Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

'எந்தப் பகுதி மக்கள் சாப்பிடும் காலை உணவு, மிகவும் சத்தானது?’ என்று மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை என்ற நான்கு பெருநகரங்களையும் மையமாக வைத்து, சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

மும்பையின் பாவுபாஜியில் வெண்ணெயையும் சேர்த்துச் சாப்பிடுவதால்... அதில் எஞ்சி நிற்பது வெறும் கொழுப்புச் சத்து மட்டுமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெல்லிவாலாக்களின் ஆலு பராத்தா மற்றும் தயிரில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு மட்டுமே அதிகம்.

மைதா பிரியர்களான கொல்கத்தா குடிமக்களின் காலை உணவில் கார்போஹைட்ரேட் மட்டுமே நிறைந்திருக்கிறது!

ஆனால், சிங்கார சென்னைவாசிகள் சாப்பிடும் இட்லி, சாம்பார் மற்றும் காபியில்... ஒரு மனிதனுக்குத் தேவையான புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் அனைத்தும் போதுமான அளவில் அடங்கியிருக்கின்றன.

- இதுதான் அந்த ஆய்வின் சாராம்சம்!

நம் பலம், பெருமை, அருமை... என்று எல்லாமே அடுத்தவர் எடுத்துச் சொல்லும்போதுதான், 'அட, ஆமாம்ல!’ என்று நம்மை ஆச்சர்யப்பட வைக்கும். அப்படித்தான் இந்த இட்லி கதையும்!

இதைக் கேட்டதுமே... கடைகளில் பாக்கெட் பாக்கெட்டாக விற்பனையாகும் மாவை வாங்கி இட்லி சுடுபவர்கள், தங்களைத் தட்டிக் கொடுத்துக் கொள்ளக்கூடாது. ஆம், வீட்டிலேயே பக்குவமாக, செயற்கைப் பொருட்கள் ஏதும் கலக்காமல் தயாரிக்கும் இட்லி உள்ளிட்ட உணவுகளுக்குத்தான் இந்த ஆய்வு தரும் சான்றிதழ் பொருந்தும்!

நமக்குள்ளே...

''உலகின் எந்த மூலையில் போய்த் தேடினாலும், இட்லியைப் போன்று அதீதநுட்பத்துடன் நொதிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறையைப் பார்க்க முடியாது.. 'லியுக்னோஸ்டாக்', 'க்ளெப்ஸியெல்லா’, 'லக்டோபாஸில்லஸ்’ எனும் 'புரோபயாடிக்ஸ்’ அடங்கிய மாவில் செய்யப்படும் இட்லி, எல்லா வகையிலுமே சிறப்பான ஓர் உணவு. இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது'' என்று நீண்டகாலமாகவே இங்கேஇருக்கும் இயற்கை ஆர்வலர்கள் உரக்கச் சொல்லி வருகிறார்கள். அது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் தயாராகும் இத்தகைய உணவே, சத்தான உணவு என்றால்... காலகாலமாக துளிகூட சத்துக்கள் சேதாரமாகாத கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு, சாமை, தினை போன்றவற்றில் நம் முன்னோர்கள் தயாரித்து சாப்பிட்ட கூழ், களி, நீராகாரம் போன்றவை எத்தனை சத்தான உணவாக இருந்திருக்கும்?!

பரோட்டா, பீட்ஸா, பர்கர், சிக்கன் டிக்கா... என்று அடுத்த முறை நாவில் எச்சில் ஊறும்போது, இந்த ஆய்வு முடிவையும் கொஞ்சம் மனதில் ஊற போடுவோமா!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism