Published:Updated:

உங்கள் குழந்தை பத்திரம்தானா?

டே கேர் சென்டர்ஸ்... அவேர்னஸ்

உங்கள் குழந்தை பத்திரம்தானா?

டே கேர் சென்டர்ஸ்... அவேர்னஸ்

Published:Updated:
##~##

 கரங்களில் மட்டுமே இருந்துவந்த 'டே கேர் சென்டர்ஸ்’ எனும் 'மழலை பராமரிப்பு மையங்கள்', தற்போது சிறு நகரங்களிலும் சிற்றூர்களிலும்கூட பூத்திருக்கின்றன. பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியாத வயதிலிருக்கும் மழலைகள், இந்த மையங்களில் வளர்கின்றனர். படிப்பு, வேலை என திருமணத்துக்குப் பிறகு, இளம் தாயை இறுக்கும் நெருக்கடி நிதர்சனங்களில் இருந்து மீள, இதுபோன்ற மையங்கள்தான் வரப்பிரசாதம்!

ஆனால், ஒரு சென்டரை தேர்ந்தெடுத்து, குழந்தையை விடுவதோடு தாய்மார்களின் கடமை முடிந்து போகிறதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இல்லவே இல்லை. இப்போதுதான் அவர்களின் பொறுப்பு பலமடங்கு அதிகரிக்கிறது'' என்று எச்சரிக்கிறார் சாவித்ரி உமாகாந்தன். நர்சரி பள்ளி ஆசிரியை, மழலைகள் பராமரிப்பு என 18 வருட அனுபவமுள்ளவர் சாவித்ரி. திருச்சி, தில்லைநகரில் 'பட்டர்ஃபிளைஸ்’ என்கிற பெயரில் 'டே கேர் சென்டர்' நடத்தி வருகிறார்.

''தாய்மார்கள், டே கேர் சென்டர் அமைவிடத்தை நேரடியாக பார்க்க வேண்டும். அங்கே ஏற்கெனவே வரும் பெற்றோர்களிடமும் அபிப்பிராயம் கேட்கலாம். உங்களது குடியிருப்பு அல்லது பணியிடத்துக்கு வெகு அருகில் இருக்கும் சென்டருக்கு முன்னுரிமை தரலாம். இது, தேவைப்பட்டபோது எட்டிப் பார்க்க வசதிப்படும்.

இரண்டொரு அறைகள், அதில் விளையாட்டு சாமான்கள் என்று மட்டுமே இருந்தால் போதாது. சற்று விசாலமான தரைதள கட்டடம், அதனுள் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணத்தில் அலங்கரிப்பில் உள் அலங்காரம்... ஓ.கே! அதிக உள் விளையாட்டு உபகரணங்களைவிட, காற்றோட்டமும் சுகாதாரமுமான வெளியிடம் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். அருகில் மருத்துவமனை, அவசரத்துக்கு மருத்துவரை அழைக்கும் வசதி போன்றவற்றையும் உறுதிபடுத்தவும். மையத்தின் பணியாளர்கள் குழந்தையை அளவுக்கு மீறி கண்டிக்கிறார்கள், அடிக்கிறார்கள், சாப்பிட, தூங்குவதற்குக்கூட மிரட்டுகிறார்கள் எனில்... சென்டரை மாற்றிவிடுவது உத்தமம்.

உங்கள் குழந்தை பத்திரம்தானா?

குழந்தைகள் தினசரி ஏதாவது பாடம் கற்றுவருகிறார்களா என்று அவர்களை படுத்தக்கூடாது. ஒரு சில பாடல்கள், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது, சம வயதினருடன் பழகுவது, பங்கேற்பது, புரிந்துகொள்வது, அனுசரணை காட்டுவது, சரியாகச் சாப்பிடுவது, தூங்குவது போன்ற நல்ல பழக்க வழக்கங்களையும், தண்ணீர் கேட்பது, பாத்ரூம் ஹேபிட்ஸ் போன்ற தேவைகளை வெளிப்படுத்தவும் கற்றுக்கொண்டாலே போதும்'' என்று சொல்லும் சாவித்ரி, அம்மாக்களுக்கும் ஆலோசனைகள் தந்தார்!

''மையத்தின் நிர்வாகிகளுடன் மட்டுமல்ல, குழந்தைகளோடு நேரடி தொடர்பில் இருக்கும் பணியாளர்களுடனும் அம்மாக்கள் அடிக்கடி பேச வேண்டும். காலை அல்லது மாலையில் மையத்திலேயே குழந்தையோடு சிறிது நேரம் விளையாட்டு, பேச்சு என்று அம்மாக்கள் நேரத்தை செலவழிப்பதும் நல்லது. மைய சூழலில் குழந்தை பொருந்திப்போக இது உதவும் என்பதோடு, அங்கு ஏதேனும் குறைகள் இருப்பின் கவனிக்கும் அவகாசமும் வாய்க்கும்.

வீடு திரும்பியதும் குழந்தையிடம் பாசமாக பேசிப்பழக வேண்டும். அன்றைய தினம் நடந்தது என்ன... நன்றாக சாப்பிட்டாயா... உன் ஃப்ரெண்ட்ஸ் என்ன சொன்னார்கள் என்பது மாதிரியெல்லாம் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டால், அடுத்த நாள் மகிழ்ச்சியோடு மையத்துக்கு குழந்தை தானாகவே புறப்பட்டுவிடும்'' என்ற சாவித்ரி,

''குழந்தைக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, எதற்காவது அதிகம் பயப்படுவானா, தூக்கத்தின் இடையில் வீறிடுவானா, அலர்ஜி உண்டென்றால் அந்த விவரங்கள் உள்ளிட்ட குறிப்புகளை வாய்மொழியாக சொல்வதோடு... சிரமம் பார்க்காது எழுதி குழந்தையை பார்த்துக் கொள்வோர் பொறுப்பில் தரலாம். இதில் குழந்தையின் சுருக்கமான மெடிக்கல் ஹிஸ்டரி, குடும்ப மருத்துவர் விவரம் போன்றவற்றையும் குறிப்பிடுதல் நலம்'' என்றார் அம்மாவின் அக்கறையோடு!  

- எஸ்.கே.நிலா

மழலை பராமரிப்பு மையங்களை நாடும் அம்மாக்கள் என்ன சொல்கிறார்கள்...

உங்கள் குழந்தை பத்திரம்தானா?

திருச்சி மருத்துவமனை ஒன்றின் ஆபரேஷன் தியேட்டரில் பணிபுரியும் ஜெயந்தி: ''5 மாதத்தில் டே கேர் சென்டரில் ஒப்படைத்து விட்டு வேலைக்குப் போனால்... அங்கே எதுவுமே ஓடவில்லை. ஆரம்ப தினங்களில் ஒரு நாளைக்கு பத்து தடவையாவது போன் செய்துடுவேன். என்னைப் பொறுத்தவரை குழந்தை ரைம்ஸ் சொல்ல வேண்டும், பாடம் படிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையில்லை. நேரத்துக்கு சாப்பிட்டு தூங்கி ஆரோக்கியமாக வீடு வந்தாலே போதும்.''

திருச்சியில் உள்அலங்கார நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஜோதி: ''என் அலுவலகத்துக்கு பக்கமாக இருக்கும்படியான சென்டரை தேர்ந்தெடுத்தேன். காரணம், பால்குடி மறக்காத குழந்தைக்கு அடிக்கடி போய் பசியாற்றி வருவதற்காக. கூடவே, அவ்வப்போது எதிர்பாராத விசிட் செய்து, குழந்தையின் சௌகரியத்தை உறுதி செய்துகொள்வேன். ஒரு தாயாக என் கவனிப்பை முடிந்த அளவு சரியாக செய்ய வேண்டும் இல்லையா... அதற்காகத்தான்.''

திருச்சியில் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சசிகலா: ''என்னைப் பொறுத்தவரை, மேம்போக்காக இல்லாமல் ஒவ்வொரு குழந்தைக்கும் பிரத்யேக கவனம் தந்து பராமரிக்கிறார்கள் என்பதை பல வகையிலும் விசாரித்த பிறகே சென்டரை முடிவு செய்தேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism