ரேவதி

ரிக்டர் அளவுகோலில் 8.9... ஜப்பான் வரலாற்றில் மிகப்பெரிய பூகம்பம்... முப்பது அடி உயரத்துக்கும் மேலே எழுந்த சுனாமி...'

- மார்ச் 11-ம் தேதி வெள்ளியன்று டி.வி-யில் பார்த்தபோதே சப்தநாடிகளையும் நடுநடுங்க வைத்தன இந்தக் காட்சிகள். இதையெல்லாம் நேரிலேயே பார்த்து, கொடுமையான சூழலில் சிக்கிக் கொண்டு தவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அவர்களில் ஒருவராக, அந்த பூகம்ப நிமிடங்கள் பற்றி இங்கே பேசுகிறார் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசிக்கும் நம் வாசகி சித்ரா கோவிந்த்...

''குடும்பத்தோட இங்க வந்து பதினாலு வருஷமாச்சு. நான் பிரைவேட் ஸ்கூல்ல இங்கிலீஷ் இன்ஸ்ட்ரக்டரா வேலை பார்த்துட்டிருக்கேன். கணவர், தனியார் நிறுவனத்துல உயர் பொறுப்புல இருக்கார். காலையில அவர் ஆபீஸுக்கு கிளம்ப, ரெண்டு குழந்தைகளும் ஸ்கூலுக்கு கிளம்பிட்டாங்க. நான் லீவு போட்டுட்டு, ஃப்ரெண்ட்டை பார்க்கறதுக்காக 50 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கற 'மைஹமா'ங்கற ஊருக்குப் போயிருந்தேன். அது, கடற்கரை பிரதேசம். ஃப்ரெண்டோட ஜாலியா பேசி அரட்டையடிச்சுட்டு, திரும்பிட்டேன்.

பிறகு, வீட்டுக்குத் தேவையான பொருட்கள வாங்கறதுக்காக காரை எடுத்துக்கிட்டு கடை வீதிக்குப் போனேன். அப்ப மணி மதியம் 2.45 (இந்திய நேரப்படி முற்பகல் 11.45) இருக்கும். காரை பார்க் பண்றப்ப, லேசா பூமி அதிர்ற மாதிரியிருந்தது. ஜப்பான்ல இது சாதாரண விஷயம்ங்கறதால... ஆரம்பத்துல பெருசா எடுத்துக்கல. ஆனா, தொடர்ந்து அஞ்சு நிமிஷம் விடாம அதிர்ச்சி நீடிக்கவே... கை, காலெல்லாம் உதறல் எடுக்க ஆரம்பிச்சுது. தலை சுத்தலும், மயக்கமுமா ஒரு நிமிஷம் என்ன நடக்குதுனே புரியல.

அதிர்வு நின்னப்பறம்தான் தெரிஞ்சுது... இதுக்கு முன்ன இல்லாத அளவுக்கான பூகம்பம் ஜப்பானைத் தாக்கியிருக்கற விஷயம். 'ஐயோ, நம்ம கணவர், குழந்தைங்க என்ன ஆனாங்களோ?'ங்கிற பயம் சட்டுனு எனக்குள்ள பத்திக்கவே... அழுகை முட்டிக்கிட்டு வர ஆரம்பிச்சுடுச்சு. லோக்கல் போன் எதுவுமே வேலை செய்யல. உடனே, ஸ்கூலுக்கு ஓடினேன். வழியில பழைய பில்டிங் எல்லாம் இடிஞ்சு விழுந்திருந்தது. பார்க்கறதுக்கு 'பக்பக்’னு இருந்துச்சு. ஸ்கூலுக்குள்ள போன பிறகுதான் மூச்சே வந்துச்சு. ஹெல்மெட், போர்வை எல்லாம் கொடுத்து பாதுகாப்பான இடத்துல குழந்தைங்கள வெச்சுருந்தாங்க. உடனடியா அவங்கள வீட்டுக்குக் கூட்டி வந்துட்டேன்.

பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் கணவர்கிட்ட 'ஸ்கைப்' (இன்டர்நெட்) மூலமா பேச முடிஞ்சுது. 'ரோடெல்லாம் வெள்ளக்காடு, ஒரே டிராஃபிக். வண்டி எதுவும் போகல. ரெண்டு மணி நேரமா நடந்தே வீட்டை நோக்கி வந்துட்டிருக்கேன்’னு அவர் சொல்லவும் அதிர்ந்தே போயிட்டேன். இப்ப நைட் 10.30 மணி. இன்னும் அவர் வந்து சேரல.

இந்தச் சுனாமியால ரொம்ப ரொம்ப பாதிக்கப்பட்டது வடகிழக்கு ஜப்பான்ல இருக்கற சென்டை நகரம்தான். அதை மாத்தி மாத்தி டி.வி-யில காண்பிச்சிட்டேயிருக்கறத பார்க்கறப்ப... குலை நடுங்குது. காலையில நான் போயிட்டு வந்த 'மைஹமா'ங்கற ஊர்... தண்ணீர் காடா, தரைமட்டமா மாறிப் போயிடுச்சு. அங்க இருந்தவங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு, ஏதாச்சுனு எந்தத் தகவலும் இல்ல. வீடு, கார், ஃபேக்டரினு எல்லாத்தையும் அலை அடிச்சிட்டு போயிட்டேஇருக்கறத பார்க்கறப்ப... 'தசாவதாரம்' பட க்ளைமாக்ஸ் ஸீன்தான் ஞாபகத்துக்கு வருது.

இது எப்பவுமே பூகம்ப பூமிதான். அடிக்கடி பூகம்பம் வர்றதால, ஜப்பானியர்கள் எல்லாம் மனசுல தைரியத்தை ஏத்திக்கிட்டுதான் வாழ்ந்துகிட்டிருக்காங்க. இதுநாள் வரைக்கும் அவங்க நிலைகுலைஞ்சதில்ல... ஆனா, இந்தத் தடவை வந்த நில நடுக்கம் எல்லாரையுமே லேசா ஆட்டித்தான் பார்த்திருக்கு. இப்பவும் கூட இந்த பூமாதேவியோட நடுக்கம் நின்னபாடில்ல... அதிர்ந்துகிட்டேதான் இருக்கா...'' என்று சித்ரா கோவிந்த் சொல்லி முடித்தபோது, அந்த அதிர்வின் அலைகளை நம்மாலும் உணர முடிந்தது!