Published:Updated:

கால் இல்லை... கால் பதித்தார்!

சாதனை

கால் இல்லை... கால் பதித்தார்!

சாதனை

Published:Updated:
##~##

வரெஸ்ட் சிகரம், இந்த ஆண்டு பெண்களின் கைக்கு வந்திருக்கிறது. ஆம்... எப்போதும் இல்லாத வகையில் இமயமலையின் 8,848 மீட்டர் உயர உச்சியைத் தொட்டு, உலக அளவில் சாதனை புரிந்திருக்கிறார்கள்... உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அருணிமா சின்ஹா, உத்தரகண்ட் மாநிலத்தின் இரட்டை சகோதரிகளான தாஷி-நுங்ஷி, பாகிஸ்தான் மற்றும் அரேபியா நாடுகளிலிருந்து சபீனா பேக் மற்றும் ரஹா முஹர்ரக் ஆகிய ஐந்து பெண்கள்! இதில், 24 வயது அருணிமா சின்ஹா... ஒரு கால் இல்லாத நிலையிலும் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

அருணிமா, 'அவள் விகடன்' வாசகிகளுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். உ.பி மாநில கிராமம் ஒன்றைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை இவர், லக்னோவிலிருந்து டெல்லிக்கு சி.ஐ.எஸ்.எஃப் (மத்திய தொழில் பாதுகாப்பு படை) பணித் தேர்வுக்காக ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது மூன்று இளைஞர்கள் இவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதுடன்,  தங்க செயினையும் பறிக்க முயன்றனர். எதிர்த்துப் போராடியவரை ரயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்டனர். அருகிலிருந்த தண்டவாளத்தில் விழுந்தவர், அந்த நேரம் அதில் வந்த ரயிலில் சிக்கிக் கொள்ள... இடது முழங்காலுக்கு கீழே உள்ள பாகம் பறிபோனது. இதைப் பற்றி 06 மே 2011 தேதியிட்ட இதழில் 'வலியில் பிறந்த வலிமை' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கால் இல்லை... கால் பதித்தார்!
கால் இல்லை... கால் பதித்தார்!

''உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் எனது கனவுகள் தகர்ந்ததற்காக அன்று அழுது கொண்டிருந்தேன். எனக்காக பலரும் அப்போது அழுதனர். அது என்னை மிகவும் யோசிக்க வைத்தது. எல்லோரும் பாராட்டும் வகையில் எதையாவது சாதிக்க வேண்டும் என யோசித்தேன். அதுதான், இந்த எவரெஸ்ட் முயற்சி. ஜம்ஷெட்பூர், 'டாடா ஸ்டீல் அட்வென்சர் பவுண்டேஷன்' தலைமைப் பயிற்சியாளரும், 84-ல் எவரெஸ்ட்டில் கால்பதித்த முதல் பெண்ணுமான பச்சேந்தரி பால், என்னை ஊக்கப்படுத்தினார். ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு, 52 நாள் பயணத்தில் சிகரத்தை எட்டியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது!'' என்கிறார் அருணிமா கண்கள் நனைய!

விபத்தில் சிக்கிய பின்னும், சி.ஐ.எஸ்.எஃப்-ல் ஹெட் கான்ஸ்டபிள் பணியில் அமர்த்தப்பட்ட அருணிமா, தற்போது எவரெஸ்ட் சாதனைக்காக சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற தயாராக இருக்கிறார்!

- ஆர்.ஷஃபி முன்னா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism