Published:Updated:

மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின்... அலட்டிக் கொள்ளாமல் பராமரிக்க, சூப்பரான ஐடியாக்கள்!

மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின்... அலட்டிக் கொள்ளாமல் பராமரிக்க, சூப்பரான ஐடியாக்கள்!

மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின்... அலட்டிக் கொள்ளாமல் பராமரிக்க, சூப்பரான ஐடியாக்கள்!

மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின்... அலட்டிக் கொள்ளாமல் பராமரிக்க, சூப்பரான ஐடியாக்கள்!

Published:Updated:
##~##

''நம்ம ஊர்ல கரன்ட் வர்றதே பெரிய விஷயம். இதுல கரெக்டா ஆபீஸ் கிளம்புற நேரமா பாத்துதானா இந்த மிக்ஸி மக்கர் பண்ணணும். கொறஞ்சது மூணு மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் இதுக்கு மொய் எழுத வேண்டியதா இருக்கே. எல்லாம் என் நேரம்.''

''ஹலோ... ஒரு நிமிஷம். அந்த மிக்ஸி என்னங்க பாவம் பண்ணுச்சு? நீங்க பண்ற தப்புக்கு, அதை ஏங்க குறை சொல்றீங்க?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''?????''

என்ன... ஷாக்காயிட்டீங்களா?! அதாவது, வாரத்துக்கு ஒரு தடவை அந்த மிக்ஸி மேல கொஞ்சமாச்சும் அக்கறை எடுத்திருந்தீங்கனா, இப்படியாகியிருக்குமா? மிக்ஸி மட்டும் இல்லீங்க... கிரைண்டர், வாஷிங்மெஷின், ஏர்கண்டிஷனர், வாட்டர் ஹீட்டர்னு உங்க வசதிக்காக வீட்டுக்குள்ள நீங்க வாங்கி வெச்சுருக்கற எந்தப் பொருளா இருந்தாலும், சரிவர பராமரிக்கலைனா, 'பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்'ங்கற மாதிரி தூக்கித்தான் வீச வேண்டிஇருக்கும்! இதுக்காகவேதான்.... வீட்டு உபயோகப் பொருட்களை எப்படி பராமரிக்கறதுனு உங்களுக்கெல்லாம்  சொல்லித் தரப் போறார்... சென்னை, குரோம்பேட்டை, 'எம்.எஸ்.எலெக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் சென்டர்' பாலமுருகன்.

மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின்...  அலட்டிக் கொள்ளாமல் பராமரிக்க,  சூப்பரான ஐடியாக்கள்!

மேஜிக் செய்யும் மிக்ஸி!

''பொதுவாக மிக்ஸியில் எல்லோரும் செய்கிற முதல் தவறு... ஓவர் லோடு. மசாலாவை ஜார் நிரம்பி வழியும் அளவுக்கு அரைப்பதுதான் பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. கடைசியில மசாலா நம் முகத்துல பாதி, சுவரில் பாதி என்று தெறித்து வழிந்து கொண்டிருக்கும். அது மட்டுமல்லாமல், மிக்ஸியின் கப்ளரும் (ஜாரின் அடிப்பகுதியிலும், மிக்ஸியின் மேல் பகுதியிலும் இருக்கும்) சூடாகி உடையும் வாய்ப்புள்ளது. அதனால் ஓவர் லோடை தவிருங்கள்.

ஒவ்வொரு முறை மிக்ஸியை பயன்படுத்தியவுடன் காட்டன் துணியால் துடைத்து, ஜாரின் உள்புறம், வெளிப்புறம் மற்றும் அடிப்பாகம் ஆகியவற்றைக் கழுவி, நன்றாகத் துடையுங்கள். குறிப்பாக, அடிபாகத்தில் தண்ணீர் தங்காமல் துணியால் துடைப்பது முக்கியம். இல்லையென்றால், பாசி பிடித்து துர்நாற்றம் வீசும். மிக்ஸியின் பிளேடு கூர்மையாக உள்ளதா என்பதை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளவும். மிக்ஸியின் கப்ளர் மற்றும் ஜாரின் அடியில் உள்ள கப்ளர் இரண்டும் சரியாக பொருந்திஉள்ளதா... இல்லை லூஸாகிவிட்டதா என்பதையும் கவனிக்க வேண்டும். இதுமாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்தி பராமரித்தாலே.... உங்கள் மிக்ஸி, மேஜிக் செய்ய ஆரம்பித்துவிடும்!

கைகொடுக்கும் கிரைண்டர்!

கிரைண்டரைப் பொறுத்தவரை நன்கு ஊற வைத்த அரிசியையும், உளுந்தையும் போட்டு அரைத்தால்... மோட்டாரின் இழுவைத் திறன் சுலபமாக இருக்கும். அரைப்பதற்கு முன் இயந்திரத்தின் லாக்குகள், அதாவது டிரம்மின் மூடி, ஆட்டுக்கல்லை இணைக்கும் சங்கிலி போன்றவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதைக் கவனியுங்கள். மாவைத் தள்ளும் துடுப்பும் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். அரைத்து முடித்ததும், முறைப்படி நல்ல நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் அரைத்த மாவு அங்கும் இங்கும் ஒட்டிக்கொண்டு, அடுத்த முறை பயன்படுத்தும்போது துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும். சீரான பராமரிப்பு... கிரைண்டரின் லைஃபை அதிகரிக்கும்.

மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின்...  அலட்டிக் கொள்ளாமல் பராமரிக்க,  சூப்பரான ஐடியாக்கள்!

வாவ்... வாஷிங்மெஷின்!

முதலில்... இடிபாடுகள் இல்லாத சமமான மற்றும் தாராளமான இடத்தில் வாஷிங் மெஷின் வைக்கப்பட வேண் டும். மெஷினின் கொள்ளளவுக்கு அதிகமாக துணிகளைத் திணிக்கக் கூடாது. துணிகளில் காசு, சாவி, பர்ஸ், செல்போன், தலை முடி, சேஃப்டி பின் என ஏதாவது உள்ளதா என்று சோதித்த பின் மெஷினில் போடுங்கள். ஒவ்வொரு தரமும் வாஷிங் மெஷினை உபயோகப்படுத்தியவுடன் டஸ்ட் ஃபில்டரை (dust filter)  சோதியுங்கள். பட்டன்கள், பாக்கெட்டுகளில் மறதியாக விடப்படும் நாணயங்கள், சாவி, சேஃப்டி பின் இவையெல்லாம் அங்கேதான் சென்று தங்கிவிடும். இவற்றால் ஃபில்டர் துரு பிடிக்க வாய்ப்புள்ளதால், உடனுக்குடன் கிளீன் செய்துவிடுங்கள்.

அதேபோல் டோரில் பொருத் தப்பட்டிருக்கும் 'கேஸ்கட்'  நன்றாக துடைக்கப்பட வேண்டியது அவசியம். மழைக்காலங்களில் இதில் பாசி பிடிக்க வாய்ப்புள்ளதால், துவைத்து முடித்ததும் 15 நிமிடங்கள் டோரை திறந்து வைத்து, கேஸ்கட் மற்றும் டிரம் ஆகியவற்றைத் துடையுங்கள்.

கூடுமானவரை கால் மிதியடி, பொம்மைகள் போன்ற வற்றை வாஷிங்மெஷின் பயன் படுத்தி துவைப்பதைத் தவிருங்கள். இவற்றில் உள்ள ரோமம் போன்ற நூலிழைகள் இயந்திரத்தில் சிக்கினால், அவற்றைச் சுத்தம் செய்து வெளியில் எடுப் பது சிரமம் தரும் விஷயமாக இருக்கும். துவைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீர், சுத்தமாக இருப்பது அவசியம். மெஷினுக்கு வரும் தண்ணீர் வேகமாக வரு வதும் அவசியம். அப்போது தான், வாஷிங்மெஷினின் செயல் பாடு வேகமாக இருக்கும். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கம்ப்ளீட் சர்வீஸ் செய்து கொள்வது, மெஷினின் ஆயுள் காலத்தை நீட்டிக்கும்'' என்று டிப்ஸ்களை அழகாக அடுக்கினார் பாலமுருகன்.

வாட்டர் ஹீட்டர், வாட்டர் பியூரிஃபயர், சிம்னி, மைக்ரோவேவ் அவன், ரெஃப்ரிஜிரேட்டர், ஏர்கண்டிஷனர்... போன்றவற்றின் பராமரிப்பு குறித்து அவர் தந்த ஆலோசனைகள்... அடுத்த இதழில்!

- பொன்.விமலா, படங்கள்: அபிநயா சங்கர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism