நாச்சியாள்

'நீங்கள் பார்க்கும் வேலையினாலேயே நீங்கள் யார் என்று அறியப்படுகிறீர்கள்' - இது பழமொழி அல்ல... வாழ்க்கை மொழி!

பொறுப்பும் சமூக அக்கறையும் மிகுந்த அந்தப் பணியை 'கஷ்டப்பட்டு’ செய்யாமல் 'இஷ்டப்பட்டு’ செய்வதன் மூலம் பிரபலமாக அறியப்படும் பொறுப்பான பெண்கள் சிலர், தங்களின் வேலை... அதை எதிர்கொள்ளும் பாணி என்று எல்லாவற்றையும் குறித்து இங்கே பேசுகிறார்கள்...

அனுஷ்யா, காவல்துறை துணை கண்காணிப்பாளர், (சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு), காஞ்சிபுரம்:

''காவல்துறை பணியில், கறார் நடவடிக்கைகளைவிட, 'இப்படியரு குற்றம்சாட்டப்பட்டு, இந்த நபர் இங்கு வருவதற்கான காரணம் என்ன? இனி இந்தக் குற்றத்தை இவர் செய்யாமல் இருக்க என்ன செய்யலாம்..?’ என்ற சிந்தனையும், அது தொடர்பான கனிவான நடவடிக்கையும்தான் சம்பந்தப்பட்ட நபரை நேர் செய்யும் உளியாக இருக்கும். அதைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். அதனால்தான்... பிரச்னை காரணமாக இங்கே வரும்போது தனித்தனியாக பிரிந்து வரும் கணவன்-மனைவி, ஒன்றாக கைகோத்து திரும்பிச் செல்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது, என்னுடைய இரண்டு விரல்கள் பறிபோயின. குண்டுத் துகள்கள் தாக்கிய பாதிப்புக்கு இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறேன். என் வேலையை மக்களுக்கான சேவையாக செய்வதில், இதுபோன்ற வலிகளை மறக்கிறேன்!''

அருள்மொழி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்:

''ஒரு வழக்கு, வழக்கறிஞரிடம் வருகிறது என்றால்... அதைக் கொடுப்பவரின் பின்னணியில் சதையும் உணர்வும் சேர்ந்த ஒரு குடும்பமும்... அவர்களின் வாழ்க்கையும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதேபோல, எதிர்தரப்பில் இருப்பவர், வழக்கறிஞருக்கு தனிப்பட்ட எதிரி அல்ல... அவருக்கும் தன்னைப் போன்றதொரு குடும்பம் இருக்கும் என்பதையும் உணர வேண்டும். அதுதான் தொழில் தர்மம்.

ஒரு வழக்கை ஏற்றுக்கொள்வதற்கு முன், அந்த வழக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும், அதற்கு எதிராக உள்ள அம்சங்கள் பற்றியும் தெளிவாக அவர்களிடம் சொல்லிவிடுவது உத்தமம். ஆதாரமில்லாத வழக்குகளைத் தாக்கல் செய்து, அவர்களின் பணத்தையும் நேரத்தையும் நம்பிக்கையையும் வீணடித்து, மன வேதனை தருவதைவிட, ஆரம்பத்திலேயே 'நோ’ சொல்லிவிடுவது மனசாட்சிக்கு நல்லது. இந்த அணுகுமுறை ஆரம்பத்தில் தொழில் ரீதியான வருமானத்தைத் தராமல் போனாலும்... காலம் கடந்தும் பெயரை அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டிருக்கும்!''

பார்வதி, குழந்தைகள் நல மருத்துவர்:

'இந்த டாக்டர் நம்மள குணப்படுத்திடுவார் என்கிற நம்பிக்கையுடன் வரும் நோயாளியை, மருத்துவம் படித்த அறிவோடு மட்டும் பார்த்தால்... அது வெறும் பணம் தரும் தொழிலாக மட்டும்தான் இருக்கும். தாயன்புடன் பார்த்தால்தான் நோயாளி விரைவாக வீடு திரும்புவார் என்பதை என் ஐம்பது ஆண்டுகால அனுபவம் சொல்லித் தந்திருக்கிறது. அந்த அன்பான, அக்கறையான, கண்டிப்பான, அணுகுமுறையே நோயாளியின் நம்பிக்கையை அதிகப்படுத்தி, பாதி நோயைக் குணப்படுத்தி விடும். நோய் வருவதற்கு வெறும் உடல் சார்ந்த விஷயங்கள் மட்டும் காரணமாக இருக்காது... மனமும் காரணமாக இருக்கலாம். அந்த மனப் பிரச்னை என்ன என்பது பற்றியும் ஒரு டாக்டர் தெரிந்துகொண்டு சிகிச்சை அளிப்பதுதான் முழுமையான சிகிச்சை.

உடனடியாக ஒரு நோய் சரியாக வேண்டும் என்பதற்காக 'ஹை டோஸ்’ ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்து குணப்படுத்துவதைவிட, 'உனக்கு வந்திருப்பது இந்தக் காய்ச்சல். அது குணமாக இத்தனை நாளாகும். அதற்கு இந்த மருந்து சாப்பிட்டால் போதும்’ என பொறுமையாக சொல்லி, மருந்து கொடுப்பதுதான் தார்மீகம். அப்போதுதான்... 'மருத்துவர், கடவுளின் கருவி’ என்ற கூற்று உண்மையாகும்!''.

பேராசிரியை பர்வீன் சுல்தானா:

''பள்ளிகளில், ஆசிரியர்கள் குழந்தைகளை செதுக்குகிறார்கள். கல்லூரிகளில், ஆசிரியர்களைப் பார்த்து தன்னைத் தானே செதுக்கிக் கொள்கிறான் மாணவன். எனவே, பேராசிரியர் பணி என்பது 24 மணிநேரமும் விழிப்போடு இருக்கும் தாயைப் போல, மருத்துவரைப் போல கடினமான பணி. ஒரு கல்லூரி பேராசிரியரின் 'ஐடியாலஜி’ மாணவனை பாதிக்கும். அந்த பாதிப்பால் சமூகத்துக்கு நல்லதும் நடக்கும்; தீமையும் நடக்கும். அதனால் ஒரு ஆசிரியர், தான் பேசும் வார்த்தைகள், அணுகுமுறை, கற்பனைத் திறன், ஆடை உடுத்தும் நாகரிகம், நேரம் தவறாமை, அன்பு, அக்கறை என் அனைத்திலும் அதீத கவனத்தோடு இருப்பது அவசியம்.

சிறப்பான மாணவனை உருவாக்க விரும்பும் ஆசிரியர், தன் பாடத்தில் அதிக அறிவுடனும் 'அப்டேட்டேட் நாலெட்ஜு’டனும் இருப்பதுடன், 'இந்த ஆசிரியர் எனக்கு நல்ல ஆலோசகராக இருப்பார், என் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு சொல்வார்’ என்ற எண்ணத்தையும் ஒரு மாணவன் மனதில் விதைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியர், ஆளுமை விருட்சம். பல பறவைகள் தங்கும்; கூடுகட்டும்; நன்றாக வளரும்!''

படங்கள்: வி.செந்தில்குமார், வீ.நாகமணி