Published:Updated:

பிரமிக்க வைக்கும் பேப்பர் ஜுவல்ஸ்...

25% முதலீடு... 75% லாபம்!ஃபேஷன்

பிரமிக்க வைக்கும் பேப்பர் ஜுவல்ஸ்...

25% முதலீடு... 75% லாபம்!ஃபேஷன்

Published:Updated:
##~##

பெங்களூருவைச் சேர்ந்த கிருத்திகா கார்த்திக், தன் ஃபேஸ்புக் அக்கவுன்ட் மூலம் பல நாடுகளுக்கு தன்னுடைய பேப்பர் கம்மல்களை ஏற்றுமதி செய்துவருகிறார்.

'அட!’ என்ற ஆச்சர்யத்தோடு அவரிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சொந்த ஊரு கோயம்புத்தூர். பெங்களூரு வந்து ஏழு வருஷமாச்சு. நான் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். கார்த்திக், ஹார்டுவேர் இன்ஜினீயர். ஒரே பொண்ணு பிரக்ருதி. எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆர்ட், கிராஃப்ட்ஸ்ல ஆர்வம். அப்பா, அம்மா ஆசைக்காக இன்ஜினீயரிங் படிச்சேன். இன்னொரு பக்கம் டிராயிங், ஆயில் பெயின்ட்டிங்னு எல்லாத்தையும் இன்டர்நெட் பார்த்தே கத்துகிட்டு எக்ஸ்பர்ட் ஆகிட்டேன்.

பிரமிக்க வைக்கும் பேப்பர் ஜுவல்ஸ்...
பிரமிக்க வைக்கும் பேப்பர் ஜுவல்ஸ்...

குழந்தையைக் கவனிச்சுக்கிறதுக்காக வேலைக்கு போகாம வீட்ல இருந்த நான், ஏற்கெனவே கத்துகிட்ட கிராஃப்ட்ஸை எல்லாம் வீட்லேயே செய்து பார்த்தேன். பெங்களூரூல ஒரு இன்ஸ்டிட்யூட்ல பெயின்ட் அண்ட் பென்சில் ஸ்கெட்ச் கிளாஸ் எடுத்தேன். மாலை நேரம் வீட்டுலயும் வகுப்புகள் எடுத்தேன். அப்பதான் ஃப்ரெண்ட் மூலமா பேப்பர் கம்மல் பத்தி தெரிய வந்துச்சு.

ஆர்வத்துல பேப்பர் கம்மல் செய்யக் கத்துக்கிட்ட நான், அதை காதில் போட்டப்போ, 'நல்லாயிருக்கே... எனக்கு பண்ணி கொடேன்!’னு பலரும் கேட்க, ஒன்றரை வருஷத்துக்கு முன்ன... பிஸினஸா ஆரம்பிச்சேன். வரவேற்பு பெருகவே... ஃபேஸ்புக்ல 'க்ரித்தி கிரியேஷன்ஸ்’ங்கிற பேர்ல ஒரு பேஜ் ஓபன் பண்ணி, நான் செய்திருந்த 200-க்கும் மேற்பட்ட கம்மல்களை அதுல ஆல்பமா போஸ்ட் பண்ணினேன். அதைப் பார்த்த ஆப்ரிக்க தமிழர் ஒருத்தர், என்னோட கலெக்ஷன்ஸ் அத்தனை யும் வாங்கி, அங்க    சேல் பண்ணினார். அதுக்கப்புறம் சிங்கப்பூர், இத்தாலினு இப்போ என்னோட பொருட்கள் சேல் ஆக ஆரம்பிச்சிருக்கு.

இப்போ வீட்டில் இருந்துட்டே மாசம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். எல்லாப் புகழும் பேப்பர் கம்மலுக்கே! பேப்பர் கம்மலைப் பொறுத்தவரை பெருசா செலவு செய்ய வேண்டாம். கிரியேட்டிவிட்டி போதும். இந்த தொழிலில் 25% செலவழிச்சா, 75% லாபம் பார்க்கலாம்!'' என்றவர், நமக்காக கற்றுத் தந்த பேப்பர் கம்மல் செய்முறை... பாக்ஸில்!

- ம.பிரியதர்ஷினி

படங்கள்: நா.வசந்தகுமார்

பேப்பர் கம்மல் செய்ய தேவையான பொருட்கள்: க்வில்லிங் ((Quilling)) ஸ்ட்ரிப்... ப்ளூ மற்றும் ஆரஞ்ச் கலர்  - தலா 1 மீட்டர், க்வில்லிங் நீடில் - 1, ஃபெவிகால் - 1 டப்பா, ஹூக் - 2, ப்ளையர் - 1 (ஹூக்கை டைட் செய்யும் கருவி), கத்தரிக்கோல் - 1.

செய்முறை: ப்ளூ மற்றும் ஆரஞ்சு நிற க்வில்லிங் ஸ்ட்ரிப்பை ஒரு விரல் நீளத்துக்கு வெட்டிக் கொள்ளுங்கள். ப்ளூ ஸ்ட்ரிப்பின் ஒரு முனையில் ஃபெவிகாலை சின்னதாக தடவி (படம் 1), அதன் மேல் ஆரஞ்சு ஸ்ட்ரிப்பின் ஒரு முனையை அழுந்த ஒட்டுங்கள் (படம் 2). இரண்டு நிமிடம் ஃபேனில் காய வையுங்கள்.

பிரமிக்க வைக்கும் பேப்பர் ஜுவல்ஸ்...

இனி, ஒரு விரல் நீளம் மற்றும் அகலமுள்ள சின்ன அட்டையில் ஆரஞ்சு நிற முனையை வைத்து படத்தில் காட்டியுள்ளது போல அட்டையில் வைத்து மடக்குங்கள் (படம் 3). மடக்கிய ஆரஞ்சு முனையின் மேல் சிறிதளவு ஃபெவிகாலை தடவி, ப்ளூ நிறம் முடியும் வரை படத்தில் காட்டியுள்ளது போல சுருட்டி (படம் 4), இறுதியில் முடியும் ப்ளூ முனையில் சிறிதளவு ஃபெவிகால் தடவி ஏற்கெனவே சுருட்டியவற்றோடு ஒட்டி காயவிடுங்கள் (படம் 5). ஐந்து நிமிடம் கழித்து அட்டையில் இருந்து உருவினால்... நீள் வட்ட வடிவில் உங்களுக்கு பேப்பர் டிசைன் கிடைத்திருக்கும் (படம் 6).

பிரமிக்க வைக்கும் பேப்பர் ஜுவல்ஸ்...

இதேபோல தனித்தனியாக நான்கு நீள்வட்ட டிசைன்கள் உருவாக்குங்கள். இப்போது அவற்றை எல்லாம் பூ வடிவில் படத்தில் காட்டியுள்ளது போல வைத்து, ஒவ்வொரு பூவிதழ் டிசைன் முனையிலும் சிறிது பெவிகாலை தடவி தனித்தனி இதழ்கள் சேர்ந்து, ஒரு பூவிதழாக மாறுவதுபோல ஒட்டுங்கள் (படம் 7). இதேபோல மீண்டும் நான்கு ஸ்டார் பூவிதழ்கள் சேர்ந்த டிசைனையும் உருவாக்கி, அவற்றின் அடியில் ஃபெவிகால் தடவி, ஏற்கெனவே தயாரித்த பூவிதழ் மேல் ஒட்டுங்கள். அவை பார்ப்பதற்கு விரிந்த பூவிதழ்கள் காட்சியளிப்பது போல இருக்கும்.

இனி மறுபடியும் ப்ளூ ஸ்ட்ரிப்பை ஒரு விரல் நீளத்துக்கு வெட்டி அதன் ஒரு முனையில் ஃபெவிகால் தடவி, அதன் மேல் ஆரஞ்சு ஸ்ட்ரிப்பை ஒட்டுங்கள். காய்ந்ததும் க்வில்லிங் நீடிலில் ப்ளூ முனையை வைத்து அதன் முனையில் லேசாக பெவிகால் தடவி ஒட்டுமொத்தமாக சுருட்டுங்கள். இறுதி முனையின் மேல் பெவிகால் ஒட்டி விடுங்கள். (படம் 8)

இந்த குட்டி பந்தை, ஏற்கெனவே செய்து வைத்திருக்கும் ஸ்டார் வடிவ டிசைன் மேல் ஃபெவிகால் தடவி ஒட்டுங்கள் (படம் 9). பத்து நிமிடங்கள் காய்ந்ததும் ஏதாவது ஓரிடத்தில் ஹூக் மாட்டி ப்ளையர் கொண்டு டைட் செய்துவிட்டால் (படம் 10), அட்டகாசமான ஸ்டார் கம்மல் ரெடி!

இதனை 70 - 80 ரூபாய் விலை வைத்து விற்கலாம்.