கரு.முத்து

மூலவர், உற்சவர் என்று எந்த விக்ரகங்களும் இல்லை, கொடிமரம் இல்லை, பலிபீடம் இல்லை, வாகனங்கள் இல்லை, அன்ன நைவேத்தியம் இல்லை, தேங்காய் உடைப்பது இல்லை, வாழைப்பழம் இல்லை... இத்தனை 'இல்லைகள்’ இருக்கும் அந்தக் கோயிலில்... கூட்டத்துக்கும் குறைவே இல்லை! அது... நாடி வந்தோர்க்கு நல்லனவெல்லாம் அள்ளித் தருகிறவளான ஆதிசக்தி அன்னை 'மூங்கிலணை காமாட்சி' குடிகொண்டு இருக்கும் அருள் ஆலயம்!

தேனி மாவட்டம், வத்தலக்குண்டு அருகில் இருக்கும் தேவதானப்பட்டியில் இருந்து உள்ளே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், மலையடிவாரத்தில் மஞ்சளாற்றின் தெற்குக் கரையில் அமைந்திருக்கிறது கோயில். மண்டபத்தைக் கடந்தால்... சந்நிதி. ஆனால், உள்ளே நுழைய முடியாதபடி கதவுகள் மூடப்பட்டுள்ளன. அந்த வாயிலில் திரிசூலம், ஐந்து தலை நாகம் ஆகிவற்றோடு அன்னை காமாட்சி போன்ற ஒரு வடிவத்தை உருவாக்கியுள்ளனர். அதைத்தான் 'மூங்கிலணை காமாட்சி' என்று வழிபடுகிறார்கள். இதற்குத்தான் எல்லா உற்சவங்களும்!

உண்மையில், அந்தக் கதவுகளைத் திறந்தால்... சுடாத செங்கற்களால் பத்துக்கு பத்தடி என்ற அளவில் எழுப்பப்பட்ட சுவருக்குள், புல் கொண்டு வேயப்பட்ட கூரைக்குள், மூங்கிலால் செய்யப்பட்ட பெட்டிக்குள் வீற்றிருக்கிறாள் காமாட்சி!

பக்தர்கள் கொண்டு வரும் நெய்யை, வாயிலில் இருக்கும் அன்னை முன்பாக இருக்கும் தீபத்தில் இடுகிறார்கள். எலுமிச்சையை அன்னையின் பாதத்தில் வைத்து எடுத்து, பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். தேங்காய் எடுத்து வந்திருந்தால் அதில் ஒரு கறுப்புப் பொட்டு மட்டும் வைத்து திரும்பக் கொடுக்கிறார்கள்.

'ஏன் கதவுக்கு வழிபாடு, ஏன் தேங்காய் உடைப்பதில்லை, ஏன் கதவு மூடப்பட்டே இருக்கிறது, பெட்டியில் அம்மன் வந்தது எப்படி?' என்று வரிசையாக எழும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும்... பதிலாக ஒவ்வொரு புராண கதை இருக்கிறது!

ஒரு காலத்தில் 'வச்சிராபுரி' என்றழைக்கப்பட்ட இப்பகுதியை ஆண்ட வச்சிரதந்தன், தேவர்களுக்கு தீராத துன்பங்கள் விளைவித்தான். குழந்தையாக அவதரித்து அவனது தலையைக் கைகளால் கிள்ளி எறிந்து வதம் புரிந்தாள் அன்னை. மகிழ்ந்து போன தேவலோகத்தினர்... ஆயிரம் குடங்களில் நீர் எடுத்து வந்து, நறுமஞ்சளை கலக்கி, அபிஷேகம் செய்தனர். அந்த நீர் பெருக்கெடுத்து ஓடிய இடம்தான்... தற்போதைய மஞ்சளாறு. அசுரனின் தலை விழுந்த இடம் தலையாறு; மூளை சிதறிய இடம் மூளையாறு; குலை, ஈரல் விழுந்த இடம் குலையூத்து; உடல் குறுக்காக விழுந்த இடம் குறுக்குமலை (புராண கதைக்குச் சான்றாக இன்றும் அந்தப் பகுதியில் இருக்கின்றன இந்த ஊர்கள்)!

வச்சிரதந்தனை வதம் செய்த பாவம் போக்க, தலையாற்றில் ஒரு மூங்கில் புதரில் தவம் இருக்கலானாள் அன்னை. நூற்றாண்டுகள் கடந்தும் தவம் நீடித்த நிலையில், அங்கே வேட்டைக்கு வந்த தாண்டிக்குடி ஜமீன்தாரின் கண்களில் பட்டிருக்கிறாள் காமாட்சி. உடனே, போர்வையில் சுற்றி தூக்கிச் சென்றார். ஜமீன் மாளிகைக்குள் நுழைந்ததும் போர்வைக்குள் இருந்தது வெறும் காதோலை, கருகமணி, கிலுகிலுப்பை, சித்தாடை போன்றவைதான்!

''அனைத்தையும் ஒரு மூங்கில் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிடு'' என்று அசரீரி ஒலிக்க, அதன்படியே விடப்பட்ட மூங்கில் பெட்டி, ஒரு மூங்கில் புதர் அருகே கரை ஒதுங்கியது. பாம்பாக மாறி அருகிலுள்ள புற்றில் குடி புகுந்தாள் அன்னை. வெகுகாலத்துக்குப் பிறகு வெளிப்பட நினைத்த அன்னை, மீண்டும் மூங்கில் பெட்டியேறி ஆற்றில் மிதந்து செல்ல... அதைக் கரை சேர்த்து, தேங்காய்கூட உடைக்காமல், வாழைப்பழத்தை உரிக்காமல் அவசர அவசரமாக சூடத்தை கொளுத்திவிட்டார் கன்னடிய வகுப்பைச் சேர்ந்த ஒருவர். பிறகு, அவர் தவறை உணர்ந்தபோதும், 'அதுதான் அன்னையின் விருப்பம்' என்று எல்லோரும் சொல்ல... காலகாலமாக தேங்காய் உடைக்காமலே பூஜை நடக்கிறது... தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக!

இனி, கோயிலுக்குள் வலம் வருவோம்! கரும்பில் தொட்டில் கட்டி, தங்கள் மகனை அதில் சுமந்துவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த சிவசங்கரி - ஜெயப்பிரகாஷ் நாராயணன் குடும்பத்தினர், ''மனம்போல மாங்கல்யம் கிடைச்சாலும்... மகிழ்ந்து கொஞ்சுறதுக்கு மழலைச் செல்வம் கிடைக்க எங்களுக்கு தாமதமாச்சு. எங்கம்மா நேரா இங்க அழைச்சுகிட்டு வந்து, நான் கட்டியிருந்த சேலையோட முந்தானையைக் கிழிச்சு, இங்கயிருக்கற மரத்துல தொட்டில் கட்ட சொன்னாங்க. அதன்படியே செஞ்சு மனமுருக வேண்டிக்கிட்டேன். அடுத்த ஒரு வருஷத்துல பொண்ணு பொறந்தா. அதுக்கப்புறம் பையனும் பொறந்தான். அவளுக்கு நன்றி சொல்லத்தான் இந்த கரும்புத் தொட்டில்'' என்றார் சிவசங்கரி பரவசத்துடன்!

மொட்டையடித்து... காது குத்த, முன்ஜென்ம வினைகள் தீர, இப்பிறவியின் பாவங்கள் அகல, திருமணத்தடை நீங்க, உடல் நோய்கள் விலகி ஓட... என்று விதம்விதமான கோரிக்கைகளோடு குவிந்த வண்ணம் உள்ளனர் பக்தர்கள்.

சரி, இத்தகைய பெருமை வாய்ந்த அம்மன் ஆலய சந்நிதி பூட்டப்பட்டே இருப்பது ஏன்? என்பதற்கான காரணத்தை விவரிக்கிறார் பூசாரி பத்மநாதன். ''எழுமலை ஜமீன் வம்சத்தைச் சேர்ந்த, இளம் வயதிலேயே கணவனை இழந்த காமக்காள், இள வயது மகன் பொம்மையசாமியுடன் கோயில் பணிகளை பார்த்துக் கொண்டு, இங்கேயே தங்கியிருந்தார். காமக்காளுடன் இரவு நேரங்களில் பேசுவாளாம் அன்னை காமாட்சி. இதைப் பார்த்து, பிற ஆணுடன் தவறாகப் பழகுகிறாளோ... என்ற சந்தேகப்பட்டு தாயிடமே கேட்டிருக்கிறான் பொம்மையசாமி. காமக்காள் விவரத்தைச் சொல்ல, 'அன்னையை எனக்கும் நேரில் காட்டினால்தான் நம்புவேன்’

என்றிருக்கிறான். இதையறிந்து நேரில் வரச் சொன்னாள் காமாட்சி. மூங்கில் பெட்டி திறக்கப்பட்டபோது... ஜோதி ரூபமாக வெளிப்பட்டாள் அன்னை. அந்த தீட்சண்யத்தை தாங்க முடியாமல், தலை சிதறி இறந்து போனான் பொம்மையசாமி. அதிலிருந்துதான் பெட்டியை தரிசனம் செய்யும் வழக்கம் இல்லாமல் போனது!'' என்று கதையை சொல்லி முடித்தார்.

இதற்குநடுவே... தாண்டிக்குடி ஜமீன் மற்றும் எழுமலை ஜமீன் இடையே கோயில் உரிமை தொடர்பாக பிரச்னை வர, கதவை இழுத்து மூடிய தாண்டிக்குடி ஜமீன்தார், 'யாரும் திறக்கக் கூடாது’ என்று அம்மன் மீது சத்தியம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். அந்தக் கதவு இன்றளவும் திறக்கப்படவே இல்லை. ஆனால், கதவுக்குள்ளிருந்தே பொழியும் அவளுடைய கருணை மழையை தாழிட்டு அடைக்க யாராலும் முடியாதே!

இப்படி காணா பொருளாக இருந்தாலும், கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக தென்பகுதி மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மூங்கிலணை காமாட்சி... அதிசயம் மட்டுமல்ல... அபூர்வமும்கூட!

எப்படிச் செல்வது?

திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்லும் சாலையில் வத்தலக்குண்டு - பெரியகுளம் இரண்டு நகரங்களுக்கு இடையில் இருக்கிறது தேவதானப்பட்டி. 'அரிசிக் கடை நிறுத்தம்' என்று சொல்லி இறங்க வேண்டும். அங்கிருந்து மினி பஸ், ஷேர் ஆட்டோக்களில் கோயிலுக்குச் செல்லலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்... காலை ஆறு முதல் இரவு எட்டு மணி வரை. கோயிலின் தொலைபேசி எண்: 04546-235511.

- அம்மன் வருவாள்...
படங்கள் : வீ.சிவக்குமார்