Published:Updated:

“அவமானம் எனக்கல்ல... ஐ.ஐ.டி.-க்கு!”

ஃபீலிங்ஸ்

“அவமானம் எனக்கல்ல... ஐ.ஐ.டி.-க்கு!”

ஃபீலிங்ஸ்

Published:Updated:
##~##

 ல்லோருக்கும் பிடித்த ஐ.ஐ.டி ஆசிரியை; மாணவர் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டுபவர்; 668 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர்; 2006-ம் ஆண்டின் வீரதீர செயல்களுக்கான தமிழக அரசின் 'கல்பனா சாவ்லா' விருது பெற்றவர்; பிஹெச்.டி மாணவர்கள் பலருக்கும் வழிகாட்டியவர்... என்று எத்தனையோ பெருமைகள் கைவரப் பெற்றாலும், 'பேராசிரியர்' எனும் அங்கீகாரம் மட்டும் கிடைக்கவில்லை.... வசந்தா கந்தசாமிக்கு.

''இதற்குக் காரணமே... நான் ஒரு பெண் என்பதுதான்'' என்று வசந்தா சொல்வதுதான் உச்சபட்ச அதிர்ச்சி.

சென்னை, அடையாறு ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் பதவியிலிருந்த வசந்தாவுக்கு... படிப்படியாக பதவி உயர்வுகள் வரவே இல்லை. பொறுத்துப் பார்த்தவர், உயர் நீதிமன்ற கதவுகளைத் தட்டினார் -  1995-ல்! அங்கே... நீண்ட தூக்கமிட்ட அவருடைய வழக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, '1996-ல் இருந்து பேராசிரியை பதவியை அவருக்கு வழங்க வேண்டும். அதற்கான பலன்களையும் தரவேண்டும்' என்று ஒருவழியாக தற்போது தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.

“அவமானம் எனக்கல்ல... ஐ.ஐ.டி.-க்கு!”

தெம்புகூடியவராக நம்மிடம் பேசிய வசந்தா... ''பொதுவாக பெண் என்பவள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற மனநிலையோடுதான் இந்தச் சமூகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பெண், மாணவர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருப்பதை ஐ.ஐ.டி-யில் இருக்கும் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இங்கே ஆறு, ஏழு ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தவர்கள் எல்லாம்கூட பேராசிரியர் எனும் தகுதியைப் பெற்றுள்ளனர். ஆனால், 668 ஆய்வுக் கட்டுரைகள் முடித்த நான், இன்னமும் உதவிப் பேராசிரியர். தகுதியற்ற பலரும் பேராசிரியர்கள் என பதவி உயர்த்தப்பட்டிருப்பது... எனக்கான அவமானம் அல்ல. அது ஐ.ஐ.டி-க்கான அவமானம்.

கணிதத் துறையில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்திருக்கும் எனக்கு சரியான நேரத்தில் பதவிகள் கிடைத்திருந்தால்... இந்நேரம் நான் துணைவேந்தராகவே இருந்திருப்பேன். ஐ.ஐ.டி, எனக்கான அங்கீகாரத்தை வழங்காததுக்கு முக்கிய காரணமே... ஒரு பெண், இந்த அளவுக்கு தகுதிகளோடு இருப்பதா என்கிற வன்மம்தான். கூடவே, சாதியும் ஒரு காரணமாக இருக்கலாம்'' என்ற வசந்தா,

''இத்தனை ஆண்டுகளாக தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த எனக்கு, இந்தத் தீர்ப்பு மனதில் புது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. நீதிக்கு கண் இருக்கிறது என்பதை, நீதியரசர் நாகமுத்துவின் தீர்ப்பு தெளிவாகக் காட்டுகிறது'' என்று பெருமூச்சுவிட்டார்.

இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக ஐ.ஐ.டி-யில் பேராசிரியர் நியமனங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்!

- பொன்.விமலா