Published:Updated:

சைவ பொம்மைகள்!

சிறுதொழில் சிறப்பிதழ்

சைவ பொம்மைகள்!

சிறுதொழில் சிறப்பிதழ்

Published:Updated:
##~##

'அது என்ன சைவ பொம்மைகள்..?’ என்று கேட்கிறீர்களா? இதே கேள்வியைத்தான் நானும் எலிசபெத்திடம் கேட்டேன்.

''குழந்தை விளையாடுறப்போ அடிக்கடி பொம்மைகள வாயில வெச்சுடறான். பொம்மைங்க பெரும்பாலும் மட்டரகமான பிளாஸ்டிக் மெட்டீரியல், பெயின்ட்னு கண்டபடிதான் தயாராகுது. அதுல இருக்கற கெமிக்கல் எல்லாம் குழந்தையோட வாய்க்குள்ள போயிடுமேனு பதற்றமா இருக்குனு தாய்மார்கள் புலம்புவதைக் கேட்டிருப்போம். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான பொம்மைகளை வாங்கித் தரணும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் அக்கறையும். அதற்கான ஒரு தீர்வுதான்... இந்த சைவ பொம்மை கள்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கேள்விக்கு பதில் தந்துவிட்டு, தொடர்ந்தார் எலிசபெத்...

''எனக்கு சரியா படிப்பு வரல. ப்ளஸ் டூ முடிச்ச கையோட எனக்கும் ஜெயசீலனுக்கும் திருமணம் ஆச்சு. அவரும் நானும் சேர்ந்து பெண்களுக்குத் தேவையான சுடிதார், நைட்டிகளை புதுப்புது டிசைன்களில் செய்து விற்பனை செய்துட்டு வந்தோம். ரெண்டு வருஷத்துக்கு முன்ன வள்ளுவர் கோட்டத்துல நடந்த மகளிர் சுயஉதவிக் குழு கண்காட்சியில, ஆந்திராவைச் சேர்ந்த அமுதாவை சந்திக்கற வாய்ப்பு வந்துச்சு. அவங்க, ஆந்திராவில் சிறுதொழிலாகச் சின்னச் சின்ன பொம்மைகள் செய்துகிட்டிருக்கிறவங்க.

சைவ பொம்மைகள்!

ஒரு தடவை, மகளிர் சுயஉதவிக் குழு கண்காட்சியைப் பார்க்க வந்த அமுதா, என்னோட ஸ்டாலுக்கு வந்து, என் காஸ்ட்யூம் டிசைன்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. அவங்க தான் எங்கிட்ட, 'நீ ஏன் ஏதாவது இன்னும் வித்தியாசமா முயற்சி செய்து பார்க்கக் கூடாது?’னு கேட்டாங்க. 'வித்தியாசமானா... என்ன செய்றதுனு தெரியலையே..?’னு அவங்க கிட்டயே கேட்டேன். அப்போதான், குழந்தை களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத இந்த பொம்மைகள் பற்றி சொன்னாங்க.

''சைனா பொம்மைகள், கெமிக்கல் பெயின்ட் டுகள்னு குழந்தைகளுக்கான பொம்மைகள் ரொம்ப மோசமா இருக்கு. இந்த விஷயத்தில் இப்போ பெற்றோர்கள் ரொம்பவே குழம்பி இருக்காங்க. குழந்தைகளுக்கு பிரச்னை தராத, பாதுகாப்பான பொம்மைகள் கிடைச்சா, வரவேற்பு பலமா இருக்கும். அதுக்கு, 'சைவ பொம்மை கள்’னு பெயர் வெச்சு செய்ய லாம்’னு அவங்க சொன்ன விஷயத்தை, எங்க குழுவில் இருக்கற வங்ககிட்ட சொன்னேன். அவங்களும் என்னை உற்சாகப்படுத்த, அமுதாவிடமே அதை எப்படித் தயாரிக்கறதுனு கத்துக்கிட்டேன். தொடர்ந்து, என் கணவர் மற்றும் என்னோட நெருங்கிய தோழி சுகுணா இவங்கள்லாம் உதவ... இதை ஒரு தொழிலாவே தொடங்கிட்டேன்'' என்றவர், சைவ பொம்மைகள் தயாரிப்பு முறை பற்றி பேசினார்.

''மரங்களைக் கொண்டு இந்த பொம்மைகள் தயாரிக் கப்படுது. இதில் பயன்படுத்து றதும் வெஜிடபிள் பெயின்ட்டுகள்தான். அதனால, இந்த பொம்மைகள குழந்தைங்க வாயில வெச்சாலும் எந்த ஆபத்தும் இல்லை. இதுக்கு 5,000 ரூபாய் முதலீடு செய்தா போதும்... வித்தி யாசமான பொம்மைகள் செய்து, விற்பனையும் அமோகமாக இருந்தா.... மாசம் 40,000 ரூபாய்கூட சம்பாதிக்கலாம்!'' என்று பெருமையுடன் கூறிய எலிசபெத், தங்களின் சைவ பொம்மைகளைக் கொண்டு வந்து காட்டினார். ஒவ்வொன்றும் நம்மை குழந்தை யாகி விளையாடத் தூண் டும் அளவுக்கு அவ்வளவு அழகு!

சைவ பொம்மைகள்!

''குழந்தைகளுக்கான பொம்மைகள் மட்டுமல்ல... பெரியவர்களுக்கான பேனா ஸ்டாண்டுகள், மொபைல் ஸ்டாண்டுகள்னு இப்போ செய்ய ஆரம்பிச் சுருக்கோம். இதன் தயாரிப்பு செலவுல அதிகம், வெஜி டபிள் பெயின்ட்டுக்குதான் ஆகுது. ஆனாலும், இதோட சிறப்பம்சமே அந்த பாது காப்பான பெயின்ட் என்பதால, அதில் நாங்க எந்த சமரசமும் செய்துக்கறதில்ல.

இப்போதைக்கு வீட்டில் இருந்தே செய்றதால, பெரிய அளவில் செய்ய முடியல. இந்த பொம்மைகளுக்கு பெருகி வரும் வரவேற்பு, சீக்கிரமே இதை பெரிய அளவுல எடுத்துச் செய்றதுக் கான முயற்சியில் எங்களை முடுக்கி இருக்கு. பொதுவா கண்காட்சிகளில் வைத்து விற்கிற இந்த பொம்மை களுக்கு, அங்கேயே நல்ல சந்தை கிடைச் சது. அங்க இதைப் பார்த்த பல கடைக்காரங்களும், மொத்தமா ஆர்டர் கொடுத்து செஞ்சு வாங்கிட்டுப் போறாங்க. சென்னை, அண்ணா நகர்ல நடந்த 'பொங்கல் சிறப்பு கண்காட்சி’க்கு வந்திருந்த மு.க.ஸ்டாலின், எங்களோட பொம்மைகளைப் பாராட்டினதும், அவருக்கு நாங்க பரிசா எங்க பொம்மையைக் கொடுத்ததும் மறக்க முடியாதது!''

- சந்தோஷப் பெருமையுடன் முடித்தார் எலிசபெத்!

- சா.வடிவரசு

படங்கள்: க.கோ.ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism