Published:Updated:

ராணி கைய வெச்சா.... வண்டி ஜோரா போகுதுல்ல !

ராணி கைய வெச்சா.... வண்டி ஜோரா போகுதுல்ல !

ராணி கைய வெச்சா.... வண்டி ஜோரா போகுதுல்ல !

ராணி கைய வெச்சா.... வண்டி ஜோரா போகுதுல்ல !

Published:Updated:

விர்ர்ர்ர்ரூம்...

வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ரேஸ் மைதானம் உயிர்பெற்று உறுமும். ஜே.கே. டயர் தேசிய கார் பந்தயம் துவங்கி, சிட்வின் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப்புக்கான பந்தயம் வரை பலவிதமான கார் ரேஸ்களும் தூள் பறக்கும் இடம் அது. கார்களின் டயர்கள் பொசுங்கப் பொசுங்க... நவம்பர் 28-ம் தேதியன்று அங்கே ஒரு கார் பந்தயம்...

ராணி கைய வெச்சா.... வண்டி ஜோரா போகுதுல்ல !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

அது... முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட பந்தயம். வழக்கமாக போலோ கப்புக்காக ரேஸர்கள் பயன்படுத்தும் அதே 1.6 லிட்டர் இன்ஜின் கொண்ட வோக்ஸ் வாகன் போலோ கார்கள்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டன.

இந்தப் பந்தயத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி... புனே, மும்பை போன்ற இடங்களிலிருந்தும் வந்திருந்த பெண்கள் கலந்து கொண்டார்கள். அதில் ஒருவர்... 99-ம் ஆண்டின் 'மிஸ் இந்தியா’ குல் பனாங். தற்போது பாலிவுட் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் அவர்,

'' 'டர்னிங் 30’ என்கிற ஒரு இந்திப் படத்தில் நான் கார் ஓட்டும் வீராங்கனையாக நடிக்கிறேன். கார் ரேஸில் கலந்து கொள்வது மாதிரி ச்சும்மா நடித்தபோதே மண்டைக்குள் குபுகுபுவென்று அமிலங்கள் சுரந்தன. அதனால் நிஜ ரேஸில் கலந்து கொண்டு அந்த சந்தோ ஷத்தை பூரணமாக அனுபவிப்பதற் காகவே, சின்ஸியராக ரேஸ் கார் பயிற்சி எடுத்தேன். இதோ காரில் பறக்கப் போகிறேன் பாருங்கள்...'' - படபடவென்று பேசிவிட்டு ஹெல்மெட், ஷூவுடன் பரபரத்தார் அந்த ஸ்டார்!

'' 'எத்தனை நாளைக்குத்தான் ஆண்கள் கார் ஓட்டுவதை படம் பிடித்துக் கொண்டிருப்பது?! நாமும் ஏன் ரேஸில் கலந்து கொள்ளக்கூடாது...?’ என்று ஆரம்பத்தில் வீம்புக்காக எழுந்த கேள்வி நாளடைவில் அடக்க முடியாத ஆர்வமாக மாறியது. அதற்கு, இந்த 'பெண்கள் ரேஸ்' ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறது. எங்கள் சாகசமும் கவர் ஸ்டோரியாக வரும் பாருங்கள்!'' - கையிலிருந்த டி.வி. மைக்கை உதவியாளரிடம் கொடுத்துவிட்டு ரேஸ் டிரெஸ்ஸுக்கு மாறிய சோஹினி, சி.என்.பி.சி. டி.வி. 18-ன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.

3.74 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த மைதானத்தில், இந்த வீராங்கனைகள் 150 கி.மீட்டர் வேகத்துக்கு மேலே கார்களை ஓட்ட... ஆபத்தான வளைவு களில்கூட வேகம் குறையாமல் சென்ற கார்களைப் பார்த்து பார்வையாளர் மாடம் கரகோஷத்தால் அதிர்ந் தது. அபாயகரமான 12 வளைவுகளை கொண்ட இந்த மைதானத்தை ஏழுமுறை சுற்றி முதலாவதாக வந்தார் புனே நகரைச் சேர்ந்த நவாஸ் சாந்து. இவரின் உச்சபட்ச வேகம் 178.5 கி.மீட்டர்!

இரண்டாவதாக சரிகா ஷெராவத், மூன்றாவதாக அனிதா கோலே ஆகியோர் இடம் பிடிக்க, மொத்த போட்டியாளர்களில் பார்வையாளர்களின் கவனத்தை ரொம்பவே கவர்ந்தார்... 46 வயதான ஃபாரா வக்கில்.

''கார் ரேலி எனப்படும் நீண்ட தூர பயணங்களில் கலந்து கொண்டு இமயமலை துவங்கி ராஜஸ்தான் பாலைவானம் வரை பலதரப்பட்ட இடங்களிலும் பயணம் செய்த அனுபவம் எனக்கு உண்டு. இடையில் இதில் எல்லாம் பங்கேற்காமல்... வீடு, ஆபீஸ் என்று இருந்துவிட்டேன். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இப்படி ஒரு பந்தயத்தில் கலந்து கொண்டது, ஒரே சமயத்தில் ஒரு முழுபாட்டில் பூஸ்ட் குடித்தது போல புத்துணர்வாக இருக்கிறது!'' என்றார் சந்தோஷம் பொங்க.

இந்தக் கார்களில் டிரைவர் உட்கார ஒரே ஒரு ஸீட் மட்டும்தான் இருக்கும். மற்ற ஸீட் இருக்க வேண்டிய இடங்களில் குறுக்கும் நெடுக்குமாக இரும்புக் குழாய்கள் இருக்கும். ஒருவேளை விபத்துக்கு ஏற்பட்டால் கார் நசுங்கி டிரைவர் அடிபடாமல் இருக்க உதவும் குழாய்கள் அவை!

''இட்ஸ் ஆல் இன் த கேம்!'' என்று சிரிக்கிறார்கள் அந்த ரேஸ் பெண்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism