Published:Updated:

கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்... காப்புரிமை பெறுவது எப்படி?

பிஸினஸ் கேள்வி பதில்ஹெல்ப் லைன்

கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்... காப்புரிமை பெறுவது எப்படி?

பிஸினஸ் கேள்வி பதில்ஹெல்ப் லைன்

Published:Updated:
##~##

 வாருங்கள்... வழிகாட்டுகிறோம் 

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது.  இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி.ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தொழில், யுக்தி, லாபம் என என்னிடம் நிறைய புதுமையான கண்டுபிடிப்புகள், சிந்தனைகள் (Creative ideas)  உள்ளன. அவற்றுக்கு காப்புரிமை பெறுவது, செயல் வடிவமாக்குவது போன்றவற்றுக்கு வழிகாட்டுங்களேன்...''

- மலர்கொடி, தாளவாடி

''பொதுவாக, கண்டுபிடிப்புகள் தொடர்பான அனைத்துமே 'டிஸ்கவரி' (Discovery), இன்வென்ஷன் (Invention), இன்னோவேஷன் (Innovation) என்ற மூன்று பிரிவுகளில்தான் அடங்கும்.

டிஸ்கவரி: உங்கள் புதிய கண்டுபிடிப்பு ஏற்கெனவே இயற்கையாகவோ, சுயமாகவோ அமைந்திருந்து, பயன்பாட்டில் இருக்கும்பட்சத்தில்... நீங்கள் உங்கள் கண்டுபிடிப்பாக உரிமை கொண்டாட முடியாது.

இன்வென்ஷன்: எந்திரம், வழிமுறை, உற்பத்தி செய்யும் முறை, நிர்வகிக்கும் முறை என முதன் முதலாக ஒன்றை கண்டுபிடிப்பது.

இன்னோவேஷன்: ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள் அல்லது முறையில் புதுமை யைப் புகுத்துவது. உதாரணமாக, தொலை பேசியை கைபேசியாக்கும் புதிய சிந்தனை.

கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்... காப்புரிமை பெறுவது எப்படி?

உங்கள் சிந்தனை, கண்டுபிடிப்பு மற்றவர்களுக்கு உபயோகப்படும் வகையில் அமைந்தால்... அதற்கு நீங்கள் காப்புரிமை (Patent)  பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் மற்றவர்கள் உங்கள் கண்டுபிடிப்பை காப்பியடிப்பதையோ, உரிமை கொண்டாடுவதையோ தடுக்கலாம். இதைத்தான் 'அறிவுசார் சொத்துரிமை' (IPR -Intellectual Property Rights) என்பார்கள்.

உங்கள் கண்டுபிடிப்பை, உங்களுடைய சொத்தாக மாற்றி, அந்த உரிமையை விற்க என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.  

கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்... காப்புரிமை பெறுவது எப்படி?

உங்கள் கண்டுபிடிப்பை காப்புரிமை சட்டத்தின்படி பதிவு செய்யலாம் (Patent).

கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்... காப்புரிமை பெறுவது எப்படி?

 உற்பத்திப் பொருட்களின் பெயர், குறி முதலியவற்றை வர்த்தகச் சின்னமாக (Trademark) பதிவு செய்யலாம்.

கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்... காப்புரிமை பெறுவது எப்படி?

 கதை, கருத்து, சாஃப்ட்வேர் என உங்களால் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கு 'ஆக்கியோன் உரிமை' (Copyright) பெற பதியலாம்.

கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்... காப்புரிமை பெறுவது எப்படி?

 உங்கள் உற்பத்தி பொருள், எழுதிய புத்தகம், வரைந்த படம் போன்றவற்றின் மென்பொருள் வடிவாக்கத்தையும் (Software Design) பதிவு செய்யலாம்.

கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்... காப்புரிமை பெறுவது எப்படி?

 ஒரு பொருளை ஒரே ஊரில் பல நாட்களாக உற்பத்தி செய்து வருபவர்கள், அப்பொருளுக்கு அந்த இடப்பெயர் அமையும்படி பதிவு (Geographical Indications Registry) பெறலாம்.

கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்... காப்புரிமை பெறுவது எப்படி?

 வர்த்தக ரகசியங்களையும் பதிவு செய்யலாம்.

உங்கள் புதிய எண்ணங்களை, கண்டுபிடிப்புகளை, யுக்திகளை மேற்கண்டவற்றின் அடிப்படையில் பதிவுபெற்ற பின், அவை உங்களுடையதாக மாறிவிடும். இதை நீங்கள் விற்பனை செய்யலாம், தொடர்ந்து ராயல்டிகூட பெறலாம். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், காப்புரிமை பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல. மாறாக, 'ஆக்கியோன் உரிமை' என்பதைப் பெறுவது வெகு சுலபம்.

காப்புரிமை பெற உங்கள் கண்டுப்பிடிப்பை 'ஐபிஆர்' (IPR) நிறுவனத்திடம் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் (Intellectual Property Office, GST ரோடு, கிண்டி, சென்னை 32. தொலைபேசி எண்: 044 - 22502081 - 84). இதற்குக் கட்டணம் உண்டு. பின் ஓர் ஆண்டுக்குள் கண்டுபிடிப்பு குறித்து விளக்கமாக விண்ணப்பிக்க வேண்டும். அந்நிறுவனத்தினர் ஆய்வு செய்து, அவர்களுக்கான செய்தி விவரக் குறிப்பில் பிரசுரிப்பார்கள். ஆட்சேபம் எதுவும் இல்லை எனில், காப்புரிமை கிடைக்கும் (இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த விவரக் குறிப்பைப் படித்து யாராவது ஆட்சேபித்தாலோ அல்லது தங்களுடையது என்று உரிய வகையில் நிரூபித்தாலோ உங்களுக்கு வழங்கப்பட்ட காப்புரிமை ரத்து செய்யப்படும்). பின் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். 20 ஆண்டுகள் கடந்த பின் உங்கள் காப்புரிமை காலாவதியாகிவிடும். ஆக்கியோன் உரிமை, ஒருவரின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடி யாவதுடன், அவர் இறந்த பின் அவரின் வாரிசுதாரர்களுக்கும் 60 ஆண்டுகள் வரை செல்லும்.

அடுத்ததாக, ஒருவரின் புதிய கண்டுபிடிப்பை செயல்வடிவமாக்க, அரசு நிறுவனங்கள் பல திட்டங்களுடன் காத்திருக்கின்றன. ஒருவரின் கண்டுபிடிப்பு சிறிய அளவில் இருந்தால், விஞ்ஞான தொழில்நுட்பக் கழகம் (DST - Department of Science and Technology)... TePP-Technopreneur Promotion Programme என்ற திட்டத்தின் கீழ் இந்தாண்டு முதல் இரண்டு லட்சம் வரை உதவித் தொகை அளிக்க உள்ளனர். குறுந்தொழிலுக்கு உதவும் கண்டுபிடிப்புகளை இதில் உருவாக்கலாம். இதுவே பெரிய அளவிலான கண்டுபிடிப்பாக இருந்தால், இதுவரை 15 லட்சமாக இருந்த உதவித் தொகையை, 20 லட்சமாக உயர்த்தி அறிவிக்க உள்ளனர்.

இது, மொத்த செலவில் 90%. 10% நீங்கள் கொண்டு வந்தால் போதும். உங்கள் முயற்சி வெற்றி பெற்ற பின், இதை உங்கள் அறிவுசார் சொத்துரிமையாக (IPR) மாற்றிக்கொள்ளலாம். 20 லட்சம் வரை உதவி செய்யும் அரசு, அதில் உரிமை கோராது. மேலும் உங்கள் கண்டுபிடிப்பை தொழிலாக மாற்றம் செய்ய தொழில்நுட்ப மேம்பாட்டு குழுமம் (Technology Development Board) மூலம் 50% வரை திட்ட முதலீட்டில் நிதி உதவி செய்யும். 50% வங்கியில் பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டம் தமிழகத்தில் நான்கு தொழில்நுட்ப வணிக காப்பகங்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. விவரங்களைப் பெற...

பொதுமேலாளர், வி.ஐ.டி. தொழில்நுட்ப வணிகக் காப்பகம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர். தொலைபேசி எண்: 0416-2243097, 2202301/2202303.

எக்ஸிகியூட்டிவ் டைரக்டர், திருச்சிராப்பள்ளி ரீஜினல் இன்ஜினீயரிங் காலேஜ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆன்டர்பிரனர்ஸ் பார்க், டிஆர்ஈசி-எஸ்டிஈபி, துவாக்குடி, திருச்சி 620 015. தொலைபேசி எண்: 0431-2500085, 2500967.

மேனேஜர், பிஎஸ்ஜி - சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆன்டர்பிரனர்ஸ் பார்க், பிஎஸ்ஜி - எஸ்டிஈபி, பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, பீளமேடு, கோயம்புத்தூர். தொலைபேசி எண்: 0422-4363300.

மேனேஜிங் டைரக்டர், டெக்னாலஜி பிஸினஸ் இன்குபேட்டர், யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ், தரமணி, சென்னை-600 113. தொலைபேசி எண்: 9840597373

இது தவிர, மத்திய அரசின் நபார்டு வங்கியும் கிராமப்புற புதிய கண்டுபிடிப்பு நிதி (Rural Innovation Fund) என்கிற திட்டம் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவி செய்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நபார்டு வங்கியின் துணைமேலாளரை அணுகி விவரங்களைப் பெறலாம்.

உங்கள் கண்டுபிடிப்பு மிகச் சிறிய அளவில் உள்ளது, அதற்காக நிறைய செலவு செய்ய முடியாது, மேலும் உங்களுக்கு பெரிய அளவில் கல்வி அறிவு கிடையாது என்றாலும் கவலை வேண்டாம். மத்திய அரசின் 'நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன்' (National Innovation Foundation), 'கிராஸ் ரூட் டெக்னாலஜிக்கல் இன்னோவேஷன் ஃபண்ட்' என்ற திட்டத்தின் மூலம் மிகச்சிறிய கண்டுபிடிப்புகளுக்கும் உதவி செய்வார்கள். முகவரி: National Innovation Foundation (India), Satellite Complex, Premchand Nagar, Ahmedabad-380 015.

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’ கேள்வி  பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை   600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism