Published:Updated:

'மெட்ராஸை சுத்திக்காட்ட போறேன்...'

கைகொடுக்கும் 'கைடு'ஜாப்

ம.பிரியதர்ஷினி

சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் இருந்து, சிற்பம், நடனம், ஓவியம் வரை சுற்றுலா பயணிகளுக்கு நம் பாரம்பரியங்களை உற்சாகத்துடன் எடுத்துச் சொல்லும் 'டூரிஸ்ட் கைடு’ வேலைகளில், பெண்களும் ரொம்ப பிஸி!

தமிழ்நாடு சுற்றுலாத் துறை பரிந்துரையின் பேரில், ஃப்ரீலான்ஸாக 'கைடு’ வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நான்கு சீனியர் டூரிஸ்ட் கைடுகளை சந்தித்தோம்! ஒவ்வொருவருக்கும் ஒரு கூடை அனுபவங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'மெட்ராஸை சுத்திக்காட்ட போறேன்...'
##~##

''தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில 83-ம் வருஷம் 'கைடு’ போஸ்ட்டுக்கு ஃப்ரீலான்ஸா வேலை பார்க்க ஆள் எடுத்தாங்க. கணவரோட உந்துதலால நான் விண்ணப்பிச்சேன். தேர்வானது, எனக்கே ஆச்சர்யம்!'' என்று ஆரம்பித்த பிருந்தா லஷ்மியின் குரலில் அத்தனை உற்சாகம்.

''ரெண்டு மாச பயிற்சியில... சிற்பக் கலை, ஆலயங்கள், நடனம், இசைனு முக்கிய சுற்றுலாத் தலங்களோட சிறப்புகளை விளக்கினதோட, டூரிஸ்ட் ஸ்பாட்களுக்கும் கூட்டிட்டுப் போய் களப்பயிற்சி கொடுத்தாங்க. நாட்டிலுள்ள எந்த மாநிலத்திலயும் 'கைடு’ வேலை பார்க்க இந்திய சுற்றுலாத் துறை அங்கீகரிச் சிருக்கு. டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு எங்களோட லிஸ்ட்டை அரசாங்கம்  கொடுத்துடும். அவங்க மூலமா எங்களுக்கு வாய்ப்புகள் வரும். அப்படித்தான் கடந்த இருபத்தியெட்டு வருஷங்களா சுற்றுலா வாசிகளுக்கு ஊர்சுத்தி காட்டிட்டு இருக்கேன். இந்த சீஸனல் வேலையில கை நிறைய சம்பளம், பொழுதுபோக்கு, பாதுகாப்போட நமக்கு வசதியான நேரத்துல வேலை பார்க்கற வசதியும் இருக்கறதால, பெண்கள் தாராளமா இந்த வேலையை டிக் பண்ணலாம். இங்கிலீஷ், இந்தியெல்லாம் தெரிஞ்சிருக்கறது ரொம்ப முக்கியம். அப்பத்தான் ஆல் இண்டியா லெவல்ல நாம பிரகாசிக்க முடியும்'' என்றார் பிருந்தா.

''வெளிநாட்டுப் பயணிகள், இந்தியாவுக்கு ஃப்ளைட் ஏறுறதுக்கு முன்னயே நம்நாட்டு சுற்றுலா தலங்களோட மேப், சிறப்பம்சம்னு எல்லாத்தைப் பத்தியும் ஒரு அவுட்லைன் தெரிஞ்சு வெச்சுட்டுத்தான் வருவாங்க. அவங்களுக்கு ஈடு கொடுக்கற அளவுக்கு நாமளும் தெரிஞ்சு வெச்சிருக்கணும்.

'மெட்ராஸை சுத்திக்காட்ட போறேன்...'

இந்த கைடு வேலையை கடமையேனு செய்யாம, வெளிநாட்டினருக்கு நம்மளோட அருமை, பெருமையை எடுத்துச் சொல்ற வாய்ப்பா நினைச்சு, ரசிச்சு செய்றேன். அதனாலதான் இங்க வந்துட்டுப் போற ஃபாரினர்ஸ் எல்லாம் என் ஃப்ரெண்ட் ஆகி, அவங்க நாட்டுக்கு திரும்பினதுக்கு அப்புறமும் கூட தொடர்புல இருப்பாங்க. சென்னையில சுனாமி வந்தப்போ, 'பத்திரமா இருக்கியா?’னு அவங்கள்ல பலர் போன் பண்ணிக் கேட்டபிறகு, இந்த வேலையை இன்னும் அதிகமா நேசிக்க ஆரம்பிச் சுட்டேன்!'' எனும் கலா, பிருந்தாவைப் போலவே 83-ம் ஆண்டில் பணியைத் துவக்கியவர்.

முப்பதாண்டுகள் அனுபவம்... பத்மினி ராமசந்திரனுக்கு. ''ஒரு குழுவை நாம சுற்றுலாவுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு திரும்பி வர்ற வரைக்கும், தங்கற இடம், சாப்பாடு, டிரெய்ன், டிராவல்ஸ்னு நம்மளோட பிளான்ஸ் எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கணும்.

'மெட்ராஸை சுத்திக்காட்ட போறேன்...'

ஒருமுறை வடநாட்டு சுற்றுலா பயணிகள் குரூப்பை ஆல் இந்தியா டூர் கூட்டிட்டுப் போனப்போ, மங்களூர்ல இருந்து அன்னிக்கு கோவா கிளம்பணும். 'நாளைக்குப் போகலாமே’னு எல்லாரும் கேட்க, நானும் சரினுட்டேன். அடுத்த நாள் கோவா போயிட்டு இருக்கும்போது, வழியில ஒரு ஆக்ஸிடென்ட். ரோடு சுத்தமா பிளாக் ஆகியிருந்தது. அடை மழையில எல்லாரும் பஸ்லயே தங்கி இருந்தது, மறக்க முடியாத டெரர் அனுபவம். சென்ட்டிமென்ட்டோ, பட்ட சிரமம் தந்த பாடமோ... அதிலிருந்தே இன்னிக்கு வரைக்கும் எந்தக் காரணம் கொண்டும் டூர் பிளானை மாத்தக்கூடாதுங்கறதுல ரொம்ப உறுதியா இருக்கேன்.

ஒரு வாரமோ, ஒரு மாசமோ... டூரை நாம நல்லபடியா முடிச்சுக் கொடுத்தா, ஊருக்கு கிளம்பும்போது அந்த டூரிஸ்ட் குரூப் எல்லாரும் எழுந்து நின்னு கை தட்டி நமக்கு நன்றி சொல்வாங்க பாருங்க... அப்போ கிடைக்கற பெருமைக்கும் சந்தோஷத்துக்கும் ஈடே இல்ல!'' எனும் பத்மினி, பிருந்தா மற்றும் கலாவின் பெஸ்ட் தோஸ்த்தும் கூட!

''இந்த ஃபீல்டுல நான் சூப்பர் சீனியர்!'' என்று சிரிக்கும் ஆனந்திக்கு, 72 வயது! ''அதனாலேயே உயர் பதவியில இருக்கற வெளிநாட்டுக்காரர்கள் இங்க டூரிஸ்ட்டா வந்தா, என் மொபைலுக்கு கால் வந்துடும். ரெண்டு வருஷத்துக்கு முன்ன பெல்ஜியம் நாட்டு அரசியை மயிலாப்பூர் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போனது மறக்க முடியாத அனுபவம்.

'மெட்ராஸை சுத்திக்காட்ட போறேன்...'

ஒவ்வொரு வருஷமும் அமெரிக்காவுல இருந்து ஒரு சுற்றுலா கப்பல் இந்தியாவுக்கு வரும். அந்த கப்பலுக்கான கல்ச்சுரல் கைடா நான்தான் இருப்பேன் எப்பவும். அதைப் பார்த்த சிங்கப்பூர் யுனிவர்ஸிட்டி புரொஃபசர் ஒருத்தர், அங்க என்னை கெஸ்ட் லெக்சர் கொடுக்க அழைச்சார்.

நம்மோட கலாசாரம், வாழ்க்கை, மத, சாதி கட்டமைப்புகள், பெண்கள் வாழ்க்கைனு 700 பசங்களுக்கு கிளாஸ் எடுத்தேன். அதிலிருந்தே வெளிநாடுகள்ல இந்திய கலாசாரத்தைப் பத்தி லெக்சர் கொடுக்கற வேலை தொடர்ந்துக்கிட்டிருக்கு. எல்லாருக்கும் ஊரு சுத்திக் காட்டிட்டு இருந்த எனக்கு, இப்படி உலகம் முழுக்க சுற்றி வர்றதுக்கான வாய்ப்புகளை கொடுத்தது... என் 'கைடு’ வேலைதான்!'' என்று நெகிழ்ந்து சிரிக்கிறார் ஆனந்தி.  

படங்கள்: எம்.உசேன், வி.செந்தில்குமார்