ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

பிரேயருக்கு வந்த பாம்பு!

அன்று, சர்ச்சுக்குப் போயிருந்த என் கணவர் வீடு திரும்ப தாமதமாகிக் கொண்டே இருந்தது. நானும் என் ஆறு வயது மகன் ஜெய்சனும் அவர் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். கணவர் வந்ததும், ஃபாதர் வீட்டில் பாம்பு ஒன்று நுழைந்துவிட்டதாகவும், அதை தேடிப்பிடித்து அடிக்கவே நேரமாகிவிட்டது என்றும் தாமதத்துக்குக் காரணம் கூறினார். அதைக் கேட்ட என் சுட்டிப் பையன், ''அப்பா... அந்தப் பாம்பு ஃபாதர்கிட்ட பிரேயர் பண்ண வந்திருக்கும். அதை ஏன் நீங்க அடிச்சீங்க?'' என்று கேட்க, எனக்கும் என் கணவருக்கும் அவன் குறும்புப் பேச்சால் சிரிப்போ சிரிப்பு!

- யோ.ஜெயந்தி, குனியமுத்தூர்

பவர் சேவிங் டைம்!

என் குட்டிப் பேரன் தேஜஸுக்கு அன்று பள்ளி விடுமுறை. விளையாட, அரட்டை அடிக்க, டி.வி. பார்க்க என வீடு கோலாகலமாக இருந்த நேரம் - மின்சாரத் தடை. நாங்கள் எல்லோரும் 'அடடா’, 'சேச்சே’, 'இப்படித்தான் சரியான சமயத்தில் கழுத்தறுப்பாங்க’ என விதவிதமாக புலம்பினோம். தேஜஸ் தன் பிள்ளைக் குரலில், ''இது பவர் சேவிங் டைம். சேமிக்கிறது நல்லதுதானே. அதனால புலம்பக் கூடாது!'' என்றானே பார்க்கலாம்... அத்தனைபேரும் அவன் மதியில் மயங்கிவிட்டோம்!

- உஷாதேவி, சென்னை-24

நிரந்தர மொட்டை!

மூன்று வயதாகும் என் சின்னப் பெண்ணுக்கு திருப்பதியில் மொட்டை அடித்து, தரிசனத்துக்காக வரிசையில் நின்றிருந்தோம். அப்போது முன்னால் வழுக்கை தலையோடு நின்றிருந்தவரைக் காட்டிய என் சுட்டி, ''அய்யய்ய... இந்த அங்கிளுக்கு சரியாவே மொட்டை அடிக்கல!'' என்று சொல்ல, எங்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. நாங்கள் அவளை அதட்ட... அந்த அன்பரோ, ''அங்கிளுக்கு இது நிரந்தர மொட்டைம்மா!'' என்று குழந்தையைக் கொஞ்சி சிரிக்க, பதற்றம் போய் நாங்களும் சிரித்தோம்!

- ப்ரியா லட்சுமணன், திருவண்ணாமலை

மாமனாருக்கு ரெண்டாம் கல்யாணம்?!

என் ஐந்து வயதுப் பெண்ணின் வகுப்பாசிரியையிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ''உங்க மாமனார், ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறதா உங்க மக சொல்றா. என்ன விஷயம்..?'' என்றார் சீரியஸாக. நானோ அதைக் கேட்டு சிரிக்க, அவருக்கோ மேலும் குழப்பம். ''என் மாமனாருக்கு 60 வயது. சஷ்டியப்த பூர்த்தி திருமணம் செய்யப்போறார். அதைத்தான் ரெண்டாவது கல்யாணம்னு சொல்லியிருக்கா!'' என்றதும், இப்போது ஆசிரியையும் என்னோடு சேர்ந்து சிரித்தார்!

- ஆர்.மதுரம் ராம்குமார், ஸ்ரீரங்கம்