Published:Updated:

'பெண்' என்று பிரித்துப் பார்க்காமல் எழுதுங்கள்..!

பயிற்சி

'பெண்' என்று பிரித்துப் பார்க்காமல் எழுதுங்கள்..!

பயிற்சி

Published:Updated:
##~##
'பெண்' என்று பிரித்துப் பார்க்காமல் எழுதுங்கள்..!

 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்... ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை, மாணவர்கள் மத்தியில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே... தங்கள் பேனா மூலம் எழுத்திலும், சமூகத்திலும் பல புதுமைகள் படைக்கக் காத்திருக்கும் மாணவர்களுக்கான சாதனைக் களமே இப்பயிற்சித் திட்டம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2013-14 ஆண்டுக்கான மாணவப் பத்திரிகையாளர்களாக 15 பெண்கள் உட்பட 57 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட, அவர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்களிலும் சென்னை, தி.நகர், மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற நீதிபதி சந்துரு, நடிகர் விஜய் சேதுபதி, ஒளிப்பதிவாளர் செழியன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, 'பிக் எஃப்.எம்’ தொகுப்பாளர் பாலாஜி, தமிழ்நாடு மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த திவ்யா உள்ளிட்ட பலரும், விழா மேடையை தகவல் பொக்கிஷமாக மாற்றி மாணவர்களிடம் தந்தனர்.

'பெண்' என்று பிரித்துப் பார்க்காமல் எழுதுங்கள்..!
'பெண்' என்று பிரித்துப் பார்க்காமல் எழுதுங்கள்..!

ஈழத்தமிழர் போராட்டத்துக்காக மாணவர்களை ஒருங்கிணைத்த தமிழ்நாடு மாணவர் இயக்கம் மையக்குழு உறுப்பினர் திவ்யா பேசும்போது மாணவர்கள் நெஞ்சுக்குள் தீப்பொறி பறந்தது. ''நாய் மனிதனை கடித்தால் அது சம்பவம். மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி. செய்திகளைப் பகுத்து ஆராய்ந்து பதிய வைப்பதில்தான் உங்களுடைய பெரும்பங்கு இருக்கிறது. மன்னர் காலத்தில் ஓலைச்சுவடிகளில் பரிமாறப்பட்ட செய்திகள், காகித கண்டுப்பிடிப்புக்கு பின் அசுர வளர்ச்சிஅடைந்து ஜனநாயகக் கருத்துக்களைப் பரப்ப ஆரம்பித்தது. இன்று ஊடகம் என்பது அரசியல் கட்சிகள் பலவற்றின் கையில் இருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.

'பெண்' என்று பிரித்துப் பார்க்காமல் எழுதுங்கள்..!

பத்திரிகை என்பது சந்தைப் பொருளாதாரமாகி, வாசகர் அனைவரும் நுகர்வோராக மாறிக்கொண்டு வருகின்றனர். ஆனால், விகடன் இன்றும் தனது பார்வையை தொலைநோக்குப் பார்வையாகவே காட்டிக் கொண்டிருக்கிறது. அரசியல் முதல் சினிமா வரை எதைப் படித்தாலும் நம்பிக்கையான செய்திகள் இருக்கும்.

இந்த சமூகத்தில் ஒரு செய்தியை பதிவு செய்வது மட்டும்தான் நம்முடைய வேலையா? பத்திரிகைகளில் நீங்கள் என்ன மாதிரியான சொல்லாடல்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். நாடகக் காதல், கள்ளக் காதல் இதுமாதிரியான வார்த்தை களைத் தவிருங்கள். ஒரு ஆண் கொலை செய்தால்... அது சாதாரண செய்தி. இதுவே ஒரு பெண் கொலை செய்தால் அது பூதாகாரச் செய்தியா? ஆண், பெண் என்கிற பாகுபாடு பத்திரிகையில் வேண்டாம். பெண் என்று பிரித்துப் பார்க்காமல் எழுதுங்கள்''

- திவ்யா அனல் பறக்கப் பேசி முடித்ததும், மாணவர்கள் மத்தியில் உற்சாக ஆரவாரம்!

இரண்டு நாட்கள் பயிற்சி முடிந்ததும் முகத்தில் உற்சாக ஒளியுடன் பேனாவில் புதுயுகம் படைக்கும் முனைப்பில் கம்பீரமாக பறந்தனர் மாணவப் பத்திரிகையாளர்கள்!

- பொன்.விமலா

படங்கள்: வீ.நாகமணி, சொ.பாலசுப்ரமணியன், ஜெ.வேங்கடராஜ்

'பெண்' என்று பிரித்துப் பார்க்காமல் எழுதுங்கள்..!

''ஆஸ்காருக்கும் எனக்கும் எட்டு கிலோ மீட்டர்!''

விஜய் சேதுபதியை மாணவர்கள் பேட்டியெடுக்க ஆரம்பித்ததும் அரங்கமே லகலகதான்! மாணவர்கள் எடக்குமடக்காக கேள்வி கேட்டாலும், சமயோசிதமாக பதில் அளித்து கைதட்டல்களை அள்ளினார்.

''ஆஸ்காருக்கும் உங்களுக்கும் எவ்ளோ தூரம் இருக்கு சார்?' என்று ஒரு மாணவி கேட்க,

''எனக்கும் ஆஸ்காருக்கும் எட்டு கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கு. ஆமாம்... எனக்கும் ஏ.ஆர். ரஹ்மான் சார் வீட்டுக்கும் எட்டு கிலோ மீட்டர் தூரம்தான். அவர்கிட்டதான் ரெண்டு ஆஸ்கார் அவார்டு இருக்கே!'' என்று கலாய்ப்பாக விஜய்சேதுபதி பதில் சொல்ல, விசில் சத்தம் விண்ணைக் கிழித்தது.