Published:Updated:

ஆடைகளைக் காப்பாற்றலாம்... அழகாக!

ஆடைகளைக் காப்பாற்றலாம்... அழகாக!

ஆடைகளைக் காப்பாற்றலாம்... அழகாக!

ஆடைகளைக் காப்பாற்றலாம்... அழகாக!

Published:Updated:
##~##

 தீபாவளி, திருநாள் என்று ஆண்டுக்கு ஒருமுறை, இருமுறை ஆடைகள் எடுத்த தலைமுறை மலையேறிவிட்டது. வருடம் முழுவதும் உடைகள் வாங்கிக் குவிக்கும் காலம் இது. அதிலும் ஆயிரங்களில் ஆடைகள் வாங்கும்போது அதற்கான பராமரிப்பும் அதிகமாகிறது. அதைப் பற்றி விளக்குகிறார், சென்னை 'சராஜ் ஃபேஷன்’ஸின் உரிமையாளர், ஃபேஷன் டிசைனர் சலீமா கமால்.

சலவை சம்பிரதாயங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''புதிய ஆடைகளை முதல்முறை அணியும்போது... நாள் முழுக்கப் பயன்படுத்தி, நன்கு அழுக்காக்கி துவைக்கக் கூடாது. கொஞ்ச நேரமே பயன்படுத்திவிட்டு, துவைப்பதுதான் நல்லது. முதல் முறையாகத் துவைக்கும்போது, நீரில் சிறிது சமையல் உப்பு போட்டு அலசி, பிறகு வெறும் தண்ணீரில் அலசி உலர்த்தவும். சோப்பு வேண்டாம். வெள்ளை உடையில் ஏற்படும் கறைகளை

ஆடைகளைக் காப்பாற்றலாம்... அழகாக!

அகற்ற, எலுமிச்சைச் சாறு பிழிந்து சிறிதுநேரம் கழித்து சோப்பு போட, கறை பளிச்சென்று போயிருக்கும். வெள்ளை உடையில் காபி, டீ, கறைகள் ஏற்பட்டால்... காய்ச்சிய பால் சிறிதளவை அந்தக் கறைகளில் வைத்து, பின்னர் துவைத்தால் கறை நீங்கிவிடும். அல்லது கறைபட்ட இடத்தில் 'ஹைட்ரஜன் பெராக்ஸைடு' (மெடிக்கல் ஷாப்புகளில் கிடைக்கும்) ஒரு துளி விட்டால்... லேசாக நுரைக்கும். நுரை அடங்கியவுடன் ஒரு துணி கொண்டு தேய்த்து, பிறகு துவைக்க, கறை காணாமல் போகும்.

அடர் நிற ஆடைகளையும், வெளிர் நிற ஆடைகளையும் சேர்த்து ஊறவைத்துத் துவைப்பதைத் தவிர்க்கவும். துணிகளை உலர்த்தும்போது உட்புறத்தை வெளிப்புறமாக்கி காயபோடவும். துணி அடுக்கும் ஷெல்ஃபுகளில் காய்ந்த வேப்பிலை போட்டு வைத்தால்... எறும்பு, பூச்சிகள் போன்ற ஜந்துக்கள் அண்டாமல் இருக்க உதவும். நாப்தலின் உருண்டைகளை நேரடியாக துணிகளுக்கு இடையில் போடாமல், ஒரு பையில் சுற்றி வைக்கவும்.

ஆடைகளைக் காப்பாற்றலாம்... அழகாக!

பத்திரம்... பட்டுப்புடவை!

பட்டுப்புடவைக்கு டிரைகிளீனிங் மட்டுமே சிறந்தது. நான்கைந்து முறை உடுத்திய பின் டிரைகிளீனிங் செய்வதற்குத் தரலாம். பட்டுப்புடவை களை இரும்பு பீரோக்களில் வைப்பதைத் தவிர்த்து, துணிப் பைகள், பேப்பர் கவர்களில் சுற்றி மர அலமாரிகளில் வைக்கலாம். இரும்பு ஹேங்கரில் தொங்கவிடக் கூடாது. சரிகை மங்காமல் இருக்க, உட்புறம் திருப்பி அயர்ன் செய்யவும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை புடவைகளை நிழலில் காற்றாட உலர்த்தி, மடிப்புகளை மாற்றி மடித்து வைக்கவும்.

பட்டுப்புடவைக்கான பிளவுஸுக்கு லைனிங் கொடுக்கும்போது, சாதாரண லைனிங் துணியைவிட டூ பை டூ துணியில் லைனிங் கொடுத்தால், பட்டு பிளவுஸின் தரத்துக்கு ஈடு கொடுக்கும். விலையுயர்ந்த பிளவுஸ்களை அணியும்போது அக்குள் வியர்வையானது, துணியைப் பாழ்படுத்திவிடும். அதைத் தவிர்க்க, மார்க்கெட்டில் கிடைக்கும் வியர்வையை உறிஞ்சும் பிரத்யேக அண்டர் ஆர்ம் பேட்களை அணியலாம்.  

ஆடைகளைக் காப்பாற்றலாம்... அழகாக!

சில்க் காட்டன் புடவைகளுக்கு டிரை வாஷ் தேவையில்லை. ஊற வைக்காமல், சிறிதளவு ஷாம்பு கலந்த தண்ணீரில் அலசி எடுத்தாலே போதும். சரிகையும், நிறமும் மங்காமல் இருக்கும். ரெடிமேட் கஞ்சி பவுடரை பயன்படுத்தலாம். காட்டன் சுடிதார்கள், காட்டன் புடவைகளை கஞ்சி போட்டு உலர்த்தி, லேசான ஈரப்பதம் இருக்கும்போதே அயர்ன் செய்தால் நன்றாக அயர்னாகி இருக்கும். விலையுயர்ந்த காட்டன் புடவைகள், சுடிதார்களை முதல் இரண்டு முறை டிரைகிளீனிங் பண்ணவும்.

கிரேப், எம்ப்ராய்டரி ஆடைகள்!

மென்மையான கிரேப், ஷிப்பான் துணிகளை வெயிலில் காயவைப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக கனமான டவல், அல்லது துணியை வைத்து பிழிந்தால், ஈரத்தை டவல் உறிஞ்சிக்கொள்ள... துணி உலர்ந்துவிடும். அதன்பிறகு நிழலில் உலர்த்தி எடுத்தாலே போதும். டபுள் ஷேடேட் (இரண்டு கலர் காம்பினேஷன்) சுடிதார்கள் சாயம் போயிருந் தால், புதிதாக டிசைன்களை நெருக்கமாக இருக்கும் வகையில் பிரின்ட் போட்டு, புது உடை போல உபயோகிக்கலாம். எப்போதும் ஆடைகளின் உட்புறமாக சென்ட் அடிக்கவும். கற்கள் பதித்த ஆடைகளை மிகவும் இறுக்கமாக அணியாமல் சற்றே தளர்வாக அணிவதன் மூலம் கற்கள் உதிராமல் காக்கலாம்'' என்று ஆடைகளுக்கான ஆலோசனைகளை அள்ளித்தந்தார் சலீமா கமால்.

- வே.கிருஷ்ணவேணி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism