Published:Updated:

கின்னஸ் சாதனைக்காக 4,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி! (படங்கள்)

விகடன் விமர்சனக்குழு
கின்னஸ் சாதனைக்காக 4,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி! (படங்கள்)
கின்னஸ் சாதனைக்காக 4,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி! (படங்கள்)

விருதுநகர்:  125வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  கின்னஸ் முயற்சியாக யோகா சங்கிலித்தொடர் நிகழ்ச்சியை இன்று நிகழ்த்தினர்.

கின்னஸ் சாதனைக்காக 4,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி! (படங்கள்)

4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்த யோகா சங்கிலித்தொடர் நிகழ்ச்சியை விருதுநகர் எம்.எல்.ஏ., பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

கின்னஸ் சாதனைக்காக 4,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி! (படங்கள்)

விருட்ஸாசனம், உட்கட் ஆசனம், திரிகோணாசனம், பரஸ்வோட்சனம், வீரபத்ராசனம், பார்ஸவ கோனா சனம், குதபத ஆசனம், பார்ஸவசயோக முத்ரா ஆசனம் என பள்ளி மாணவர்கள் 10 ஆசனங்களை 4 கி.மீட்டர் தூரத்துக்கு சங்கிலித்தொடர் போல் அமைத்திருந்தது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.

கின்னஸ் சாதனைக்காக 4,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி! (படங்கள்)

தென் கிழக்காசிய யோகா பெடரேஷன் செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாணவர்கள் இந்த 10 ஆசனங்களை பார்வையாளர்களுக்கு செய்து காட்டினர். இதில் யோகா பயிற்சியாளர் அம்பாள் முத்துமணி, நோட்டரி பப்ளிக் விஜயக்குமார், மாவட்ட தடகள பயிற்சியாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கின்னஸ் சாதனைக்காக 4,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி! (படங்கள்)

கின்னஸ் சாதனைக்காக எங்கள் பள்ளி மாணவர்கள் இந்த யோகா சாதனையை செய்துள்ளனர். இந்த முயற்சி வெற்றியடைய மாணவர்களை வாழ்த்துவதாக கே.வி.எஸ். பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

-எம்.கார்த்தி


படங்கள்: ஆர்.எம். முத்துராஜ்