Published:Updated:

24 வயதில் 28 கோல்டு மெடல் !

அனுஷாவின் அசத்தல் கிராஃப்

ம.பிரியதர்ஜினி

24 வயதில் 28 கோல்டு மெடல் !

இருபத்தி எட்டு கோல்டு மெடல்களைக் கழுத்து கொள்ளாமல் மாட்டிக் கொண்டு, அதற்கான சர்டிஃபிகேட்களைக் கை கொள்ளாமல் தாங்கி, சில நிமிடங்கள் வரை நீண்டு தொடர்ந்த ஆராவார கைதட்டல்களுக்கு இடையே மேடையில் இருந்து அனுஷா இறங்கியபோது, எதிரே அமர்ந்திருந்த அனைவருக்குமே அவ்வளவு பெருமிதமாகத்தான் இருந்தது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமீபத்தில் சென்னையில் நடந்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் 14-ம் பட்டமளிப்பு விழாவின் நாயகி டாக்டர் அனுஷா பாலகிருஷ்ணன், ''மேற் படிப்பு ப்ளஸ் வேலைக்காக அமெரிக்கா கிளம்பிட்டு இருக்கேன். அதான் கொஞ்சம் ஷாப்பிங் வேலைகள்ல பிஸி!'' என்று எனர்ஜெட்டிக்காக வந்தமர்ந்தார்.

''நாங்க டெல்லியில செட்டில் ஆன தமிழ்க் குடும்பம். அம்மா, கேந்திரிய வித்யாலயா ஸ்கூல்ல வைஸ் பிரின்ஸிபால். அப்பா, லண்டன்ல இருக்கற சிண்டிகேட் பேங்க்ல ஜெனரல் மேனேஜர். தங்கை, யூ.எஸ்-ல எம்.ஏ., டெவலப்மென்ட் எகனாமிக்ஸ் படிக்கறா...'' என்றவர்,

''நான் நல்லா படிப்பேன். ஆனா, காலையில, ராத்திரினு நாள் முழுதும் படிக்கற வகை இல்ல. எக்ஸாமுக்கு முதல் நாள் புக்கை எடுக்கற லட்சம் ஸ்டூடன்ட்ஸ்ல நானும் ஒருத்தி! ஸ்கூல்ல இருந்தே அப்படித்தான். 'நீ என்னவாகப் போற?’னு யாராச்சும் கேட்டா, 'வெட்ரினரி டாக்டர்!’னுதான் சொல்லுவேன். அந்தப் படிப்பு மேல எனக்கு ஆதியில இருந்தே அவ்வளவு ஆர்வம்!

##~##

அதாவது, நாலாவது படிக்கறப்ப லைப்ரரியில நிறைய புக்ஸ் படிப்பேன். நாய், பூனை, யானை, மாடுனு விலங்குகளோட படங்களைப் பார்க்கறதுல ரொம்ப இஷ்டமா இருக்கும். ஜேம்ஸ் ஹெரியட்ங்கற இங்கிலாந்து நாட்டு வெட்ரினரி சர்ஜன் எழுதின ஒரு புத்தகத்தையும் அந்த வயசுல படிச்சேன். அதுவே எனக்கு விலங்குகள் மேல ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த, 'நாய் வளர்க்கலாம்... பூனை வளர்க்க லாம்'னு வீட்டுல சொன்னேன். 'சீ... அதெல்லாம் அலர்ஜி'னு சொல்லி ஒதுக்கித் தள்ளிட்டாங்க. அந்த விஷயம் மனசுல ஆழமா பதிஞ்சுதான்... வெட்ரினரி சயின்ஸ் மேல எனக்கு ஆர்வத்தை உண்டாக்கிடுச்சு போல. ஒருவேளை நாய் வளர்க்க அனுமதிச்சிருந்தா... எம்.பி.எஸ்.எஸ். படிக்கப் போயிருப்பேனோ... என்னவோ'' என்று சொல்லி சிரித்த அனுஷா,  

'

24 வயதில் 28 கோல்டு மெடல் !

'ப்ளஸ் டூ முடிச்சப்போ, என்னோட மார்க்குக்கு எனக்கு மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ். ஸீட் கிடைச்சது. ஆனாலும், என் லட்சியப்படி சென்னை, வெட்ரினரி யுனிவர்சிட்டியில கால்நடை மருத்துவப் படிப்புல 'பி.வி.எஸ்சி’ (ஙி.க்ஷி.ஷிநீ.) ஜாயின் பண்ணினேன்!''

- தன் மொபைலில் வந்த வாழ்த்தை ஏற்க சிறிது இடைவெளி விட்டவர், தொடர்ந்தார்.

''ஆசைப்பட்டு சேர்ந்த படிப்புங்கறதால, ஆர்வமாப் படிச்சேன். 'அனுஷா எக்ஸாமுக்கு முதல் நாள்தான் படிப்பாங்களாம்’னு பேரன்ட்ஸ்கிட்ட விவாதம் பண்ண ரெடி ஆகற ஸ்டூடன்ட்ஸுக்கு ஒரு விஷயம் சொல்லணும்... கிளாஸ் ரூம்ல நான் 100% அட்டென்டிவ்வா இருப்பேன். அதனாலதான், பரீட்சைக்கு முதல் நாள் புக்கை எடுத்தாலும், சிக்கல் இல்லாம, சிரமம் இல்லாம பாடங்களை என்னால படிக்க முடிஞ்சது. இந்த அஞ்சு வருஷ படிப்புல, 'நல்லா படிக்கணும்...’னு நினைச்சுப் படிச்சேனே தவிர, இத்தனை கோல்டு மெடல்கள் வாங்கணும்னு எல்லாம் திட்டம் போட்டு படிச்சதில்ல. ஒருவேளை, அதை மனசுல வெச்சு படிச்

சிருந்தா, எங்க சீனியர்ஸ் கோவிந்தராஜன், லஷ்மி கிருபா கடந்த காலத்துல வாங்கி சாதிச்ச 31 கோல்ட் மெடல்களை 'டை’ பண்ணியிருக்கலாம்!'' என்றவர்,

''படிப்பை முடிச்ச கையோட பென்சில்வேனியாவுல இருக்கற யுனிவர்ஸிட்டிக்கு டாக்டர் வேலைக்கு அப்ளை பண்ணினேன். கிடைச்சிடுச்சு. இப்போ அங்க வேலை பார்த்துட்டே 'ஸ்மால் அனிமல்ஸ்’ பத்தி 'யுனிவர்ஸிட்டி ஆஃப் விஸ்கான்சின்’ல இன்டன்ஷிப் கோர்ஸ் பண்றேன். இன்னொரு பக்கம், 'ஸ்மால் அனிமல்ஸ் எமர்ஜென்சி அண்ட் கிரிட்டிக்கல் கேர்’ல ஸ்பெஷலைசேஷன் கோர்ஸும் பண்ணப் போறேன்!'' என்று எதிர்காலத் திட்டங்களை அடுக்கிவிட்டு,

''இதோ அமெரிக்காவுக்கு கிளம்பிட்டேன். என் பேட்டி 'புக்’ல வர்ற நேரம், நான் அமெரிக்காவுல 'அவள் விகடன்’ வாங்கிப் படிச்சுட்டு இருப்பேன்!''

- கூலாக 'பை’ சொல்கிறார் அனுஷா!

ரேவதிக்கு பதினோரு தங்கம்!

அதே நாளில் வெட்ரினரி டாக்டர் பட்டத்தோடு, 11 தங்கப் பதக்கத்தையும் வாங்கிய மற்றொருவர், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பி.வி.எஸ்சி. படித்த ரேவதி.

24 வயதில் 28 கோல்டு மெடல் !

''எங்க சொந்த ஊரு திருப்பூர் பக்கத்துல இருக்கிற வெள்ளக்கோவில். வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. கிராமத்துல இருந்து நாமக்கல்ல தங்கி படிச்சேன். டீடெய்லா சொல்லணும்னா... எங்க குடும்பத்துல படிச்ச முதல் பொண்ணு நான். எல்.கே.ஜி-யில இருந்து காலேஜ் வரைக்கும் நான் படிச்ச படிப்புல எல்லாம் ஃபர்ஸ்ட் மார்க்தான். கிளாஸ்ல பாடத்தை உருப்படியா கவனிப்பேன். அதுதான் 11 தங்கப்பதக்கம் வாங்கினதுக்கு முக்கிய காரணம். நான் பட்டம் வாங்கின அன்னிக்கு எங்கப்பா. அம்மா முகத்துல தெரிஞ்ச சந்தோஷம்தான் எனக்கு யாருமே தர முடியாத பட்டம்’' என்று சொல்லும் ரேவதி, தற்போது மகாராஷ்டிர மாநில புனே நகரில் சொந்தமாக பெட் கிளினிக் வைத்திருக்கிறார். காதல் கணவரும் வெட்ரினரி டாக்டர்தான். அவர், ரேவதி படித்த காலேஜில் சீனியராக இருந்த வினய் பகத்.

படம்: பொன்.காசிராஜன்