Published:Updated:

புஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து!

புஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து!

புஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து!

புஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து!

Published:Updated:
##~##

தாத்தா செய்து கொடுத்த மரப்பாச்சி பொம்மை, அதற்கு பொருத்தமாக பாட்டி தைத்துக் கொடுத்த வண்ண வண்ண உடைகள், தெருப் பிள்ளைகளுடன் ஓடியாடி வேர்க்க விறுவிறுக்க விளையாடும் குழு விளையாட்டுகள்... என அக்கால குழந்தைகளின் வளர்ச்சி... மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மிக ஆரோக்கியமானதாக இருந்தன. ஆனால்... பத்து ரூபாய்க்கு கிடைக்கும் சைனா பஜார் பொம்மைகள், குழந்தையைவிட பெரிதாக வீட்டில் இருக்கும் புஸு புஸு டெடிபியர் பொம்மைகள், கார்ட்டூன் பொம்மைகள்... என்று மாறிவிட்ட இன்றைய குழந்தைகளின் உலகம், அத்தனை ஆரோக்கியமானதாக இல்லை என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது!.

ஆம், நவீனமயமாகிவிட்ட இன்றைய விளையாட்டு பொம்மைகளே... நோய் பரப்பும் காரணிகளாகவும், மனதைக் குலைக்கும் கருவிகளாகவும் மாறிக்கிடக்கின்றன என்பதே உண்மை. இத்தகைய சூழலில், குழந்தைகளைக் குறிவைத்து மார்க்கெட்டில் குவிக்கப்படும் இதுபோன்ற பொம்மைகள், என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றி, குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் ஆஸ்துமா அலர்ஜி ஆலோசகர் ஆர்.ஸ்ரீதரன், இங்கே விரிவாகப் பேசுகிறார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எவ்வளவு விலை உயர்ந்த பொம்மை வாங்கிக் கொடுத்தாலும், ஒரு வாரத்துல உடைச்சுடறாங்க... எனும் பெற்றோர் குழந்தைகளுக்கு மலிவு விலை பொம்மைகளை வாங்கிக் கொடுக்க, அங்கு ஆரம்பிக்கிறது ஆபத்து. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்... இப்படிப்பட்ட பொம்மைகள்மீது சூரியஒளி படும்போது, அந்த பொம்மையில் இருக்கும் நிறம் மற்றும் பொருட்களின் தன்மையைப் பொறுத்து கெமிக்கல் ரியாக்ஷன் நடைபெற அதிக அளவில் வாய்ப்பிருக்கிறது. அதேபோல் பொம்மைகளைக் குழந்தைகள் வாயில் வைக்கும்போதும் அதில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் துகள்கள் வாயினுள் செல்ல நேரிடலாம். அடுத்து, 'சாஃப்ட் டாய்ஸ்’ என்று சொல்லப்படும் புஸு புஸு பொம்மைகள். குழந்தைகள் இந்த பொம்மை களுடன் விளையாடும்போது, இதிலிருக்கும் சிந்தடிக் நூல் இழைகள் குழந்தைகளின் மூக்கு வழியாக மூச்சுக்குழலுக்கு சென்று சுவாசக் கோளாறை ஏற்படுத்தும்.

புஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து!

இதைவிட ஆபத்தானது 'ஹவுஸ் டஸ்ட் மைட்’ எனப்படும் ஒருவித உண்ணி. இது பொதுவாக வீடுகளில் சோஃபா, தலையணை மற்றும் மெத்தையில் இருக்கும். இரவு நாம் உறங்கும்போது உதிரும் தோல் துகள்கள்தான் இந்த உண்ணியின் உணவு. இது குழந்தைகள் விளையாடும் புஸு புஸு பொம்மைகளில் மிக சுலபமாக ஒட்டிக்கொள்ளும். இந்த உண்ணியின் கழிவுப்பொருளான ஒருவித புரோட்டீன், குழந்தையின் மூக்கு வழியாக உள்ளே போய் அலர்ஜியால் எந்நேரமும் மூக்கில் சளி ஒழுகுதல், தும்மல், மூக்கடைப்பு போன்ற பாதிப்பில் ஆரம்பித்து அடுத்ததாக சைனஸ்... சைனஸில் நீர் கட்டுவது, தலைவலி, சைனஸில் நோய்தொற்று ஏற்படுவது, இதனைத் தொடர்ந்து மூச்சுக் குழலில் அலர்ஜி ஏற்பட்டு மூச்சுக் குழலில் வீக்கமோ சுருக்கமோ அல்லது சுருங்கி விரிவதில் பிரச்னை எற்பட்டு ஆஸ்துமா வரை கொண்டுபோய் விடும். கைகளின் சருமத்தில் திட்டுத் திட்டாக ஏற்படும் 'எக்ஸிமா' எனப்படும் ஒருவித அலர்ஜி வருவதற்கும் வாய்ப்பு அதிகம். இவை எல்லாமே சாஃப்ட் டாய்ஸில் இருக்கும் 'டஸ்ட் மைட்’ உண்ணியால் ஏற்படக்கூடிய வியாதிகள்.

தரமற்ற பொம்மைகள்... பிரச்னைகள் இலவசம்!

மலிவு விலை பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொம்மைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பெருங்கொடுமை. ஒன்று சேர்க்கும் வகையிலான தனித்தனி பகுதிகளைக் கொண்ட பொம்மைகளும் நிறைய வருகின்றன. இவற்றை குழந்தைகள் தவறி வாயில் வைக்கும்போது, இதிலிருக்கும் ஏதேனும் ஒரு பகுதி பிரிந்து வாய்க்குள் சென்று தொண்டைக் குழிக்குள் மாட்டி சுவாசத் தடை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

புஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து!

அடுத்ததாக, தரமற்ற பொம்மைகளாக இருக்கும்பட்சத்தில், குழந்தைகள் வாயில் வைத்து கடிக்கும்போது இதில் பூசியிருக்கும் நிறங்களில் அடங்கியிருக்கும் லெட் மற்றும் சிந்தடிக் கெமிக்கல்ஸ் அவர்களுக்கு ஃபுட் பாய்ஸன், வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் அலர்ஜியை ஏற்படுத்தும். இந்த கெமிக்கல்களை தொடர்ந்து சுவைக்கும்போது கேன்சர் வரும் வாய்ப்பும் உள்ளது'' என்று பட்டியலிட்டு எச்சரிக்கை தந்த டாக்டர்,

''பெற்றோரே, குழந்தைகளுக்கு சந்தோஷத்தை வாங்கித் தருவதாக நினைத்து, வியாதியை விலை கொடுத்து வாங்காதீர்கள். பொம்மையை வாங்கும் முன் கெமிக்கல் இல்லாத, நச்சுத்தன்மை இல்லாத, பொம்மையின் நிறம் எதிலிருந்து தயாரிக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களை கவனத்துடன் பார்த்து வாங்குங்கள். இவை எல்லாம் பொம்மை வைக்கப்பட்டிருக்கும் அட்டைப் பெட்டியிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்'' என்று வழிகாட்டினார்.

புது பொம்மையை உடைத்த குழந்தையை கண்டிப்பதைவிட, அதன் அழுகையை நிறுத்த அடுத்த நிமிடமே இன்னொரு பொம்மை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களே... உஷார்!

கட்டுரை, படங்கள்: இந்துலேகா.சி

பலம் சேர்க்கும் பாரம்பரிய விளையாட்டுகள்!

நவீன பொம்மைகளைத் தவிர்த்து, குழந்தைகளுக்கு வேறு என்ன மாதிரியான பொம்மைகளைத் தரலாம் என்பது பற்றி பேசிய மனநல மருத்துவர் பி.பி.கண்ணன், ''நாம் வாங்கிக் கொடுக்கும் பொம்மை பாஸிட்டிவ் எண்ணத்தை ஏற்படுத்துகிறதா, நெகட்டிவ் எண்ணத்தை தூண்டுகிறதா என்பதில்தான் பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 'என் குழந்தை ரொம்ப அடமென்டா இருக்கான்’, 'அவனோட தங்கச்சி பாப்பாவை, கூட படிக்கிற பசங்களை எல்லாம் அடிக்கிறான்’  என்பது பெற்றோர் பலரின் புகார். குழந்தையின் இந்த மூர்க்கத்துக்கு காரணம், அது விளையாடும் விளையாட்டுகளும் அதை அனுமதிக்கும் பெற்றோரும்தான்

அந்தக்கால பல்லாங்குழி... நுட்பமான மூளைத்திறனை வளர்க்கக் கூடியது; தாயம்... சரியான முடிவெடுக்கும் திறனை வளர்க்கக் கூடியது; குழு விளையாட்டுகள்... எல்லோருடனும் கலந்து பழகும் தன்மையை உண்டாக்கக் கூடியவை. இவையெல்லாம் குழந்தைகளுக்கு மனதளவில் பாஸிட்டிவ் விஷயங்களை சொல்லிக் கொடுத்தன. எனவே, அந்த விளையாட்டுகளை அறிமுகப்படுத்துங்கள் உங்கள் வீட்டு சிட்டுகளுக்கு'' என்று வேண்டுகோள் வைத்தார் டாக்டர்.

'ஹவுஸ் டஸ்ட் மைட்’... கவனம்!

புஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து!

சோஃபா குஷன், தலையணை போன்றவற்றை வாரம் ஒருமுறை நல்ல வெயிலில் காயவைத்து உபயோகிக்க வேண்டும்.

புஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து!

 போர்வை, தலையணை உறை, சோஃபா குஷன் கவர் என அனைத்தையும் வாரம் ஒரு முறை வெந்நீரில் அலசி வெயிலில் காயவைக்க வேண்டும்.

புஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து!

 'ஹவுஸ் டஸ்ட் மைட்’டிலிருந்து தப்பிக்க கடைகளில் கிடைக்கும் சிந்தடிக் பில்லோ கவர் மற்றும் பெட்ஷீட்களை வாங்கி உபயோகிக்கலாம். இது நம் தோலுக்கும் 'டஸ்ட் மைட்’டுக்கும் இடையில் பாதுகாப்பு கவசம் போல் செயல்படும். நம் தோலை மட்டும் உணவாக உண்ணும் இந்த உண்ணி, நாளடைவில் உணவு கிடைக்காமல் இறந்துவிடும்.

புஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து!

 குழந்தைகளுக்கு துவைக்கக் கூடிய சாஃப்ட் டாய்ஸ் வாங்கி கொடுக்கலாம். அதையும் வெந்நீர் அலசி காயவைத்து உபயோகிக்கலாம்.

புஸீ புஸீ பொம்மை... பொதிந்திருக்கும் ஆபத்து!

  இயல்பு வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு பிரச்னை என்றால், 'எஸ்.எல்.ஐ.டி' (S.L.I.T- Sublingual immunotherapy) எனப்படும் நவீன சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism