Published:Updated:

நமக்குள்ளே....

நமக்குள்ளே....

நமக்குள்ளே....

நமக்குள்ளே....

Published:Updated:
நமக்குள்ளே....

'பெண் சிருஷ்டியில் மிகவும் உயர்ந்தவள். அவள் சக்தியின் வடிவம். உலக இயக்கம் பெண்களாலேயே நடைபெற்று வருகிறது’ என்றெல்லாம் பாராட்டிக் கொண்டே, மறுபக்கம் பெண்குலம் முடக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு.

அதையெல்லாம் மெள்ள அடித்து நொறுக்கி, பெண்கள் முன்னேற ஆரம்பித்து அதிக காலம் ஆகவில்லை. ஆனால், குறுகியகால வேகம்... பிரமிக்க வைப்பதாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பத்தாயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றார் கேரளத்து பிரிஜா...

அவரைப் பின்தொடர்ந்த மகாராஷ்ட்ராவின் கவிதா ரவுத் வெள்ளி வென்றார்...

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக அனுமதிக்கப்பட்ட பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி தங்கக் கோப்பையைக் கைப்பற்றியது!

பள்ளி, கல்லூரி தேர்வுகள், வேலைக்கான தேடல், தொழில்துறை, ஐ.டி, அறிவியல் என்று சகல துறைகளிலும் 'நாங்கள் இளைப்பில்லை காண்' என்கிறபடி விஸ்வரூபம் எடுத்திருக்கும் பெண் இனம், விளையாட்டுத்துறையிலும் புகுந்து விளையாடுவது எத்தனை பெருமை!  சொல்லப்போனால், இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றும் வகையில் இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்திருப்பது... பெண்கள்தான்!

இதையெல்லாம் நினைத்துப் பூரிக்கும் அதேசமயம், இந்த வேகத்துக்கு இடையே சறுக்கல்களைச் சந்தித்து நாடு முழுக்க விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் சில பெண்களைப் பற்றி படிக்கும்போது நெருடலாகத்தான் இருக்கிறது. புரிந்திருக்குமே... அதிகார மையங்களைச் சுலபமாக அணுகி, முறைகேடான வர்த்தகங்களைப் பேசி முடித்ததாக தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்திருக்கும் நீரா ராடியா ஓர் உதாரணம்.

பாதைகள் மாறும்போது பயணங்களும் மாறத்தான் செய்யும். எந்தத் திசை நோக்கி மறந்தும் அடியெடுத்து வைக்கக் கூடாது என்பதற்கு, நீரா ராடியா நன்றாகவே வழிகாட்டிவிட்டார் என்று சொல்லலாமா..?

உரிமையுடன்

நமக்குள்ளே....

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism