Published:Updated:

“விரும்பிச் சமைக்கறதாலதான், யுகங்கணக்கா பூமி பசியாறுது!”

“விரும்பிச் சமைக்கறதாலதான், யுகங்கணக்கா பூமி பசியாறுது!”

“விரும்பிச் சமைக்கறதாலதான், யுகங்கணக்கா பூமி பசியாறுது!”

“விரும்பிச் சமைக்கறதாலதான், யுகங்கணக்கா பூமி பசியாறுது!”

Published:Updated:
##~##

ல்வி, அரசியல், தொழில்துறை, விண்வெளி என்று மகளிர் உலகத்தில் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்தாலும்கூட, பெண்களை சமையலறையில் இருந்து விடுவிக்கும் சூழல்... இந்த நூற்றாண்டிலும் இல்லை என்றே தோன்றுகிறது. இன்னொரு பக்கம், சூழல் சாதகமாக இருந்தாலும்கூட, 'என் கையால என் குடும்பத்துக்கு சமைக்கறதுதான் எனக்கு திருப்தி’ என்று கிச்சனை விட்டுக் கொடுக்காத பெண்களும் இங்கு பலர். 

'சமையல் உங்களுக்கு சுதந்திரமா, சங்கடமா..?’ என்று சில வாசகிகளிடம் கேட்டபோது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வனிதா ஆனந்த், ஈரோடு: ''கணவரை ஏழரை மணிக்கு வேலைக்கும், பொண்ணை எட்டரை மணிக்கு ஸ்கூலுக்கும் அனுப்பிட்டு, நானும் வேலைக்குக் கிளம்பணும். தினமும் காலை அஞ்சரை மணிக்கே ஆரம்பமாகிடும் என் பொழுது. காபி வேலை முடிச்சு, இட்லி அல்லது தோசை, சட்னி, மதியத்துக்கு குழம்பு, கூட்டு, பொரியல்னு செஞ்சு முடிக்கிறதுக்குள்ள, ஒரு போர்க்களத்துக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கும். ஆனாலும், ஒரு நாளும் எனக்கு சமையல் அலுக்காது. அதுவும் சொந்தக்காரங்க வீட்டுக்கு வர்றப்போ, வேலை இரண்டு மடங்காகும். அப்பவும்கூட வீடு கலகலனு இருக்கற சந்தோஷத்துல, சமையல் வேலை கஷ்டமாவே தெரியாது. ஆனா... என்னிக்காச்சும் உடம்பு சரியில்லாம போகும்போது, 'உட்கார வெச்சு யாராச்சும் சமைச்சுப் போட மாட்டாங்களா... குறைந்தபட்சம் வெந்நீராவது வெச்சுத் தர மாட்டாங்களா’னு மனசு ஏங்கும்.''

“விரும்பிச் சமைக்கறதாலதான், யுகங்கணக்கா பூமி பசியாறுது!”

வசந்தா, மதுரை: ''என் மகனுக்கு கல்யாணமாகி நான் பேத்தி எடுத்துட்டேன். முதல் முதலா சமைக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து... இப்பவும் என் வீட்டு கிச்சன், என் கஸ்டடியில்தான் இருக்கு. என் மருமகள்கிட்டகூட பொறுப்பை கை மாத்தாம, நானேதான் இழுத்துப் போட்டுப் பார்த்துட்டு இருக்கேன். 'என்னதான் இருந்தாலும் எனக்கும் நீங்க காபி எடுத்துட்டு வந்து கையில கொடுக்கறதைப் பார்த்தா, என்னை மத்தவங்க என்ன நினைப்பாங்க..?’னு என் மருமகள் சங்கடப்படுவா. என் மகன் வேற எங்காயாச்சும் சாப்பிட்டு வந்து, 'உங்க சமையல் மாதிரி இல்லம்மா’னு சொல்லும்போது கிடைக்குற பலமும், சந்தோஷமும் இன்னும் சுறுசுறுப்பா என்னை கிச் சனுக்குள்ள நடமாட வைக்குது.''

ரமாலஷ்மி, மைசூர்: ''நான் சென்ட்ரல் ஃபுட் டெக்ன லாஜிகல் ரிசர்ச் இன்ஸ் டிட்யூட்ல ஆராய்ச்சியாளரா இருக்கேன். எப்போ வேலை முடிஞ்சு வீடு திரும்புவேன்னு தெரியாது. அதனால, எப்பவுமே வகை வகையான சமையல்னு இழுத்துப் போட்டுக்க மாட்டேன். எது முடியுதோ, அதை பண்ணிக்குவேன். பசங்க அதை அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்குவாங்க. முக்கியமான விஷயம்... ஞாயிற்றுக்கிழமை மட்டும் சமைக்கவே மாட்டேன். அது அவரோட பொறுப்பு. பிஸினஸ்மேனான அவருக்கு சண்டே ஏதாவது வேலை வந்துட்டா, ஹோட்டலுக்கு போயிடுவோம். சமையல் கொஞ்சம் ஈஸி... கொஞ்சம் கஷ்டம்.''

“விரும்பிச் சமைக்கறதாலதான், யுகங்கணக்கா பூமி பசியாறுது!”

சாரதா, சென்னை: ''வீட்டுலயே இருக்குற எனக்கு சமையல்தான் ஒரே பொழுதுபோக்கு. கணவருக்கும் குழந்தைகளுக்கும் பிடிச்ச மாதிரி யோசிச்சு யோசிச்சு சமையல் பண்ணுவேன். பாத்திரம் கழுவ, வீட்டைப் பெருக்கனு மேல் வேலைகளுக்கு ஆள் இருக்கறதால, சமையல் சிரமமா தெரியாது. என்னதான் ரசிச்சு ரசிச்சு சமைச்சாலும், 'எப்பப் பார்த்தாலும் இந்த கிச்சனே கதினு கிடக்கிறோமே’னு அப்பப்ப எரிச்சல் வரத்தான் செய்யும். அதனாலதான் ரெண்டு பசங்களுக்கும் காபி, தோசை, நூடுல்ஸ்னு சின்ன சின்ன சமையல் கத்துக் கொடுத்திருக்கேன். மனசு வெறுத்துப் போற நாட்கள்ல, அவங்க புரிஞ்சுகிட்டு சட்டுனு ஒரு காபி போட்டுட்டு வந்து கையில கொடுக்கும்போது, அதுதான் சொர்க்கம் போங்க!''

“விரும்பிச் சமைக்கறதாலதான், யுகங்கணக்கா பூமி பசியாறுது!”

சாந்தி கிரேஸ், மைசூர்: ''என்னதான் வாழ்க்கை பரபரப்பா இருந்தாலும், சமையல்ல சமரசம் செய்துக்கவே மாட்டேன். ஏனோ தானோனு சமைச்சா, அது பசங்களுக்குப் பிடிக்காது, குப்பைத் தொட்டிக்குதான் போகும். அவங்க வயிறு காயுறது மனசுக்கு தாங்காது. அதனால, அவங்ககிட்ட கேட்டுக் கேட்டுதான் சமைப்பேன். சொந்தக்காரங்க, நண்பர்கள்னு யாருக்கு வயி றார சமைச்சுப் போட்டாலும் எனக்கு சந்தோஷமா இருக்கும். மகளிர் விடுதி வார்டனா இருக்கற நான், வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கிப் போய் அங்க இருக்கிற பெண்களை அப்பப்போ என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சாப்பிடச் சொல்றப்போ, அவ்வளவு சந்தோ ஷமா இருக்கும். பெண்கள் அப்படி சமையலை மனசார விரும்பிப் பண்றதாலதானே, இந்த பூமி இத்தனை யுகங்களா பசியாறுது.?!''

- ம.பிரியதர்ஷினி, இ.பிரியதரிசினி

படங்கள்: பா.காளிமுத்து, மு.உ.ஷமீம் ஃபகாத்