Published:Updated:

கிரீன் பிஸினஸ் கில்

கிரீன் பிஸினஸ் கில்

கிரீன் பிஸினஸ் கில்

கிரீன் பிஸினஸ் கில்

Published:Updated:

நிகழ்வுகள்

இந்தியா, பங்களாதேஷ், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளின் முன்னேற்றத்துக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவுவதற்காகத் துவங்கப்பட்ட அமைப்பு, 'சார்க்' (SAARC -South Asian Association for Regional Cooperation). இதன் பெண்கள் முன்னேற்றப் பிரிவு... 'எஸ்சிடபுள்யுஇசி' (SCWEC -SAARC Chamber Women Entrepreneur Council). பெண்களின் தொழில் பங்கேற்புக்கும், பெண் சுயதொழில் முனைவோரின் வளர்ச்சிக்கும் இப்பிரிவு உதவிகளைச் செய்து வருகிறது.

கிரீன் பிஸினஸ் கில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

இதன் வருடாந்திரக் கூட்டம் மற்றும் சார்க் உறுப்பு நாடுகளில் உள்ள பெண் சுயதொழில் முனைவோர்களின் உற்பத்திப் பொருட்கள் இடம் பெற்றிருந்த கண்காட்சி சமீபத்தில் சென்னை, ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. கூட்டத்தின் இந்த ஆண்டுக்கான தலைப்பு... 'கிரீன் பிஸினஸ்’! அதாவது, 'சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்கள்’.

இந்தியாவில் முன்னோடி நிறுவனமாக உள்ள 'அப்பாச்சி காட்டன்’ நிறுவனத்தின் பங்குதாரர் விஜயலட்சுமி நாச்சியார், இப்போது சர்வதேச சந்தையை எட்டியுள்ள தங்கள் நிறுவனத்தின் வெற்றிக் கதையைப் பகிர்ந்து கொண்டார். ''சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் மாசுபடுத்தாத ஆர்கானிக் காட்டனை உற்பத்தி செய்கிறோம். தரை விரிப்பு, மேஜை விரிப்பு முதல் சேலை, சுடிதார் ரகங்கள் வரை தயாரிக்கிறோம். இப்போது இந்தியாவில் கிடைக்கும் காட்டன்களிலேயே தரமானது எங்களுடையதுதான்!'' என்றவர்,

'

கிரீன் பிஸினஸ் கில்

'தொழில் என்பது எதையும் அழித்து வாழ்வது அல்ல, வைத்து வாழ்வதே!'' என்றார் கம்பீரமாக.

அரங்கில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் இயற்கையை மாசுபடுத்தாத முறையில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், பொம்மைகள், நகைகள், துணி வகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவை ஈர்க்க, கிரீன் பிஸினஸ் சார்ந்த சிறந்த தொழில் முனைவோர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. கொடுக்கப்பட்ட 10 விருதுகளில் 6 விருதுகளை பிறநாட்டினரும், 4 விருதுகளை இந்தியப் பெண்களும் பெற்றனர். அதில் இரண்டு பேர் தமிழ்ப் பெண்கள் என்பது கூடுதல் பெருமை! அந்த சர்வதேச மேடையில் ஒலித்த நம் பெண்களின் குரல், இன்னும் பல பெண்களுக்கான நம்பிக்கை டானிக்...

சென்னையைச் சேர்ந்த 'விக்டர் இன்டோஜனிக் பிரைவேட் லிமிடெட்' டைரக்டர் கீதா பிரேம்குமார், ''எந்தப் பின்புலமும் இல்லாமல் நடுத்தர குடும்பத்திலிருந்து முன்னேறி வந்திருப்பவள் நான். கடந்த 26 ஆண்டுகளாக எலெக்ட்ரானிக் பொருட்களை உலகமெங்கும் எக்ஸ்போர்ட் செய்து வருகிறேன். ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்றது என் நிறுவனம். என்னுடைய சிறுதொழில் ஆலோசனை மூலம் இது வரை ஐயாயிரம் பேருக்கு மேல் பயனடைந்துள்ளனர்'' என்றார் சுருக்கமாக!

'ஹூயூமன் ஹெல்த் மற்றும் அனிமல் ஹெல்த்' பொருட்களை உலக அளவில் ஏற்றுமதி செய்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த 'யுனிக் பயோடெக் லிமிடட்’ மேனேஜிங் டைரக்டர்... ரத்னசுதா. ''நான் ஏழ்மையிலிருந்து எழும்பி வந்துள்ளதால், மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் தரமான பயோடெக் மருந்துகளை உற்பத்தி செய்வதையே என் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்...'' என்றார் கரகோஷங்களுக்கு இடையே!

'மார்க்கதரசி சிட் ஃபண்ட் மற்றும் கலாஞ்சலி ஆர்ட் அண்ட் கிராஃப்ட்' கம்பெனியின் முதல்வர் ஷைலஜா கிரண், ''நம் கலாசாரத்தை போற்றும் வகையிலான திருமண ஆடைகளையும் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறேன். இப்படித்தான் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறேன்!'' என்றார் பரவசத்துடன்.

கிரீன் பிஸினஸ் கில்

சென்னை, 'ப்ளூ எலிஃபன்ட் டிரான்ஸ்லேஷன் சர்வீஸ்’-ன் ஃபவுண்டர் மற்றும் சி.இ.ஓ. சின்மயி ஸ்ரீபதா மேடை ஏறியபோது, ''ஏய் நம்ம பொண்ணு!'’ என்றொரு பரவசம் பார்வையாளர்களிடம்! ''சுமார் 120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு வேலைகளை எடுத்து நடத்தி வருகிறேன். பிஸினஸ் சம்பந்தமில்லாத குடும்பத்தில் பிறந்திருந்தும், இந்த இளம் வயதில் தொழில் சாதனையாளர் விருது பெற்றிருப்பதில் சந்தோஷம் எனக்கு!'' என்றார் அழகான சிரிப்புடன், பெரும்பாலானவர்களுக்கு பாடகியாகவே அறியப்பட்ட பிஸினஸ் பெண் சின்மயி!

'எஸ்சிடபுள்யுஇசி' அமைப்பின் நடவடிக்கைகளை அறியவும், அதனிடமிருந்து உதவி பெறவும் விழையும் பெண்கள் www.scwec.com என்ற இணையதளத்தை அணுகலாம்!

 படங்கள்: என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism