வே.கிருஷ்ணவேணி

'பொட்டீக்' பிஸினஸில் 'பளிச்' தோழிகள்

இன்னிக்கு மார்க்கெட்ல இருக்கற நுகர்வுப் பொருட்கள்ல 75% பெண்களை மையப்படுத்தியே இருக்கு. அதில் ஆடை ரகங்களுக்கு மிக முக்கிய இடமுண்டு. அந்த தைரியத்துலதான் நாங்க இந்த 'பொட்டீக்’ சென்டரை ஆரம்பிச்சோம். எதிர்பார்த்தபடியே நல்ல பிக்-அப்!''

- சந்தோஷமாக ஆரம்பிக்கிறார்கள் சென்னை, 'வஸ்த்ரா பொட்டீக்’ உரிமையாளர்கள் கௌசல்யாவும் சுஜாதாவும்!

பிரத்யேகமாக உருவாக்கிய ஆடை ரகங்கள், டிரெஸ் மெட்டீரியல்கள் என விரிந்திருக்கும் இந்த 'பொட்டீக்' சென்டரில்... குழந்தைகளின் ஆடைகளில் இருந்து முகூர்த்தப் புடவைகள் வரை குந்தன் வொர்க், ஆரி வொர்க், ஜர்தோஸி, கலம்காரி என கூடுதல் கை வேலைப்பாடுகளுக்கான ஆர்டர்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. உடல்வாகுக்கு ஏற்ப சரியான அளவுகளில், ரகங்களில் ஆடைகள் 'ஸ்டிட்ச்’ செய்தும் தரப்படுகின்றன. கஸ்டமர்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி நடைபோடும் இத்தொழிலை, கௌசல்யாவும் சுஜாதாவும் தொடங்கிய கதை, செமசுவாரஸ்யம்! அந்தக் கதையை ஆரம்பித்து வைத்தார் கௌசல்யா.

''சின்ன வயசுல இருந்தே எனக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம். 'அட, இந்த வயசுலயே இவ்வளவு டிரெஸ் சென்ஸா!'னு மத்தவங்க ஆச்சர்யப்படற அளவுக்கு இருக்கும்! சென்னை, மீனாட்சி காலேஜ்ல பி.காம். படிச்சு முடிச்சதும் கல்யாணத்தை முடிச்சுட்டாங்க. வீட்டுல தனியா இருக்கறது ரொம்ப போரடிச்ச சமயத்துல... எனக்குள்ள இருந்த டிரெஸ் ஆர்வம் மறுபடியும் வெளியில எட்டிப் பார்க்க ஆரம்பிச்சுது.

என்னோட சேலைகள், சுடிதார்களை எல்லாம் 'இப்படி இப்படியெல்லாம் ஸ்டிட்ச் பண்ணுங்க, வொர்க் பண்ணுங்க’னு மனசுல உதிச்ச 'பேட்டர்ன்’களை டெய்லர்கள்கிட்ட நானே ஐடியா சொல்லிச் சொல்லித்தான் தைச்சு வாங்குவேன். பார்த்தவங்க... 'வாவ்!’னு பாராட்டறப்ப சந்தோஷமா இருக்கும். தெரிஞ்சவங்க, உறவுக்காரங்க, ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும்... 'இந்த மெட்டீரியலை இப்படி, இந்த மாடல்ல ஸ்டிட்ச் பண்ணு...’, 'இந்த சேலை பள்ளுவுல ஜர்தோஸி வொர்க் பண்ணி வாங்கு’னு ஐடியாஸ் சொல்ல... அதெல்லாம் சூப்பர் ஹிட்!

ஒரு கட்டத்துல, 'இதையே ஒரு தொழிலா ட்ரை பண்ணலாமே'னு தோணவே, என்னோட டிசைன்கள், வேலைப்பாடுகளை எல்லாம் ஒரு டெய்லரை வேலைக்குப் போட்டு, ரெடி பண்ணி மத்தவங்களுக்கு கொடுத்தேன். கஸ்டமர்ஸ் வட்டம் மெள்ள விரிவடைஞ்சுது. அப்படி ஒரு கஸ்டமராதான் அறிமுகமானவங்கதான் சுஜாதா'' என்று அவர் நிறுத்த, ஆரம்பித்தார் சுஜாதா...

''என்னோட பட்டுப்புடவைக்கு அவ்ளோ அருமையா 'எக்ஸ்ட்ரா டிசைன்ஸ்’ பண்ணியிருந்தாங்க. கூடவே, என்னோட சுடிதார், பிளவுஸ்களையும் தொடர்ந்து டிசைன் பண்ணிக் கொடுத்தாங்க. 'ஏய்... எங்க எடுத்தது..? யார் தைச்சது?’னு எல்லாரும் ஆர்வமா விசாரிப்பாங்க. அந்தப் பாராட்டை எல்லாம் கௌசல்யாகிட்ட சேர்க்கறதோட கூடவே, 'நீங்க ஏன் ஒரு 'பொட்டீக் ஷாப்' ஆரம்பிக்கக் கூடாது?’னு நச்சரிச்சுட்டே இருப்பேன். திடீர்னு ஒருநாள், 'சரி ஆரம்பிக்கலாம். நீங்க பார்ட்னரா வரணும்!’னு கௌசல்யா சொல்ல, சந்தோஷ ஷாக்!'' என்ற சுஜாதாவை இடைமறித்துத் தொடர்ந்தார் கௌசல்யா...

''ஆர்வக்கோளாறுல அப்படிக் கேட்கல. சுஜாதாவுக்கும் என்னைப் போலவே ஆடை வடிவமைப்புல நிறைய ஆர்வம் இருந்ததை, அவங்க எனக்குச் சொன்ன ஆலோசனைகள், திருத்தங்கள் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். கூடவே, ஒரு தொழிலை நடத்துறதுக்கான திறன்ல எம்.பி.ஏ. பட்டதாரியான அவங்க, என்னைவிட பக்குவப்பட்டவங்கணும் தெரிஞ்சுது. அவங்க பார்த்துக்கிட்டிருந்த 'ஹுயூமன் ரிசோர்ஸ் மேனேஜர்’ வேலையும்கூட, அவங்களோட திறமைக்கு சான்றா இருந்துச்சு. இதையெல்லாம் அவங்ககிட்ட எடுத்துச் சொல்லி, 'பொட்டீக் ஷாப்பை நான் பார்த்துக்கறேன். நீங்க அப்பப்போ வந்து அட்டன்டன்ஸ் கொடுத்தா போதும்’னு சொல்ல, சந்தோஷமா சம்மதிச்சாங்க. உடனடியா ரெண்டு பேரும் வேலைகள்ல இறங்கினோம்...'' என்று திருப்பங்களுடன் கதையை நிறுத்தினார் கௌசல்யா.

அதை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திய சுஜாதா, ''முதலீடு, லோன், மெட்டீரியல், பிஸினஸ் ஃபார்மாலிட்டிஸ்னு எல்லா வேலைகளையும் ரெண்டு பேரும் ஓடி ஓடி செஞ்சோம். முக்கியமா, நல்ல டெய்லர், டிசைனர், பணியாட்களை தேடிப்பிடிச்சு 'எக்ஸ்ட்ரா டிசைன்ஸ்’ உருவாக்கினோம். போன வருஷம், ஒரு

சுபதினத்துல கடைக்கு திறப்பு விழா பண்ணினோம். கௌசல்யாவுக்கு ஏற்கெனவே இருந்த கஸ்டமர்கள், கடையோட ஆரம்ப கால பிக் அப்-க்கு பலமா இருந்தாங்க. தொடர்ந்து, எங்களோட நேர்த்தியான வேலையும், பிரத்யேகமான ஆடை ரகங்களும் வாடிக்கையாளர்கள் வட்டத்தை விரிவுபடுத்திச்சு. ஒரு கட்டத்துல, என் வேலையை ரிஸைன் பண்ணிட்டு முழுக்க இதுல ஈடுபடற அளவுக்கு டர்ன் ஓவர் வர ஆரம்பிச்சுடுச்சு. இப்போ எங்க 'பொட்டீக்’குக்கு ஸ்திரமான, தரமான பெயர் கிடைச்சிருக்கு!'' என்று சந்தோஷப்பட்டார்.

''எங்க பொட்டீக்ல நாங்களே டிசைன் பண்ணின பிரத்யேக ஆடைகள் இருக்கு. ரா மெட்டீரியல்ஸும் இருக்கு. கஸ்டமர்ஸுக்கு எந்த மெட்டீரியல், எப்படி தைச்சா ஸ¨ட் ஆகும்னு எடுத்துச் சொல்லி, டிசைன் பண்ணி, ஸ்டிட்ச் செய்து கொடுக்கறோம். டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத்னு தேடிப்போய் நாங்க வாங்கற மெட்டீரியல்ஸ்... தரமா இருக்கணுங்கறதுல கவனமா இருக்கோம். என்னதான் ஹெவி வொர்க், அல்ட்ரா மாடர்ன் டிசைன் பண்ணிக் கொடுத்தாலும்... மெட்டீரியல் தரமா இல்லைனா, மொத்தமும் வேஸ்ட்.

குந்தன் வொர்க், ஆரி வொர்க், ஜர்தோஸி, கலம்காரி பேட்ச், கட் வொர்க், பிரைடல் சாரி வொர்க், டெம்பிள் வொர்க், ஆன்டிக் வொர்க், அப்ளிக் வொர்க்னு நாங்க பண்ணிக் கொடுக்கற 'கிராஃப்ட் வொர்க்’க்கு நல்ல வரவேற்பு. இதெல்லாம்தான், ஒரு தடவை எங்க கடைக்கு வர்ற கஸ்டமர், அடுத்த தடவை கூடவே புதுசா ரெண்டு கஸ்டமர்களைக் கூட்டிட்டு வர வைக்குது!'' என்றார்கள் அந்த பிஸினஸ் தோழிகள் பெருமையுடன்.

படங்கள்: எம்.உசேன்