Published:Updated:

இணையற்ற மனை முதலீடு!

இன்வெஸ்ட்மென்ட்

இணையற்ற மனை முதலீடு!

இன்வெஸ்ட்மென்ட்

Published:Updated:
##~##

''மண்ணுல போட்ட பணமும் பொன்னுல போட்ட பணமும் என்னிக்கும் கையைவிட்டுப் போகாதுனு சொல்வாங்க. அப்படிதாங்க ரெண்டு வருஷத்துக்கு முன்ன கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேர்த்து, 22 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கினேன். அதோட விலை இன்னிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்!''

- முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் சொல்கிறார் தேனி, கவிதா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''2012-ல் 40 ஆயிரத்துக்கு வாங்கின ரெண்டு சென்ட் மனை, இன்னிக்கு ஒரு லட்சத்தை தாண்டியிருக்கு. தவணை முறையில் மாதம் 450 ரூபாய் கட்டித்தான் இந்த நிலத்தை வாங்கிப் போட்டேன்''

- கண்களில் ஒளிமயமான எதிர்காலம் பளீரிடச் சொல்கிறார் தேனி, வித்யாதேவி!

இணையற்ற மனை முதலீடு!
இணையற்ற மனை முதலீடு!

''ஒரு கிரவுண்ட் நிலம், 70 லட்சத்துல ஆரம்பிச்சு மூணு கோடி வரைக்கும் விலைபோகுது சென்னையில. அதனால, சொந்த ஊரான திருநெல்வேலியில ரெண்டு வருஷத்துக்கு முன்ன 30 ஆயிரத்துக்கு பூமியை வாங்கினேன். இன்னிக்கு அஞ்சு மடங்கு ஒசந்து நிக்குது. நகைகளையெல்லாம் அடமானம் வெச்சு வாங்கினதுக்கு, இப்ப மண் மேல பலன்''

- மகிழ்ச்சி பொங்குகிறார் சென்னையில் வசிக்கும் கார்த்தி கீதா.

'சேமிப்பு' என்றதும், தங்கத்தில் முதலீடு செய்வதையும் வங்கியில் சேமிப்பதையும்தான் பெண்கள் முதன்மையாக வைத் திருப்பார்கள்.  இவை இரண்டைக் காட்டிலும் பலமடங்கு விர்ரென்று லாபம் தருவது... வீட்டு மனையில் போடும் முதலீடு என்பதுதான் உண்மை! பெண்களும் இதை உணர்ந்திருப்பதால்... சிறுகச்சிறுக சேரும் பணத்தை, நிலங்களில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டுதான்... மேலே இருக்கும் கவிதா, வித்யாதேவி மற்றும் கார்த்தி கீதா!

வீட்டு மனை வாங்குவது, அதில் முதலீடு செய்வது ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள... 'ஜெனிசன் புரமோட்டர்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த சங்கர் ஜெனிசனைச் சந்தித்தோம். அவர் நம்மிடம், ''கொடுக்கிற தெய்வம், ஒரே ராத்திரியில் கூரையைப் பிய்த்துக்கொண்டு ஒருபோதும் கொடுக்கப் போவதில்லை. எனவே, நாம்தான் திட்டமிட்டு செயல்பட்டு, நினைத்ததை சாதிக்க வேண்டும். இன்றைய சூழலில் பெரும்பாலான குடும்பங்கள், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பணம் சேர்த்துதான் நிலத்தை வாங்குகின்றன. மாதம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு குடும்பம், மொத்தமாக பணம் கட்டி மனை வாங்குவது சாத்தியமில்லாத விஷயம். அவர்களுக்கெல்லாம் தவணை முறைதான் நல்லது. இதனால், சிறிதளவு மட்டுமே விலை கூடுதலாக இருக்கும். அதுவும்கூட பெரிய சுமையாக இருக்காது. தவணை முறை, சிறுசேமிப்பு என்று அவரவர்க்கு ஏற்ற வழிமுறை மூலம் நிலத்தை வாங்கிப் போட்டால், இரண்டு ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது, அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும்.

இணையற்ற மனை முதலீடு!

இத்துறையில் இருக்கும் பல நிறுவனங்கள்... இலவச பத்திரப் பதிவு, பட்டா வாங்கித் தருவது, வீடு கட்ட வங்கிக்கடன் வாங்கித் தருவது என்று வாடிக்கையாளர்களுக்கு பலவிதத்திலும் உதவுகின்றன. நாங்களும் இதையெல்லாம் செய்துவருகிறோம்'' என்று சொன்ன சங்கர் ஜெனிசனிடம்,

''தவணை மற்றும் சேமிப்பு திட்டங்களில் தில்லுமுல்லுகள் நிறைய இருப்பதாக கூறப்படுகிறதே?'' என்று கேட்டோம்.

அதற்கு, ''எதில்தான் தில்லுமுல்லு இல்லை? நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியான நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களிடம் வாடிக்கையாளர் கட்டுவது ஒரு ரூபாய் என்றாலும், அதற்கு சரியான பில் கொடுக்கிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் யூசர் ஐ.டி, பாஸ்வேர்டு (user id, pass word) கொடுக்கிறோம். இதனால் வாடிக்கையாளர்கள் எவ்வித பயமும் இன்றி முழுத் தகவல்களையும் ஆன் லைனிலேயே தெரிந்துகொள்ளலாம்'' என்று சொன்னார்.

சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டுமனை விற்பனையில் ஈடுபட்டிருப்பவரும், தமிழ்நாடு வீடு, மற்றும் அடுக்கு மாடி கட்டுவோர் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவருமான மணிசங்கர், ''வாங்கிய மனையை சரியாக பாதுகாத்து, பராமரிக்காவிட்டால்... 'பர்த்டே கேக்' மாதிரி துண்டு துண்டாக கட் பண்ணி யாராவது சாப்பிட்டுவிடுவார்கள். குறைந்தது மாதம் ஒரு முறையேனும் வாங்கிய மனைக்கு விசிட் அடியுங்கள். வேலி போட்டு வையுங்கள். மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு வாங்கி,

இணையற்ற மனை முதலீடு!

அதற்கு வரி செலுத்திய ரசீதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலமாக, உங்கள் மனையை பத்திரமாக பாதுகாக்கலாம்'' என்று பயனுள்ள யோசனைகளை சொன்னதோடு,

''மனையை வாங்கும் முன்பாக அட்வான்ஸ் கொடுத்து, அக்ரிமென்ட் போடுவோம். அதில், நாம் வாங்க இருக்கும் நிலத்தின் சர்வே நம்பரைக் குறிப்பிட வேண்டும். மூலப் பத்திரத்தில்உள்ள சர்வே எண்ணும் அக்ரிமென்ட் டில் உள்ள சர்வே எண்ணும் சரியாக உள்ளதா என பார்க்க வேண்டும். வாங்குபவர், விற்பவர் ஆகியோரது 'பான் கார்டு' நம்பரையும் குறிப்பிட வேண்டும். வங்கிக் காசோலை கொடுக்கும்போது, அதை கோடிட்ட காசோலையாக கொடுக்கலாம். இதுமாதிரியான முன்னெச்சரிக்கைகளைக் கையாண்டால்... படாதபாடு பட்டு நாம் சேமித்த பணத்தை வைத்து வாங்கிய மனை, கடைசி வரை நம்முடையதாகவே இருக்கும்'' என்று கூடுதல் தகவல்களையும் தந்தார்.

காணி நிலம் வேண்டும்... பராசக்தி, காணி நிலம் வேண்டும்!

- பொன்.விமலா, படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வீ.சக்தி அருணகிரி

இணையற்ற மனை முதலீடு!

எச்சரிக்கை அவசியம்!

னையில் போடும் முதலீடு... பணத்துக்கு முழு மரியாதை தரும் முதலீடுதான். என்றாலும், பலசமயங்களில், அது காலைவாரி விட்டுவிடும்... சரியாக கவனித்து வாங்காவிட்டால்! இதற்கு சாட்சியாக ஏகப்பட்ட பேர் கால்கடுக்க சிவில் நீதிமன்றங்களிலும், காவல்நிலையங்களிலும் இப்போதும் நின்று கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில், வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே பேசுகிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நாகசைலா.

''தவணை முறை, சிறுசேமிப்புத் திட்டம், மொத்தமாக காசு கொடுத்து வாங்குவது என்று எப்படி நிலத்தை வாங்கினாலும்... முதலில் அந்த நிலத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும். மூலப்பத்திரம், பத்திரங்கள், பட்டா, வில்லங்க சான்றிதழ் அனைத்தையும் வழக்கறிஞரின் துணைகொண்டு சரிபார்த்துக்கொள்ள வேண்டும். மூலப்பத்திரத்தின்படி வாரிசுதாரர்கள் அனைவரும் கையெழுத்திட்டு உள்ளனரா என்பதையும் கவனிக்க வேண்டும். வாங்கப் போகும் நிலத்தின் பத்திரம் ஏற்கெனவே அடமானம் வைக்கப்பட்டுள்ளதா? அடமானம் வைக்கப்பட்டு மீட்கப்பட்டிருந்தால், பத்திரங்கள் நிலஅளவுப்படி சரியாக உள்ளதா என்பதையெல்லாம் சரிபார்க்க வேண்டும். 'டி.டி.சி.பி அப்ரூவ்டு லே அவுட்' என்று விளம்பரப்படுத்தியிருப்பதை அப்படியே நம்பிவிடக் கூடாது. அது உண்மைதானா என்பதை, அரசு ஆவணங்கள் மூலம் சரிபார்க்க வேண்டும்.

விலை மலிவான நிலம், சிறப்பு பரிசுப் பொருட்கள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், பத்திரப்பதிவு இலவசம் இதுமாதிரியான விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல், தெளிவுபெற்ற பிறகே வாங்க வேண்டும். கொடுக்கும் பணத்துக்கு உரிய ரசீது வாங்க வேண்டும். சிறுசேமிப்பு திட்டம், தவணை முறை திட்டம் என்றால்... தெளிவான ஒப்பந்தத்தைத் தயார் செய்வது நல்லது. பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்வதும் முக்கியம்'' என்று சட்ட நுணுக்கங்களை எடுத்துப்போட்டு தெளிவுபடுத்திய வழக்கறிஞர்,

''இப்படியெல்லாம் தகுந்த முன்னெச்சரிக்கையோடு நிலம் வாங்கினால்... நம் காட்டுக்கு நாம்தான் ராஜா'' என்றார் சிரித்தபடியே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism