Published:Updated:

ஏஞ்சலினா... ஓர் எச்சரிக்கை மணி!

அவேர்னஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 87% சதவிகிதம் இருந்த காரணத்தினால், தன்னுடைய இரு மார்பகங்களையும் மருத்துவர்களின் அறிவுரைப்படி, அறுவை சிகிச்சை மூலம் நீக்கிக் கொண்டுவிட்டார்...'

- இன்றைக்கு உலக அளவில் பரபரப்பாக பேசப்படும் செய்தி இதுதான். இந்தச் செய்தி... உலகம் முழுக்க இருக்கும் கோடிக்கணக்கான பெண்களை அதிர வைத்திருக்கிறது!

''என் அம்மா பல வருடங்களாக மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டுதான் காலமானார். இதனால், அவருடைய அன்பையும், அரவணைப்பையும் என்னால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், மரபணுக்களின் அடிப்படையில் எனக்கும் மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறவே, 'பிஆர்சிஏ டெஸ்ட்' செய்தேன். இதில், எனக்கும் மார்பகங்களில் புற்றுநோய் தாக்க 87% வாய்ப்புகள் இருப்பது தெரிந்ததால், மார்பகங்களை எடுத்து விட்டேன். என் குழந்தைகளுக்கு ஓர் அன்னையாக என்னுடைய அன்பும், அரவணைப்பும் முழுமையாக தேவை என்பதற்காகவே இந்தக் கடுமையான முடிவை எடுத்தேன். மார்பகங்களை இழந்ததால், நான் எந்த விதத்திலும் குறைந்து போனதாக நினைக்கவில்லை!'' என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார் 37 வயது ஏஞ்சலினா.

ஏஞ்சலினா... ஓர் எச்சரிக்கை மணி!

இதுபற்றி சென்னையைச் சேர்ந்த பிரபல மார்பக புற்றுநோய் நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

''நம்ம நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான பெண்கள் கவலைப்படுகிற ஒரு விஷயம், மார்பகப் புற்றுநோய் வந்தால் மார்பகங்களை எடுக்க வேண்டும் என்பது பற்றிதான். உண்மையில் மார்பகப் புற்றுநோய் இருக்கிற பெண்கள்கூட அதை தெளிவாக கடந்து வந்து விடுகிறார்கள். ஆனால், மீடியாக்களில் சொல்லப்படுகிற அறிகுறிகளை படித்து விட்டு... எனக்கும் அந்த நோய் இருக்கிறதா என்று குழம்பி தவிப்பவர்களைத்தான் எங்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. எனவே மார்பகப் புற்றுநோய் பற்றி முழுமையாக வாசகிகளுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.'' என்றவர்... மார்பகப் புற்றுநோய், அதற்கான காரணிகள், அதன் அறிகுறிகள், மார்பக சுய பரிசோதனை என அனைத்தையும் விரிவாகப் பேசினார்.

அவையெல்லாம்...
அடுத்த இதழில்
- ம.பிரியதர்ஷினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு