு, இல்லாட்டி கருவாட்டுக் குழம்பு, ஒண்ணுமே இல்லாட்டி புளிக்குழம்பு.

லீவுல எப்படியும் ஒரு பொண்ணு வயசுக்கு வந்திருக்கும். அதுகூட சேர்ந்து பல்லாங்குழி, தாயம் விளையாடுவோம். தெரியாம அவளைத் தொட்டுட்டா, ஒற்றர் படை காட்டிக்கொடுக்க, 'தீட்டு'னு சொல்லி குளிச்சதுக்கு அப்புறம்தான் வீட்டுக்குள்ள விடுவாங்க.

லீவு முடியறப்போ, ஊர் வெயிலை எல்லாம் ஒடம்புல வாங்கி கறுத்துப் போயிருப்போம். ஆனாலும், அடுத்த வருஷ சித்திரை வெயிலுக்காக ஏங்கிக்கிட்டே பஸ் ஏறும் மனசு!

- எஸ்.செல்வசுந்தரி, எடமலைப்பட்டிபுதூர்

பின்குறிப்பு: 'புளித்தண்ணி' என்பது திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் வைக்கப்படும் எளிய குழம்பு. புளியைக் கரைத்து, மிளகாய் கிள்ளிப்போட்டு, வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளித்து வைப்பார்கள். தண்ணியாகத்தான் இருக்கும். அதற்கு பொட்டுக்கடலை துவையல் அரைப்பார்கள். பொட்டுக்கடலையை திருநெல்வேலிப் பக்கம் 'பொரிகடலை' என்றே சொல்வார்கள். முட்டை ஆம்லெட்டைதான் 'முட்டை அடை' என்பார்கள். 'கொடுப்பக்கீரை' என்பது... குளத்தில் முளைக்கும் கீரை வகைகளில் ஒன்று!

இந்தப் பகுதிக்கு உங்கள் அனுபவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
'சம்மர் ஆட்டோகிராஃப்’, அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2