Published:Updated:

பேப்பர் கட்டணம்... மின்கட்டணம்... இப்படி சேமிக்கலாம்!

டெக்னாலஜி

பேப்பர் கட்டணம்... மின்கட்டணம்... இப்படி சேமிக்கலாம்!

டெக்னாலஜி

Published:Updated:
##~##

ந்த நவீன யுகத்தில் இணையம், அலைபேசி உதவியுடன் இருந்த இடத்தில் இருந்துகொண்டே மின்னஞ்சல், குறுஞ்செய்தி, ஆன்லைன் தேர்வுகள், ரயில்/பஸ் டிக்கெட் என அனைத்து காரியங்களையும் எப்படி சாதிக்கலாம், சேமிக்கலாம் என்பது பற்றி 'இதெல்லாம்கூட சேமிப்புத்தானுங்க!’ என்ற தலைப்பில் சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல சேமிப்பு வழிகள் இங்கே...  

இ-புத்தகம்/இ-பேப்பர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருசில இ-புத்தகங்களை இன்டர்நெட்டில் இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். உதாரணமாக, சமச்சீர் கல்வி புத்தகங்களை, தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் வலைதளமான www.textbooksonline.tn.nic.inல் இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். இன்னொரு பக்கம், செய்தித்தாள்கள், வார மற்றும் மாத இதழ்களும் இ-புத்தகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கட்டணம் மற்றும் இலவசம் என இரு நிலைகளில் இவை வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கான கட்டணங்களை செலுத்தி, வேண்டிய இதழ்களை, ஆன்லைன் சந்தாதாரர் ஆகி, எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், வாசிக்கலாம். உதாரணமாக, விகடன் குழும இதழ்களை... இ-புத்தகமாக படிக்க விரும்புகிறவர்கள், அதன் வலைதளமான www.vikatan.com-ஐ அணுகலாம்.  

பேப்பர் கட்டணம்... மின்கட்டணம்... இப்படி சேமிக்கலாம்!
பேப்பர் கட்டணம்... மின்கட்டணம்... இப்படி சேமிக்கலாம்!

மின்சார சேமிப்பு!

மின்சாரத்தை விரயமாக்குவது, இந்த மின்வெட்டு காலத்தில் மன்னிக்க முடியாத குற்றம். எனவே, மின் சேமிப்பில் அலட்சியம் கூடாது. உதாரணமாக, படுக்கைஅறையில் புத்தகம் படிக்க, மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப் பயன்படுத்தலாம். செல்போன், லேப்டாப் போன்றவற்றை இரவு பகலாக மின்சார இணைப்பிலேயே சூடேறவிடாமல், சார்ஜ் செய்து முடித்த கையோடு இணைப்பில் இருந்து அகற்ற வேண்டும். கணினிக்கு எல்.சி.டி மானிட்டரை தேர்ந்தெடுப்பது மின்சாரத்தை மிச்சப்படுத்தும். 'லேப்டாப்’-ஐ விட, 'டெஸ்க்டாப்’-க்கு ஐந்து மடங்கு அதிகமான மின்சாரம் செலவாகும் என்பது கவனத்தில் இருக்கட்டும்! குளிர்சாதனப் பெட்டியின் 'கன்டென்சர் காயில்’-ல் படியும் தூசு, அதன் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து, 25 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும். எனவே, வாரம் ஒரு முறை அதை சுத்தப்படுத்த வேண்டும்.

விரல்நுனியில் வங்கி

ஒருவரின் வங்கிக் கணக்குக்கு, நம் வங்கிக் கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்ய, டி.டி எடுக்க, ஸ்டாப் செக் செய்ய... என பலவிதமான வேலைகளுக்காக வங்கிக்கு சென்று வரிசையில் நின்றதெல்லாம் அந்தக் காலம். வீட்டில் இருந்தபடியே அந்த வேலைகளை இப்போது முடிக்க முடியும். பெரும்பாலான வங்கிகள் இந்த வசதியை செய்து கொடுத்துள்ளன. இதைப் பற்றி உங்களின் கணக்கு இருக்கும் வங்கியிலேயே விசாரித்து, அதற்கான யூசர்நேம், பாஸ்வேர்டை வாங்கிக் கொள்ளுங்கள். அவை உங்களுக்கு கிடைக்கப் பெற்றதும்... வங்கியின் வலைதளம் மூலமாக... உங்களின் வங்கி வேலைகள் பலவற்றையும் முடித்துக் கொள்ளலாம். இதேபோல, மொபைல் பேங்கிங் வசதியும் வழக்கத்துக்கு வந்துவிட்டது. இதற்கும் வங்கி மூலமாகவேதான் முயற்சிக்க வேண்டும்.

எச்சரிக்கை குறிப்பு: இந்த ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகியவற்றில் அதீத கவனம் தேவை. மொபைல் போனை மறந்து எங்காவது வைத்துவிட்டால்கூட... வங்கிக் கணக்குக்கு ஆபத்து வரும் வாய்ப்பு இருக்கிறது, ஜாக்கிரதை!

இன்னும் இணையக் கட்டணம், இணையத்திரை, கட்டணமில்லா தொலைபேச்சு, இலவச சாஃப்ட்வேர்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. அவை பற்றியெல்லாம்...

அடுத்த இதழில்!

- சா.வடிவரசு  படங்கள்: ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism