தென்றல்

ஒரு ரூபாயில் தொடங்கிய ஒரு வெற்றிப் பயணம் !

" எல்லா பெரிய பயணங்களுமே... சின்னதா எடுத்து வைக்கற முதல் அடியில இருந்துதான் தொடங்கும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி, இன்னிக்கு பன்னிரண்டு நாடுகள்ல மார்க்கெட்டிங் பார்த்துக்கிட்டிருக்கற 'ஆச்சி மசாலா’ நிறுவனம், ஆரம்பத்துல... குறைவான முதலீட்டுல 'ஒரு ரூபாய் மிளகாய்ப்பொடி பாக்கெட்’டோட களம் இறங்கினதுதான்! சாம்பார்லயோ, குழம்புலயோ ஒரு ஸ்பூன், ரெண்டு ஸ்பூன்னு போடற மசாலாப்பொடியை... ஒரு பிஸினஸா செய்தா என்னனு நாங்க எண்ணித் துணிஞ்சதும், இன்னிக்கு அதுல நிலைச்சு நிக்கறதும்... எங்க உழைப்புக்குக் கிடைச்ச பரிசு!''

- சிநேகமான புன்னகையுடன் ஆரம்பித்தார் ஆச்சி மசாலா, நாசரத் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெல்மா. இன்றைக்கு வளர்ந்து வரும் சின்னஞ்சிறு தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்காக, தெல்மா பகிர்ந்த வார்த்தைகள், செமத்தையான பிஸினஸ் பூஸ்ட்!

''ஹவுஸ் வொய்ஃப்பா வீட்டுல இருந்த எனக்கு, ஒரு கட்டத்துல... 'நாமளும் ஏதாச்சும் தொழில் செய்யலாம்'னு ஒரு எண்ணம் வந்துது. பெண்களுக்கு உதவற மாதிரியான ஒரு விஷயத்தைக் கையில எடுக்க நினைச்சேன். 'ஆபீஸ், வீடுனு ரெட்டை வேலைச் சுமையில தள்ளாடற 'வொர்க்கிங் விமன்’ தோழிகளுக்கும், சமையலறைக்குள்ளயே பாதி ஆயுளைக் கரைக்கற இல்லத்தரசிகளுக்கும் அடுப்படி வேலையைச் சுலபமாக்கற மாதிரி ரெடிமேட் பொடியைக் கையில கொடுத்தா... எத்தனை சந்தோஷப்படுவாங்க’னு நானும், கணவரும் யோசிச்சோம். சாமான்யப்பட்ட ஜனங்க வாங்கற விலையில பொருள் கிடைச்சா, அந்தத் தொழில் நிலைக்கும்னும் கணக்குப் போட்டு, அதுக்கான வேலைகள்ல இறங்கினோம்.

30 ஆயிரம் ரூபாய் முதலீடோட... 20 வேலையாட்களோட... ஒரு ரூபாய்க்கு குழம்பு மிளகாய்த்தூள் பாக்கெட் தயாரிச்சோம். 'ஆச்சி'னா... மதிப்புக்குரியவங்கனு அர்த்தம். அதனால அதையே எங்க பிராண்ட்டோட பேரா வெச்சுக்கிட்டு களத்துல குதிச்சோம்'' என்றவர், விதைத்த தினை விளையக் காத்திருந்திருக்கிறார்.

''நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு அபார வரவேற்பு. காரணம், எங்க பொருளோட தரம், வாங்கக் கூடிய அளவிலான விலை, ஒரு பொடியை வாங்கி எட்டு வகை குழம்புக்குப் பயன்படுத்திக்கலாம்ங்கிற 'மல்டிபிள் யூஸ் டெக்னிக்’ இதெல்லாம் மக்களுக்கு ரொம்ப புடிஞ்சிருந்ததுதான். இந்த வெற்றியைக் கடைசி வரைக்கும் தக்க வெச்சுக்கணும்னா... எந்த நிலையிலயும் தரத்துல காம்ப்ரமைஸ் செஞ்சுக்கக் கூடாதுனு முடிவெடுத்தோம். தரம், டேஸ்ட் ரெண்டும், கடையில வாங்கின உணர்வை மக்களுக்குத் தரக்கூடாது. 'பிறந்த வீட்டுல இருந்து, அம்மாவோட கைப்பக்குவத்துல அரைச்சு கொடுத்துவிட்ட மாதிரி இருக்கு’ங்கற உணர்வைத் தரணும்னு நெனச்சோம். இதுதான் எங்க பிஸினஸோட 'விஷன்’. இது எங்க மனசுல மட்டுமில்ல, வேலை பார்க்கற ஐயாயிரம் பேரோட மனசுலயும் அழியாத பாடமா பதிஞ்சு இருக்கு'' என்ற தெல்மா, தொடர்ந்து இதே தெளிவில் பயணப்பட்டதால்... சாம்பார்த்தூள், ரசப்பொடி, மிளகுப்பொடி என்று படிப்படியாக விரிவடையச் செய்திருக்கிறார். அதற்குப் பிறகும் அவரின் தேடல் தொடங்க, அதற்குப் பரிசாக கிடைத்திருக்கிறது அந்த அசத்தல் பிஸினஸ் ஐடியா!

''இது மட்டும் போதாதுனு மனசுக்குள்ள தோணிட்டே இருந்துது. அதை கணவர்கிட்ட சொன்னப்போ, 'இந்த அவசர உலகத்துல, சமையல் செய்றதுதான் ஒரு இல்லத்தரசிக்கு பெரிய தலைவலி. ஈஸியா சமையல் செய்றதுக்கு இன்னும் என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் சுலபமா கிடைச்சா அவங்க சந்தோஷபடுவாங்கனு யோசினு சொன்னார். அப்ப உருவானதுதான் 'ரெடி டு குக்’ தயாரிப்புகள்.

வீட்டுல சாதம் மட்டும் இருந்தா போதும், கடையில இருந்து வாங்கிட்டுப் போய் உடனே மிக்ஸ் பண்ற மாதிரி புளியோதரை மிக்ஸ், லெமன் மிக்ஸ்னு தயாரிச்சோம். அப்புறம் தக்காளித் தொக்கு, பூண்டுத் தொக்கு, குலோப் ஜாமூன், பாதம்கீர், பாயசம் மிக்ஸ்னு பல தயாரிப்புகள இறக்கி விட்டு, மக்களின் அமோக ஆதரவோட வெற்றி நடை போட்டுக்கிட்டிருக்கோம்'' என்றவர், சற்று நிதானித்து,

''பிரச்னைகள் வராத பிஸினஸே இல்ல. அதுக்காக 'ஐயோ’னு கலங்கி நின்னு கண்ணீர் விடாம, அதை தீர்க்கறதுக்கான வழி என்னனு பாத்துப் பாத்து இறங்கினதால... இன்னிக்கு, பிரச்னைகளை முன்கூட்டியே அனுமானிக்கற அளவுக்கு வளர்ந்துட்டோம்! எங்க தரம்... தென்னிந்தியாவிலேயே 'நம்பர் 1’ங்கற இடத்தை எங்களுக்கு மகுடமா கொடுத்திருக்கு'' என்று கண்கள் மின்ன சொன்ன தெல்மா,

''12 வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்சு, ஆலமரமா நிக்கற ஆச்சி குடும்பத்துக்கு இன்னமும் கனவு நீண்டுட்டே இருக்கு. அது... நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கணும்; நிறைய தொழில் அதிபர்களைத் தரணும்கிறதுதான். ஆமா... 'ஆச்சியோட குவாலிட்டியில பொருட்கள தயாரிச்சுத் தர்றோம், உங்க பிராண்டுல மார்க்கெட்டிங் செஞ்சு தர்றீங்களா’னு ஆர்வமா வர்ற அத்தனை பேரோடயும் கை குலுக்க ரெடியா இருக்கோம். அடுத்ததா, 'நம்ம நாட்டுல வேஸ்ட்டா போயிட்டு இருக்குற ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள விவசாய விளைபொருட்களைப் பதப்படுத்தி, பயன்படுத்தும் பொருளா எப்படி மாத்த முடியும்?'னு வழி தேடிகிட்டு இருக்கோம். தேடிக்கிட்டே இருந்தா வழி கிடைக்கும். இது எளிய சூத்திரம்... ரொம்ப வலிமையான சூத்திரம்!'' என்று முடித்தபோது, 'ஆச்சி’ மசாலாவின் வெற்றிக்கான வேர் நன்றாகவே புரிந்தது.

படங்கள்: வி.செந்தில்குமார்