Published:Updated:

அமெரிக்காவுக்கு வந்த கிருஷ்ணரும், கோபியரும்!

நீங்களும் நிருபர்தான்! ரீடர்ஸ்

அமெரிக்காவுக்கு வந்த கிருஷ்ணரும், கோபியரும்!

நீங்களும் நிருபர்தான்! ரீடர்ஸ்

Published:Updated:
##~##

 மிழகத்தில் நடந்தேறும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை, ஏக்கத்தோடு பார்ப்பவர்களாகத்தான் இதுவரை இருந்தோம். ஆனால், இந்த ஆண்டு, 'கிருஷ்ணர் ஃபாரினுக்கு வர மாட்டாரா என்ன?’ என்று உரிமையாக யோசித்து, அமெரிக்காவின் ஓஹையோ மாகாணம், மியாமிஸ்பர்க் பகுதியில் வசிக்கும் நான் களமிறங்க, குட்டி கிருஷ்ணர்களும் ராதைகளும் அழகாக்கினார்கள் அந்த கொண்டாட்ட நாளை!

எங்கள் அபார்ட்மென்ட்டில் நிறைய தமிழ்க் குடும்பங்கள் வசிக்கின்றனர். அனைவரும் சேர்ந்து, 'இந்த வருஷம் கிருஷ்ண ஜெயந்தியை ஜமாய்க்கிறோம்!’ என்று முடிவெடுத்தோம். முதற்கட்டமாக, இங்குள்ள குழந்தைகளுக்கு பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே கிருஷ்ணன் கதைகள் சொல்லி குஷிப்படுத்தி, பண்டிகை பற்றியும் விளக்கினோம். கிறிஸ்துமஸ், நியூ இயர் போன்றவற்றை மட்டுமே அறிந்திருந்தவர்களுக்கு, கிருஷ்ணன், கம்சன், பலராமன், ராதை என கதைகள் கேட்டபோது, குஷியோ குஷி! தாங்கள் கண்ணன்களாக, ராதைகளாக மாறப்போகிறோம் என்கிற உற்சாகம், அவர்களை மேலும் துள்ளச் செய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்காவுக்கு வந்த கிருஷ்ணரும், கோபியரும்!

நிகழ்ச்சியன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் பட்டு வேட்டி, சவுரி முடி, நெத்திச் சுட்டி, பூமாலை என்று அலங்காரத்துடன் என் வீட்டுக்கு ஓடிவந்தார்கள் குட்டீஸ்கள். என் எட்டு மாதக் குழந்தை ஆரவ், பாலகிருஷ்ணன் அலங்காரம் செய்வதற்குள், படுத்தியெடுத்துவிட்டான். ஒருவழியாக ஃபைனல் டச் என, அவன் கையில் புல்லாங்குழலைக் கொடுத்தபோது, பப்ளிக் எக்ஸாம் முடித்த களைப்பும் சந்தோஷமும் எனக்கு!

இந்தக் குட்டி கண்ணன்களின் அம்மாக்கள், யசோதாக்களாக மாறி... முறுக்கு, சீடை, அவல் உருண்டை, சுண்டல், வடை, பாயசம், அவல் கேசரி என்று கொண்டுவந்திருந்த அனைத்து பலகாரங்களையும் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டது, கூட்டுக்குடும்ப உணர்வைத் தந்தது.

குட்டி கண்ணன்கள், கோபியர்களைப் பிரிய முடியாமல் வருத்தத்துடன் 'டாட்டா’ காட்டியபடி விடைபெற்றது... கொள்ளை அழகு!

- என்.புவனேஸ்வரி, ஓஹையோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism