Published:Updated:

நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !

நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !

மேனகா காந்தி
 உயிர்களை உரசும் தொடர்

சொந்தங்களே....

நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வீட்டிலிருக்கும் குழந்தை, தான்  வளர்ப்பதற்காக நாய் ஒன்று வாங்கித் தரச்சொல்லிக் கேட்டது என்பதற்காக, சிலர் பணம் கொடுத்து நாய்க்குட்டிகளை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் நினைப்பது போல நாய் வளர்ப்பது என்பது அத்தனை சுலபமான காரியமல்ல. ஒரு செல்லப் பிராணியை வளர்க்க நினைத்தால்... முதலில் அந்த பிராணியின் மீது அளவிட முடியாத அன்பும் நேசமும் வேண்டும். அடுத்தபடியாக அந்த செல்லப் பிராணியை தனி கவனம் கொடுத்து கவனிக்க நேரம் ஒதுக்க வேண்டும். அவற்றையெல்லாம்விட, அந்தப் பிராணியின் சைக்காலஜியை நன்கு தெரிந்து வைத்திருப்பதுதான் மிக மிக முக்கியம்!

 பலசமயங்களில் வீட்டை விட்டு நாய் வெளியே ஓடும்போது, 'ஏய் ஜிம்மி... உள்ளே வா’ என்று தொண்டை கட்டிக் கொள்ளும் அளவுக்கு அந்த நாயின் எஜமானர், வாசலில் நின்று கத்துவார். ஆனால், நாய் அவரை சட்டையே செய்யாது. காரணம் என்ன தெரியுமா? பொதுவாக நாய்களின் உலகத்தில் ஒன்றோடு ஒன்று பேசுவதாக இருந்தால், சத்தம் போட்டுக் கத்தாது. அதனால் ஒருவர் சத்தம் போடும்போது, அவர் தன்னிடம் பேசுகிறார் என்பதே பல நாய்களுக்குப் புரியாது!  

 நீங்கள் சாப்பிடும்போது உங்கள் செல்ல நாய் உங்களைப் பார்த்து குரைக்கிறது. நீங்கள் அதற்கு ஒரு பிஸ்கட்டை கொடுக்கிறீர்கள். இதனால், 'நான் நினைப்பதெல்லாம் நடக்கிறது. நான்தான் இந்த வீட்டுக்கே எஜமான்' என்ற எண்ணம் உங்கள் செல்ல நாய்க்கு ஏற்பட்டுவிடும். காரணம், நாய்களின் உலகில் தலைவனாக இருக்கும் நாயைப் பார்த்து, அதுவும் அது சாப்பிடும் வேளையில் வேறு நாய்கள் குரலையே உயர்த்த முற்படாது!

##~##

உங்கள் செல்ல நாய் தேவையே இல்லாமல் குரைக்கிறது. 'செல்லம்ல... சத்தம் போடக் கூடாது!’ என்று அதன் தலையை நீவி சமாதானம் செய்கிறீர்கள். அப்படிச் செய்தால்... 'ஓஹோ... இப்படியெல்லாம் கத்தினால் எஜமானரின் அரவணைப்பு அதிகமாகும்’ என்று அது எதிர்பார்க்கும்!

நாய் ஏதோ தப்பு செய்கிறது. அப்படி செய்யக் கூடாது என்பதை சுட்டிக்காட்ட, 'டைகர், டைகர், டைகர்’ என்று நாயின் பெயரை கோபத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லி கத்துகிறீர்கள். பாடி லாங்குவேஜை பயன்படுத்தாமல், வெறுமனே வார்த்தைகளாலேயே அதன் பெயரைத் திரும்பத் திரும்ப சொல்லிப்

நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !

பேசுகிறீர்கள். இப்படிச் செய்தால்... தன்னுடைய பெயரை கெட்ட செயல்களோடு மட்டுமே நாய் தொடர்புபடுத்திக் கொள்ளும். சாதாரண நேரங்களில் 'டைகர்’ என்று நீங்கள் அதை கூப்பிட்டால்கூட திரும்பிப் பார்க்காது!

 நாய்களைப் பொறுத்தவரை, அவை ஏதாவது தவறு செய்தால் அந்தக் கணமே அதை அவற்றுக்குப் புரிய வைத்துவிட வேண்டும். காலையில் அது செய்த தவறை, மாலை ஆபீஸிலிருந்து திரும்பி வந்த பிறகு ரிலாக்ஸ்டாக புரிய வைக்க முற்பட்டால், அது புரிந்து கொள்ளாது!

நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !

நாயை வாக்கிங் அழைத்துச் செல்லும்போது... கயிற்றை இழுத்துக் கொண்டே முன்னே செல்ல அனுமதிக்கிறீர்கள். அப்போது நாய், 'நாம்தான் லீடர்’ என்று செருக்கடையும். எதிர்படும் மற்ற நாய்களை அது சட்டை செய்யாமல் போக வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். மீறி அது மற்ற நாய்கள் பக்கம் திரும்பினால்... அதைக் கண்டிப்பீர்கள். இதுபோன்ற தருணங்களில், 'லீடர் நானா? அல்லது நான் தலைமையேற்று வழி நடத்தி செல்லும் மனிதப் பிறவியா..?’ என்று நாய் குழம்பிப் போய்விடும்.

 உங்கள் செல்ல நாய் தேவையில்லாமல் குரைக்கிறது. 'டாமி, குரைக்காதே’ என்று அதை நீங்கள் அதட்டுகிறீர்கள். ஆனால், அது உங்களை சட்டை செய்யவில்லை. நாயின் தலையை உங்களை நோக்கி திருப்பி அதன் கண்களைப் பார்த்து, 'நான் பேசறதை காதுல வாங்கறியா... இல்லையா?’ என்று கண்டிக்கிறீர்கள். அப்போது உங்கள் நாய்க்கு நிச்சயம் கோபம் வரும். காரணம், தன் முகத்தை திருப்புவதை அது தனக்கு எதிரான சவாலாக எடுத்துக் கொள்ளும்.

நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !

இங்கே நாய்களை உதாரணத்துக்காகத்தான் கூறியிருக்கிறேன். மற்றபடி, ஒவ்வொரு விலங்குக்குமே இப்படித்தான். அதனதன் சைக்காலஜியை நன்கு புரிந்துகொண்டு, பழகினால் உங்களுக்கும் உங்கள் செல்லப் பிராணிகளுக்கும் இடையேயான நட்புணர்வு மேம்படும். அன்பு அதிகரிக்கும். ஏன்... நமக்கும்கூட இதே சைக்காலஜிதானே! எனவே, நம் சொந்தங்களாக இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜீவன்களையும், அதனதன் போக்கில் புரிந்து கொண்டு வாழ முயற்சிப்போம்... வாழ்த்துக்கள்!

நிறைவடைந்தது