பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...
கு.ராமகிருஷ்ணன்

பொதுவா... மத்தவங்க 'மைனஸ்’ஸா நினைக்கறதையே, கொஞ்சம் யோசிச்சி 'ப்ளஸ்’ஸா மாத்தக் கூடிய திறமையை வளர்த்துக்கிட்டோம்னா... எந்த ஒரு தொழில்ல வேணும்னாலும் கண்டிப்பா வெற்றிகளைக் குவிக்கலாம்!''

- கனமான வார்த்தைகளை மென்மையாக உதிர்க்கிறார் லோகநாயகி.

நடுத்தரக் குடும்பம், வெறும் ப்ளஸ் டூ வரை மட்டுமே படிப்பு, வெளியுலகம் பற்றி அதிகம் பரிச்சயமின்மை... ஆனாலும் சவாலாக தனது ஊருக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத கார்மென்ட்ஸ் தொழிலில் புதிய யுக்தியோடும், துணிச்சலோடும் இறங்கி, இன்று மாதம் கிட்டத்தட்ட அரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த லோகநாயகி!

''தஞ்சாவூர்தான் சொந்த ஊர். அப்பா, டூ-வீலர் மெக்கானிக். ஒரு அண்ணன்; ஒரு தங்கச்சி. பத்திரிகையாளர் ஆகணும்ங்கறதுதான் என்னோட ஆசை. ஆனா, ப்ளஸ் டூ-வுக்கு மேல எங்கப்பாவால படிக்க வைக்க முடியல. 'என் வாழ்க்கையே வீணாயிடுச்சே’னு அழாம, சூழ்நிலையைப் புரிஞ்சுக்கிட்டு தெருப் பசங்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வாழ்க்கையை நகர்த்தினேன்'' என்பவரின் குடும்பம், அப்போது ஒரு பேரிடியைச் சந்தித்திருக்கிறது.

''அப்பாவோட திடீர் மரணம், எங்களை நிலைகுலைய செஞ்சுது. நாங்க எல்லாருமே சின்ன வயசுங்கறதால, ரொம்பவே தவிச்சுப் போயிட்டோம். இருந்தாலும், குறைச்ச சம்பளத்துக்கு வேலைக்கு போயி, படாத பாடு பட்டு குடும்பத்தைக் காப்பாத்தினார் அண்ணன். எனக்கு மனசுக்கு உறுத்தலாவே இருந்துச்சு. வீட்ல உள்ள ஆண்களோட பாரத்தை குறைக்க, பெண்களும் ஏதாச்சும் வேலை செய்யணும்னு அப்பதான் மனசுக்குள்ள ஓட ஆரம்பிச்சுது. ஆனா, கஷ்டத்தோடு கஷ்டமா என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க'' என்பவருக்கு பாபநாசம் அருகே உள்ள மேலூர் மேட்டுத்தெரு கிராமத்தைச் சேர்ந்த குமரனோடு திருமணம் முடிந்திருக்கிறது.

''அண்ணன், தம்பிகளோட சேர்ந்து கரூர்ல கூல்டிரிங்க்ஸ் கம்பெனி நடத்திக்கிட்டு இருந்தார் கணவர். குடும்பம் ஒற்றுமையா இருந்தாலும், அஞ்சு குடும்பத்துக்கும் ஒரு கூல்டிரிங்க்ஸ் கம்பெனியோட வருமானம் போதுமானதா இல்ல. வேற ஏதாவது ஒரு தொழில் தொடங்கலாம்னு முடிவெடுத்து, நாங்க மட்டும் சொந்த கிராமத்துக்கே திரும்பி வந்துட்டோம். பி.சி.ஓ. காயின் பாக்ஸ் ஏஜென்ஸி எடுத்ததுல ஏகப்பட்ட நஷ்டம்'' என்பவருக்கு... அப்போதுதான் கார்மென்ட்ஸ் தொழில் தொடங்க வேண்டும் என்ற யோசனை பளிச்சிட்டிருக்கிறது.

''பாபநாசம் பகுதியில எப்படி இது சாத்தியப்படும்? கரூர், திருப்பூர் மாதிரியான பகுதிகள்ல மட்டும்தானே இதைச் செய்வாங்க?’னு எல்லாரும் கேட்டாங்க. 'அங்கயெல்லாம் இந்த வேலைக்கு ஆள் கிடைக்கறதே இல்லை. இங்க இருந்துதான் அழைச்சிக்கிட்டுப் போறாங்க. குடும்பங்களைப் பிரிஞ்சு இருந்து வேலை பாக்குறதுனால, ஊழியர்களால மனசு ஒன்றி அங்க வேலை பார்க்க முடியறது இல்ல. அதனால பாபநாசத்துலயே கார்மென்ட்ஸ் கம்பெனி தொடங்கினா, கண்டிப்பா சக்சஸ் பண்ண முடியும்னு’னு நம்பினேன்'' என்பவர், இதுபோல் இன்னும் பல்வேறு காரணங்களால் இத்தொழிலை தேர்ந்தெடுத்து, படிப்படியாக வெற்றி கண்டிருக்கிறார்.

''கார்மென்ட்ஸ் கம்பெனி தொடங்கி, ரெண்டரை வருசமாகுது. இப்ப 18 பேருக்கு வேலை கொடுக்கறோம். மாசம் 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. இதுல இன்னும் உச்சத்தை தொடணும்''

- உழைப்புத் தாகத்தோடு, இலக்கு நோக்கிப் பயணிக்கிறார் லோகநாயகி.

எப்படி இவரால் இதில் சாதிக்க முடிந்தது? இத்தொழிலில் உள்ள நம்பிக்கை, பயிற்சி, வாய்ப்புகள், முதலீடு உள்ளிட்ட ஏ டு இசட் விவரங்கள் அடுத்த இதழில்...

- சாதனைகள் தொடரும்...
படம்: கே.குணசீலன்