Published:Updated:

மரச்சாமான்கள் பராமரிப்பு...

மெருகு கூட்டுங்கள்... மிரள வையுங்கள்!

மரச்சாமான்கள் பராமரிப்பு...

மெருகு கூட்டுங்கள்... மிரள வையுங்கள்!

Published:Updated:
##~##

 வீட்டின் அழகுக்கு மெருகு கூட்டுவதில் மரச்சாமான்களின் பங்கு அதிகம். அதேபோல... எக்கச்சக்க செலவில் செய்து வைக்கும் மரச்சாமான்களைப் பராமரிப்பதில் நம்முடைய பங்கும் அதிகம் இருப்பதுதானே சரி! அதற்காகவே... மரச்சாமான்கள் மற்றும் மர வேலைப்பாடுகள் செய்யும்போது சரிபார்க்க வேண்டிய விஷயங்களையும், அவற்றின் பராமரிப்பு வழிகாட்டல்களையும் வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த 'இன்டீரியர் டிசைனர்' ராமு.

''சோஃபா, கட்டில், நாற்காலி இவையெல்லாம் நகரும் மரச்சாமான்கள்; சுவருடன் ஒட்டிய மர அலமாரிகள், சுவரில் செய்யப்பட்ட மர அலங்காரங் கள், கதவு, ஜன்னல் இவையெல்லாம் நகரா  மரச்சாமான்கள். நகரும் மரச் சாமான்களுக்கு அடிப்பாகம் தேயாமல் இருக்க 'பிளாஸ்டிக் புஷ்’ வைப்பது முக்கியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்ந்தெடுங்கள் தேக்கை!

தேக்கு மரத்தில் செய்யும் பொருட்களில் அதிகம் பிரச்னை வர வாய்ப்பில்லை. வாரம் அல்லது மாதம் ஒருமுறை தூசு மற்றும் அழுக்குகளைத் துடைத்தால் போதும். ஆண்டுக்கு ஒருமுறை மறக்காமல் வார்னிஷ் அடிக்க வேண்டும். அப்போதுதான் அழுக்கினால் நிறம் மங்காமல் புதுப்பொலிவுடன் இருக்கும்.

தேக்கு மரச்சாமான்களில் தண்ணீர் பட்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், எண்ணெய் பட்டால் அந்த இடத்தில் நிறம் மாறிவிடும். எனவே, உடனே துடைத்துவிடுங்கள். அதேசமயம், வேங்கை மரச்சாமான்கள் தண்ணீர் பட்டால் சாயம்போகும். டைல்ஸ் மற்றும் மார்பிள் போன்றவற்றின் மீது அது படிந்தால், கறை அப்படியே ஒட்டிக் கொண்டுவிடும். அதனால் வேங்கை மரச்சாமான்களுக்கு தரமான வார்னிஷ் அடிக்க வேண்டும்.

மரச்சாமான்கள் பராமரிப்பு...

கரையான் மீது கவனம் தேவை!

கரையான் நம் பார்வைக்குத் தெரியாமல் மரப்பொருட்களை முழுவதுமாக அழித்துவிடும். எனவே, முன்னெச்சரிக்கையாக 'பெஸ்ட் கன்ட்ரோல்’ செய்யவேண்டும். ஒருவேளை கரையான் அரிக்க ஆரம்பித்துவிட்டால், ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும் 'செல் ஆயில்' எனும் திரவத்தை வாங்கி, ஸ்பிரே செய்யுங்கள். கரையான் அதிகமாக ஊடுருவி இருந்தால்... தச்சரை அழைத்து, அரிப்புக்குள்ளான மர பாகத்தை வெட்டி எடுத்து, வேறு மரத்துண்டை இணைக்கச் சொல்லலாம்.

அடுப்படி மரப்பொருட்கள்!

சமையலறை எந்நேரமும் தண்ணீர் புழங்கும் இடம் என்பதால், இங்குள்ள மரச்சாமான்களை பராமரிக்க கூடுதல் கவனம் தேவை. சமையலறை சுவரில் மரஅலமாரியை பொருத்துவதற்கு முன், உங்கள் மரத்தச்ச ரிடம் 'செல் ஆயில்' மற்றும் 'வுட் பிரைமர்' ஆகியவற்றைக் கலந்து, அலமாரியின் அனைத்து பாகங்களிலும் அடித்துவிட்டு, பிறகு பொருத்துமாறு சொல்லுங்கள்.

மரச்சாமான்கள் பராமரிப்பு...

பிளைவுட் அலமாரியில் சன் மைக்கா பொருத்துவதற்கு முன்  செல் ஆயில் மட்டும் அடித்தால் போதுமானது.  சன் மைக்கா தேவையில்லை எனில், செல் ஆயிலுடன் வுட் பிரைமர் கலந்து அடிக்கவும். இப்படிச் செய்வது, அலமாரியை கரையான் அரிக்காமல் பாதுகாக்கும்.

மெத்தை ஜாக்கிரதை!

தரையைக் கழுவி விடும்போதோ அல்லது துடைக்கும் போதோ... வாசற்கால், கதவுகள், கட்டிலின் கால்களில் தண்ணீர்பட்டு ஊறிவிடும். அதனால் இவற்றுக்கும், குறைந்தது... தண்ணீர் படும் அடிபாகத்துக்காவது வார்னிஷ் அடிப்பது அவசியம். பாத்ரூம் (மர)கதவுகளுக்கு செலவைப் பார்க்காமல் வார்னிஷ் அடிப்பது நல்லது. பிளைவுட் கதவாக இருந்தால்... வாட்டர்  ப்ரூஃப் மற்றும் பெஸ்ட் ப்ரூஃப் ஆக இருப்பது அவசியம்.

மெத்தையில் தண்ணீர் கொட்டிவிட்டாலோ அல்லது குழந்தைகள் ஈரமாக்கினாலோ... அடியில் இருக்கும் பிளைவுட்டுக்கும் ஈரம் பரவி... பூஞ்சை மற்றும் பூச்சி பிடிக்கும். எனவே அந்த பிளைவுட்டிலும் வார்னிஷ், வுட் பிரைமர் அல்லது பெயின்ட் அடித்து வைக்கலாம்'' என்று டிப்ஸ் மழை பொழிந்தார் ராமு.

- கட்டுரை, படங்கள்: இந்துலேகா.சி

மரச்சாமான்கள் பராமரிப்பு...

வுட் டிப்ஸ்!

மரச்சாமான்கள் பராமரிப்பு...

பூவரசு மரம் (இதன் பூச்சி பிடிக்காத தன்மையால், இதை நாட்டு தேக்கு என்பார்கள்), நாவல் மரம், கொடுக்காப்புளி இதுபோன்ற நாட்டு மரங்களையும் கதவு, ஜன்னல்களுக்கு உபயோகிக்கலாம். விலையும் குறைவு.

மரச்சாமான்கள் பராமரிப்பு...

 மரச்சாமான்களில் மார்க்கெட்டில் உலவும் டூப்ளிகேட் அயிட்டங்கள் அதிகம் என்பதால், எல்லாப் பொருட்களுக்கும் மறக்காமல் பில் வாங்கி பத்திரப்படுத்த வேண்டும்.

மரச்சாமான்கள் பராமரிப்பு...

 மரச்சாமான்களை நன்கு காய்ந்த மரத்தில் செய்யச் சொல்லுங்கள். ஈரமான மரத்தில் செய்தால்... நாளாக ஆக வெடிப்புவிட வாய்ப்பிருக்கிறது.

மரச்சாமான்கள் பராமரிப்பு...

 மரக்கதவுகளுக்கு கண்டிப்பாக 'டோர் ஸ்டாப்பர்’ பொருத்துங்கள். கிச்சன் அலமாரிகள், வாட்ரோப் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இவற்றில் பொருத்தக்கூடிய ஸ்க்ரூ மற்றும் ஹேண்டில்கள் நல்ல தரத்துடன் இருப்பது முக்கியம்.

மரச்சாமான்கள் பராமரிப்பு...

 தரமான வார்னிஷ் உபயோகித்தால், அந்தப் பொருளின் ஆயுளும் நீடிக்கும். ஏழு வருடங்களுக்கு ஒருமுறை அடிக்கக்கூடிய வார்னிஷ்கூட இப்போது கிடைக்கிறது.

மரச்சாமான்கள் பராமரிப்பு...

 'பெஸ்ட் கன்ட்ரோல்’ செய்வது, மரச்சாமான்களுக்கும், உங்கள் மணிபர்ஸுக்கும் நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism