Published:Updated:

டிப்ஸ்..டிப்ஸ்...

டிப்ஸ்..டிப்ஸ்...

டிப்ஸ்..டிப்ஸ்...

டிப்ஸ்..டிப்ஸ்...

Published:Updated:

ஐடியா!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

டிப்ஸ்..டிப்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

75

டிப்ஸ்..டிப்ஸ்...

கோயில்களுக்குச் செல்லும்போது ஒரு சில டிஸ்போசபிள் பிளாஸ்டிக் ஸ்பூன்களை பையில் எடுத்துச் செல்லுங்கள். பெரும்பான்மையான கோயில்களில் பொங்கல், புளியோதரை போன்ற பிரசாதம் தருகிறார்கள். கையில் பிசுக்கு ஒட்டாமல் அவற்றைச் சாப்பிட்டு விட்டு, ஸ்பூனை தூக்கிப் போட்டு விடலாம்.

- ருக்மணி நாச்சி, ஈரோடு

குழம்பு, ரசம் முதலியவற்றுக்கு புளி ஊற வைக்கும்போதே கல் உப்பையும் சேர்த்துப் போட்டுவிடுங்கள். சுவை கூடுவதுடன், புளியை வடிகட்டும்போதே, உப்பில் உள்ள அழுக்கும் சேர்ந்தே நீங்கிவிடும்.

- என்.கோமதி, நெல்லை-7

##~##

தேங்காய் பர்ஃபி செய்யும்போது, அடுப்பில்இருந்து இறக்குவதற்கு முன்பாக மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பகுதியை வெள்ளை நிற வில்லைகளாகவும், இன்னொரு பகுதியில் கோகோ மாதிரியான பவுடரைக் கலந்து பிரவுன் நிற வில்லைகளாகவும், மூன்றாவதில் கேசரி பவுடர், பொடித்த முந்திரி மற்றும் பாதாம் கலந்து ஆரஞ்சு நிற வில்லைகளாகவும் (நெய் தடவிய தட்டுகளில்) துண்டுகள் செய்து அசத்துங்கள்.

- ஆர்.ராஜலட்சுமி, ஹூப்ளி

தேங்காய் முற்றலாக இருந்தால்... துவையல், சட்னி முதலியன செய்யும்போது சரியாக மசியாமல் திப்பி திப்பியாக இருக்கும். இதைத் தவிர்க்க முதலில் தேங்காயையும் உப்பையும் மட்டும் மிக்ஸியில் அரைத் தால், நைஸாக மசிந்துவிடும். அதன் பின்னர் மற்ற பொருட்களைச் சேர்த்து அரைக்கலாம்.

- ஆர்.மீனாட்சி,  திருநெல்வேலி

வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, செய்து பார்த்து, தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism