Published:Updated:

'யாத்தே... நம்ம ஆன்ட்டியா இது...?!'

'யாத்தே... நம்ம ஆன்ட்டியா இது...?!'

'யாத்தே... நம்ம ஆன்ட்டியா இது...?!'

அவள் விகடனும், சன்ஃபீஸ்ட்டும் இணைந்து கலக்கும் அசத்தல் பெண்கள் திருவிழா... இம்முறை களைகட்டியது சிங்காரச் சென்னையில்! மார்ச் - 13 அன்று காலை 8.30 மணி முதலே குவியத் துவங்கிய தலைநகர் வாசகிகளால் உற்சாகமானது... எழும்பூர், எத்திராஜ் மகளிர் கல்லூரி அரங்கம். குறிப்பாக, நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தோழி பார்கவி, 'ஆஃப் ஸ்டேஜ்’ல் போட்ட ஆட்டம், சூப்பர்ப்!

முதல் போட்டி 'மியூஸிக்கல் சேர்’. ஏதோ கோயில் அரசமரம் போல பெண்கள் கூட்டம் கூட்டமாக நாற்காலிகளைச் சுற்ற, ஒவ்வொரு சுற்றிலும் கூட்டம் இளைத்தது. இறுதிச் சுற்றில் சான்ஸ் கிடைத்தும், வெகு நேரமாக இருவரும் ஒரு நாற்காலியைச் சுற்றிக் கொண்டிருக்க, ''ஹலோ... என்னங்க நடக்குது இங்க..?'' என்று தொகுப்பாளினி சுமதி ராஜகோபால் கேட்டபோதுதான் தெரிந்தது விஷயம்! ''இவங்க என் அண்ணி. இவங்க ஜெயிச்சா  லும் எனக்கு சந்தோஷம்தான்...'' என்று மகாலட்சுமி சொல்ல, ''என் நாத்தனார் ஜெயிச்சாலும் எனக்கு சந்தோஷம் தான்...'' என்று 'அண்ணி’ சாந்தி உருக, ''யாரா வது ஒருத்தர் உட்காருங்கப்பா!'' என்று கூவினார்கள் ஆடியன்ஸ். இறுதியில் வென்றார்(!) மகாலட்சுமி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

ஸ்கிப்பிங் போட்டியில் இருபது ப்ளஸில் இருந்து, அறுபது ப்ளஸ் வரை கிட்டத்தட்ட 100 போட்டி யாளர்கள் தொடர்ந்து குதூகலத்துடன் குதித்ததில், ஸ்டேஜில் 'குட்டி சுனாமி! இறுதியில், 89 'கவுன்ட்ஸ்’ எடுத்து வென்றார் முத்துலட்சுமி. நடனப் போட்டி யில் 'யாத்தே யாத்தே...’, 'கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன...’ பாடல்களுக்கெல்லாம் தோழிகள் ஃபுல் ஸ்விங்கில் ஆட, ''ஐய்... நம்ம ஆன்ட்டியா இது..?!'' என்று அவர்கள் தங்களுடன் அழைத்து வந்திருந்த பக்கத்து வீட்டு டீன்கள் எல்லாம் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். ஹைலைட்டாக 64 வயதுப் பாட்டி வசந்தி, தன் இரண்டு பெண்களுடனும் ஆடிய டான்ஸுக்கு, செம்ம அப்ளாஸ். போட்டிகளுக்கு இடையே 'டயட்டீஷியன்' ஷைனி சந்திரன் சொன்ன, உடல் பருமனைக் குறைக்கவும்... ஆரோக்கிய மாக வாழ்வதற்கும் ஏற்ற 'டயட்’ குறிப்புகள் நிகழ்ச்சியின் ஹைலைட்! 'யோகா டீச்சர்' ப்ரியா எளிய மூச்சுப் பயிற்சிகள் செய்ய, நம் தோழிகள் அழ காக பின்பற்றினர்.

'யாத்தே... நம்ம ஆன்ட்டியா இது...?!'

வெற்றியாளர்கள், போட்டியாளர்களுக்கு பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும்  வழங்கப்பட... பார்வை யாளர்கள் அனைவருக்கும் சன்ஃபீஸ்ட் கிஃப்ட் பேக்குகளும், அவர்களின் போட்டோ ஃப்ரேம்களும் வழங்கப்பட்டன.

'கொளுத்தற சென்னை வெயிலிலும் எங்களை கூல் செஞ்சுட்டீங்க..!’ என்று சந்தோஷ ஜில்லாகி கலைந்தனர் தோழிகள்.