''பால் குடிச்சுட்டு இருந்த பச்சிளம் குழந்தை... குளிர் தாங்காம அம்மா மாரோடயே உயிரை விட்ட அந்தக் கொடூர காட்சியை... வாழ்க்கையில என்னால மறக்க முடியுமானே தெரியல...''

-சொல்லிவிட்டு கண்ணீர் உதிர்க்கிறார்... உத்தரகாண்ட் மாநில பேரழிவின் சாட்சிகளில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த துளசி அம்மா!

தனக்கு எதிரான செயல்கள் பெருகும்போதெல்லாம்... சுனாமி, நிலநடுக்கம், புயல் என மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கும் இயற்கை... இம்முறை, 'மேகவெடிப்பு' எனும் பேய் மழையை அனுப்பி, பெருவெள்ளத்தை உருவாக்கி ஓடவிட்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் அழவைத்துவிட்டது.

பிணங்களை எண்ணவே முடியாத அளவுக்கு உத்தரகாண்ட் சுடுகாடாகிக் கிடக்க, யாத்திரை சென்ற இடத்தில் இந்த பேராபத்தில் சிக்கி, நூலிழையில் தப்பித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சிலரைச் சந்தித்தோம். அந்த 'திக் திக்’ நிமிடங்களை மிரட்சி விலகாத கண்களுடன் பகிர்ந்தனர்.

சென்னையைச் சேர்ந்த பிரேமாவுக்கு, கேதார்நாத் கிலி, இன்னும் குறையவில்லை.

''15-ம் தேதி தரிசனம் முடிச்சுட்டு, கீழ இறங்கிட்டிருந்தோம். பேய் மழை அடிக்க, அங்கயே தங்கிட்டோம். காலையில் எழுந்து பார்த்தப்போதான் தெரிஞ்சுது, அது மழை இல்லை... வெள்ளம்னு. ஏதோ அருவி மாதிரி வானம் பொத்துக்கிட்டு கொட்ட, ஆளை முழுங்கற ஆழம், வேகத்தோட ஓடிட்டிருந்த வெள்ளம், பக்கத்துல இருந்த கட்டடங்களை எல்லாம் தீப்பெட்டி பெட்டி மாதிரி சரிச்சுவிட்டது. தங்கியிருந்த லாட்ஜை விட்டு அவசரமா வெளியேறி, எங்களோட வேனுக்கு வந்தா... அதுக்கு முன்ன 500 வண்டிகள் வரிசையா நிக்குது. விடாம பெய்த மழையில் எல்லா சாலைகளும் துண்டிக்கப்பட்ட விஷயமே பிறகுதான் தெரிஞ்சுது.

மூணு நாள் வேனுக்குள்ளயேதான் இருந்தோம். எல்லா கடைகளையும் மூடிட்டதால சாப்பாடு, தண்ணி எதுவும் இல்ல. எச்சிலை விழுங்கி விழுங்கித்தான் உயிரை தக்க வெச்சுட்டிருந்தோம். எல்லாத்தையும் பொறுத்துக்கலாம். ஆனா, பாத்ரூம் போகக்கூட முடியாம நாங்க பட்ட கஷ்டம்தான் ரொம்ப கொடுமை. ஆம்பளைங்க எப்படியோ சமாளிச்சாங்க. ஆனா, பொம்பளைங்க இருட்டினதுக்கு அப்புறம்தான் வெளியில் வந்தோம்'' என்றவரைத் தொடர்ந்தார், கணவர் ரங்கராஜ்.

''மழை, வெள்ளம், போக்குவரத்து முடங்கி மாட்டிக்கிட்டோம்னுதான் நினைச்சுருந்தோம். ஊரில் இருந்து போன் பண்ணின எங்க பொண்ணு 'ஓ’னு அழுதுட்டே விஷயத்தை சொன்னப்போதான், பேராபத்தில் சிக்கியிருக்கோம்னு புரிஞ்சுது. ராணுவம் கொடுத்த மறுவாழ்வுதான், இப்ப உங்ககிட்ட எங்கள பேச வெச்சுட்டிருக்கு'' என்றார் பெருமூச்சுவிட்டபடி.

பேரிடரில் சிக்கியபோதும்... சுதாரித்து, ராணுவத்தோடு இணைந்து முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்து திரும்பியுள்ளனர் சென்னையைச் சேர்ந்த துளசி அம்மா மற்றும் அவருடைய மகன் பத்ரிநாத்.

''தண்ணியில மிதந்து வந்த பிணங்களை பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிர்விட்டவங்க பலர். எங்ககூட சிரிச்சு விளையாடிட்டு இருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குட்டிப் பொண்ணு, திடீர்னு மூச்சிரைச்சு இறந்துடுச்சு. பால் குடிச்சுட்டு இருந்த பச்சிளம் குழந்தை... குளிர் தாங்காம அம்மா மாரோடயே உயிரை விட்ட அந்தக் கொடூர காட்சியை... வாழ்க்கையில என்னால மறக்க முடியுமானே தெரியல...'' எனும்போதே, வார்த்தைகள் உடைகின்றன துளசி அம்மாவுக்கு.

''மீட்கறதுக்காக ராணுவம் வந்ததும்... தினமும் காலையில ஐந்தரை மணிக்கு வரிசையில உட்கார்ந்துடுவோம். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு நீள்ற அந்த வரிசையில, குறைஞ்சது 6,000 பேர் இருப்பாங்க. அதைப் பார்த்த நானும் அம்மாவும், 'பலவீனமானவங்களை முதல்ல அனுப்பிட்டு, கடைசியா போகலாம்'னு முடிவு பண்ணி, ஆறு நாள் மீட்புப் பணிகள்ல உதவியா இருந்தோம்.

பெரும்பான்மையானவங்க கிளம்பின பிறகு... 24-ம் தேதி டேராடூன் வந்தோம். சாயங்காலம் வரை டெல்லி போறதுக்கு ஒரு ஹெலிகாப்டர் கூட வரல. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவோட ஹெலிகாப்டர் திடீர்னு வந்துச்சு. நிலைமைய எடுத்துச் சொன்னதும், கூடவே எங்களையும் ஹைதராபாத்துக்கு அழைச்சுட்டு வந்தவர், அங்கிருந்து சென்னைக்கும் அனுப்பி வெச்சார்'' என்று பெருமூச்சுவிட்டார் பத்ரி.

தொடர்ந்த துளசி அம்மா, ''எங்க எல்லாருக்கும் மறுபிறவி தந்த கடவுள்... இந்திய ராணுவம்தான். இக்கட்டான சூழல்ல, உயிர் பயத்துல எல்லாரும் ஊர் திரும்பறதுக்காக முந்தி அடிச்சிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணினாங்க. ராணுவ அதிகாரிகளை கேவலமா திட்டினாங்க. சிலர் அடிக்கவும் போனாங்க. 'இதுமாதிரியான நேரத்துல கட்டுப்பாட்டை இழந்து நடக்குறது மனுஷங்களோட இயல்பு'னு புரிஞ்சுகிட்டு, துளியும் கோபப்படாம, மீட்பு பணியில மட்டுமே அவங்க கவனம் செலுத்தினாங்க. கண்ணீராலதான் ராணுவத்துக்கு நன்றி சொல்லணும்!'' என்றார்... கைகள் கூப்பியபடி!

- உத்தரகாண்ட்டில் இருந்து இரா.ஸ்ரீதர்,
சென்னையில் இருந்து க.பிரபாகரன்
படங்கள்: பீரகா வெங்கடேஷ்