இனியவள்

அட,நாப்கின் பிஸினஸ்....

எழுநூறு ரூபாயையும், என் உழைப்பையும் முதலீடா போட்டு நான் ஆரம்பிச்ச தொழில் இது. நீங்க நம்பித்தான் ஆகணும்... இப்போ இதுல நாளண்ணுக்கு ஐந்நூறு ரூபாய் சம்பாதிக்கறேன்!''

- வெற்றி தந்த ஆத்ம மகிழ்ச்சியில் தெம்போடு சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கோகிலா. வீட்டிலேயே 'நாப்கின்’ தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் இந்த கோகிலா, இப்போது பல பெண்களுக்கும் அதை கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளராகவும் உருவெடுத்துள்ளார்.

'வீட்டுல இருந்துகிட்டே ஏதாச்சும் கைத்தொழில் செய்ய முடியுமா?' என்ற தேடலில் இருக்கும் பெண்களுக்கு, பாஸிட்டிவ் நம்பிக்கையாக இங்கு பேசுகிறார் கோகிலா...

''சொந்த ஊர் கரூர். வீட்டுல அப்படி ஒண்ணும் வசதி கிடையாது. எனக்கு அவ்வளவா படிப்பறிவும் கிடையாது. ப்ளஸ் டூ முடிச்சதோட கல்யாணமாகி சென்னைக்கு வந்துட்டேன். மாநகர வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க, நாமளும் ஏதாச்சும் வேலைக்குப் போகலாமேனு தோணுச்சு. அப்போதான், மகளிர் சுயஉதவிக் குழு மூலமா போரூர்ல அரசு சார்பில் நடத்தின 'நாப்கின்’ தயாரிப்பு பயிற்சி'க்குப் போனேன். ஒரே நாள்ல கத்துக்கிட்டேன்.

அடுத்த நாளே... கத்தரிக்கோல், மைக்ரோ டாட்டட் பேப்பர், ரோலிங் காட்டன், பிளாஸ்டிக் ஷீட், மரக்கூழ், டூல்ஸ்...னு நாப்கின் தயாரிக்கறதுக்கான மூலப்பொருட்களை எழுநூறு ரூபாய்க்கு வாங்கி, வீட்டுலயே வேலையை ஆரம்பிச்சேன். அக்கம் பக்கத்துல இருக்கறவங்ககிட்டயே அந்த நாப்கின்களை வித்தேன். கொஞ்சம் லாபம் கிடைக்கவே, நம்பிக்கையோட நிறைய நாப்கின்கள் தயாரிக்க ஆரம்பிச்சேன். இந்தத் தடவை அக்கம் பக்கம்னு மட்டும் நிக்காம... மெடிக்கல் ஷாப்கள், கடைகள், முக்கியமான மருத்துவமனைகள்னு தேடிப்போய் ஆர்டர்கள் கேட்டேன். லாபமும், கஸ்டர்மர்கள் வட்டமும் விரிவடைஞ்சது'' என்றவர், அடுத்த கட்டத்துக்கு யோசித்திருக்கிறார்.

''வடிவம், உபயோகிக்கற மெட்டீரியலோட தரம் இதையெல்லாம் பொறுத்து நாப்கின்ல மொத்தம்

பன்னிரண்டு வகைகள்

இருக்கு. பயிற்சியை முடிச்சவங்க எல்லாரும் 'பேஸிக் மாடல்’ நாப்கின்களையே தயாரிச்சுட்டு இருந்தாங்க. நான், பிரசவ நேரத்துல பயன்படுத்தற 'டெலிவரி’ நாப்கின், குழந்தைகளுக்கு பயன்படுத்தற 'டயபர்'... இது ரெண்டு மேலயும் நம்பிக்கை வெச்சு நிறைய எண்ணிக்கையில தயாரிச்சேன். நினைச்ச மாதிரியே நல்ல ரிசல்ட். இப்போ உற்பத்தியும், வியாபாரமும் போட்டி போட்டு வளர்ந்துட்டு இருக்கு'' என்றவர்,

''ஒரு கட்டத்துல ஸ்திரமானப்போ, இந்தத் தொழில்ல என் அனுபவமும் பக்குவப்பட்டிருந்தது. அதனால, நாப்கின் தயாரிக்கறதுக்கான பயிற்சியையும் கட்டண அடிப்படையில பெண்களுக்கு வீட்டுலயே வழங்க ஆரம்பிச்சேன். அதுலயும் நல்ல லாபம். இப்போ கோயம்புத்தூர், கரூர், பெங்களூரு, சேலம், ஆந்திரானு பல இடங்களுக்கும் போய், 'நாப்கின் வொர்க்ஷாப்’ நடத்திட்டு வர்ற அளவுக்கு வளர்ந்திருக்கேன். 2008-ம் வருஷம்தான் இந்தத் தொழில்ல இறங்கினேன். இன்னிக்கு, மாசம் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு மேல சம்பாதிக்கற அளவுக்கு முன்னேறியிருக்கேன். நினைச்சுப் பார்த்தா... எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு!

வேலைக்கு ஆள் வைக்காம எல்லாத்தையும் நானேதான் பார்த்துக்கறேன். திட்டமிட்டு செய்றதால, நேரம் போதுமானதாவே இருக்கு'' என்ற கோகிலா, பிற பெண்களுக்கும் அந்த சூத்திரத்தை சொல்லிக் கொடுத்தார்.

''கணவர், குழந்தைகள எல்லாம் கிளம்பின பிறகு, காலையில பதினோரு மணியில இருந்து சாயங்காலம் மூணு மணி வரைக்கும் வீட்டுல சும்மா இருக்கற நேரத்தை இதுக்கு செலவழிச்சா போதுமானது. சாதாரண நாப்கின் ஒண்ணு தயாரிக்கறதுக்கு மூணு நிமிஷம் போதும். ஒரு ஆள் நாளண்ணுக்கு 150 - 200 நாப்கின்கள் வரை தயாரிக்கலாம். சாதாரண நாப்கினோட விலை 1.75 ரூபாயிலிருந்து மூணு ரூபாய் வரையிலும், டெலிவரி நாப்கினோட விலை 3.50 ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரையிலும், குழந்தைகளுக்கான டயபர் 5 ரூபாய் வரையிலும் விற்கலாம். எட்டு நாப்கின் உள்ள ஒரு பாக்கெட், தரத்தை பொறுத்து 16 ரூபாயிலிருந்து 24 ரூபாய் வரை விலைபோகும். ஆர்டர்கள மட்டும் சாமர்த்தியமா பிடிச்சுட்டா... மாசத்துக்கு 3,000 ரூபாயில இருந்து 8,000 ரூபாய் வரை லாபம் மினிமம் கியாரன்டி!

ஆரம்ப மாசங்கள்ல ஏதோ செஞ்சோம், வித்தோம்னு இருக்கும். ஆனா, கஸ்டர்மர்கள் கிடைக்க ஆரம்பிச்சவொடன... நமக்குள்ள உற்சாகம் பிறக்க ஆரம்பிச்சுடும். அப்புறமென்ன... லாபக் கணக்கு எழுத வேண்டியதுதான்!'' என்று பிஸினஸ் கிளாஸ் எடுத்த கோகிலா,

''என்னோட பயிற்சிக்கு வந்த எல்லா தோழிகளுமே இத்தனை தூரம் நீந்தல. காரணம், பயிற்சியை முடிச்சதோட அடுத்த முயற்சியை அவங்க எடுக்காததுதான். 'இதை நாம செய்யணும்’ங்கறது எண்ணமாவே மட்டும் இருந்தா... எதுவும் நடக்காது. செயல்படுத்தினாதான் வெற்றியை ருசிக்க முடியும். அதனால, முதலீடு அதிகம் தேவைப்படாத, நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லாத இந்தத் தொழில்ல தோழிகள் தயங்காம இறங்கலாம். முழு முயற்சியும், ஈடுபாடும் இருந்தா போதும்... வெற்றி உங்க வீட்டு ஹால் தேடி வரும்!''

- உத்வேகமும் உத்தரவாதமும் தந்து சொன்னார் கோகிலா!

இப்படித்தான் தயாரிக்க வேண்டும் நாப்கின்!

பொதுவாக பயன்படுத்தப்படும் நாப்கின் தயாரிக்கும் முறை இங்கே இடம்பிடிக்கிறது.

தேவையானவை: மைக்ரோ டாட்டட் பேப்பர், ரோலிங்காட்டன், பிளாஸ்டிக் ஷீட், பட்டர்பேப்பர், கத்தரிக்கோல் (சாதாரண மற்றும் டிசைனிங் கத்தரிக்கோல்), டூல்ஸ் (நாப்கினை வடிவமைக்கும் சிறிய தகரப் பெட்டி) மற்றும் அயர்ன் பாக்ஸ்.

முதலில் 12 இன்ச் நீளம், 7.5 இன்ச் அகலம் உள்ளபடி மைக்ரோ டாட்டட் பேப்பரை கத்தரித்துக் கொள்ள வேண்டும். ரோலிங் காட்டனின் அகலம் நாப்கினுக்கு ஏற்றதாகவே இருக்கும். நீளத்தை 9 இன்ச் அளவுக்கு கத்தரித்து, டூல்ஸில் வைத்து நன்றாக அழுத்த வேண்டும். பிறகு, மைக்ரோ டாட்டட் பேப்பரின் நடுவில் அந்தக் காட்டனை வைத்து, அதே அளவுக்கு கத்தரிக்கப்பட்ட பிளாஸ்டிக் ஷீட்டை காட்டன் மீது வைக்க வேண்டும். பின்பு, மைக்ரோ டாட்டட் பேப்பரை அப்படியே சுற்றி மடித்துவிட்டு, அதன் இரு ஓரங்களில் மிதமான சூட்டில் அயர்ன் செய்ய வேண்டும். எஞ்சியிருக்கும் பேப்பரை, டிசைனிங் கத்தரியால் அழகாக வெட்டினால்... நாப்கின் தயார். உள்ளே பிளாஸ்டிக் பேப்பர் இருக்கும் பாகம்தான் நாப்கினின் அடிப்பாகம். அதன் வெளிப்புறத்தில் பட்டர் பேப்பரை ஒட்டி விட வேண்டும்.

படங்கள்: எம்.உசேன்