Published:Updated:

தினம்தோறும் ஒரு விலை...வாழ்க்கையை விழுங்கிய 'விலை' !

கூடவே ஒரு குற்றவாளி !ஆபத்துகளை அடையாளம் காட்டும் அலர்ட் தொடர்

தினம்தோறும் ஒரு விலை...வாழ்க்கையை விழுங்கிய 'விலை' !

கூடவே ஒரு குற்றவாளி !ஆபத்துகளை அடையாளம் காட்டும் அலர்ட் தொடர்

Published:Updated:
தினம்தோறும் ஒரு விலை...வாழ்க்கையை விழுங்கிய 'விலை' !

கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் பலர், சூழ்நிலை காரணமாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் 'வெப் கேமரா'வையே வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் விபரீதம், நம்மில் பலர் ஜீரணிக்க முடியாத விஷயம். இது சம்பந்தமான ஒரு வழக்கும் எங்களிடம் வந்தது.

சென்னையில் வசிக்கும் மிகவும் ஆசாரமான, நடுத்தரக் குடும்பம் அது. அந்த வயதான தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். திருமணம் முடிந்த மகன் வெளிநாட்டில் பணியாற்ற, மருமகள் உள்ளூரிலேயே  தனியார் நிறுவனத்தில் வேலையில் இருந்தார். திருமண வயதிலிருக்கும் மகள் கூடவே வசிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூந்தென்றலாக மணம் வீசிக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தில் திடீரென விளைந்தன குழப்ப முடிச்சுகள்.

வீட்டிலிருந்த நகைகள் ஒவ்வொன்றாக திருடு போக ஆரம்பித்தன. வைத்த பணமும் மாயமாக மறைந்தது. வெளியிலிருந்து திருடன் வருவதற்கான வாய்ப்பும் அறிகுறியும் இல்லை. 'அதற்காக வீட்டுக்குள் இருப்பவர்களையே சந்தேகப்படுவதா?’ என்று குழம்பித் தவித்த அந்தத் தம்பதியிடம், 'உங்களுக்கு வேண்டாதவங்க, உங்க வீட்டுக்குள்ள பில்லி சூனியம் வெச்சிருக்காங்க...’ என்று யாரோ குண்டை தூக்கிப் போட, கேரளா சென்று ஏறத்தாழ ஒரு லட்சம் செலவு செய்து பில்லி சூனியத்தை எடுத்த (!) வயதான அந்தத் தம்பதி, நிம்மதி பெருமூச்சுடன் வீடு திரும்பினர்.

மறுநாளே, வீட்டில் வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாயைக் காணவில்லை என்றதும் பரிதவிப்புடன் எங்களிடம் வந்தனர்.

திருடனுக்குப் பொறி வைக்க, பத்தாயிரம் ரூபாயை பூஜை அறையில் வைத்தோம். கைகளில் பட்டால், வயலட் நிற கறைகள் படிந்து, மறைய சில நாட்கள் ஆகக்கூடிய ரசாயனத்தை ரூபாய் நோட்டுகளில் தடவியிருந்தோம்.

மூன்றாவது நாளே... கரன்ஸிகள் காணாமல் போக... மருமகளின் கைகளில் வயலட் நிற கறை! அது எப்படி வந்தது என்பது அவருக்குப் புரியவில்லை. நாங்களும் எதையும் காட்டிக் கொள்ளாமல், அவரைப் பின்தொடர்ந்தோம். போன் மற்றும் இணைய நடவடிக்கைகளைக் கூர்ந்து கண்காணித்தோம். படுக்கையறையில் இருந்த கணினியில் 'ஸ்பை சாஃப்ட்வேர்’ பொருத்தினோம்.

சில நாட்களில், 'பணத்தைக் கொண்டு வா’ என்று ஒரு ஆணிடமிருந்து அவருக்கு ஒரு மெஸேஜ் வந்தது. 'வெப் கேமரா’வில் யாரோ ஒரு ஆணுடன் இவள் 'எல்லை’ மீறிப் பழகப்போய், அதையெல்லாம் பதிவு செய்து வைத்துக் கொண்டு இவளிடம் பணம் பறித்துக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. அந்தப் பெண்ணுக்கு வந்த இன்னொரு எஸ்.எம்.எஸ்-ஸில் இன்னொரு ஆண், 'பணத்தை உன் பேங்க் அக்கவுன்ட்டில் போட்டு விட்டேன். 'வெப்’-க்கு வா’ என்று அழைத்திருந்தான். அதிர்ச்சியின் உச்சமாக, மிரட்டுகின்ற ஆணுக்கு பணம் கொடுப்பதற்காக வீட்டில் திருடிய பணம் போதாமல், இரவு  நேரங்களில் தன் அறையில் இருக்கும் கணினியின் வழியே இன்னொரு ஆணிடம் வெப் கேமராவில் உடலைக் காட்டி அந்தப் பெண் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதெல்லாம் தெரிய வந்தபோது, அவரின் கணவர் அதிர்ச்சியில் துடித்து,  விவாகரத்து செய்துவிட்டார். உறவு, நட்பு, அலுவலக வட்டத்துக்கும் இந்த விஷயங்கள் தெரியவர, இப்போது தலை குனிந்து நிற்கிறார் அந்தப் பெண்!

வெப் கேமரா, அன்பான, ஆக்கபூர்வ தகவல் தொடர்புக்கான வெளியாக இருக்க வேண்டுமே தவிர, சபலத்தால் வாழ்க்கையையே பறிக்கும் வில்லனாகி விடக்கூடாது என்பதற்கு இதைவிட உலுக்கும் உதாரணம் வேண்டுமோ!

அடுத்து, மிஸ்டு காலுக்கு மயங்கி, வாழ்கையையே 'மிஸ்' செய்யவிருந்த  இளம் பெண்ணின் ஷாக்கிங் கதை பற்றி...

- திகில் பரவும்...

உஷார்!

இப்போதெல்லாம், ‘‘சார்... ஒருத்தன் என்னோட அந்தரங்க போட்டோவை தன்னோட மொபைல்ல வெச்சுக்கிட்டு, என்னை மிரட்டு-றான்...’’ என்று எங்களிடம் வரும் இளம் பெண்-களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

‘‘நடவடிக்கையில இறங்குவோம். ஆனா, உங்க அந்தரங்க போட்டோ எப்படி அவன் கைக்கு கிடைத்து... யார் அவன்..?’’ என்று விசாரித்தால், நாங்கள் பெறும் 99% பதில்கள் இந்த ரகம்தான்... ‘‘சார்... நான் அவனை லவ் பண்ணினேன். அப்போ அவன்கிட்ட சாட் பண்ணும்போது, ‘வெப் கேமராவை ஆன் பண்ணு, துப்பட்டாவை எடு’னு அவன் வரிசையா கெஞ்ச... கொஞ்சம் (!) லிமிட் தாண்டி என்னை எக்ஸ்போஸ் பண்ணிட்டேன். ஆனா, ஒரு கட்டத்துல எங்களுக்குள்ள சரிப்பட்டு வராதுனு தெரிஞ்சு, பிரிஞ்சுட்டோம். பட்... இப்போ அந்த ராஸ்கல் அந்த போட்டோவை எல்லாம் ‘சேவ்’ பண்ணி வெச்சுக்கிட்டு மிரட்டுறான்...’’ 

- புரிகிறதா பிரச்னை?!

இளம்பெண்களே... எல்லா காதல்களும் கல்யாணத்தில் முடிவதில்லை. ‘காதலன்தானே’ என்று எண்ணி தாண்டாதீர்கள் எல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism