ரேவதி

வர்ணனை: பிரபல டி.வி.எஸ். மோட்டார் நிறுவன அதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்கார் - லட்சுமி அம்மாள் தம்பதிக்கு, 1905-ம் ஆண்டில் மகளாகப் பிறந்தவர் சௌந்தரம். இளவயதிலேயே பாட்டு, வீணை என பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்... துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பிறரைச் சார்ந்திராத தன்மை, சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் பக்குவம் போன்றவற்றையும் கூடவே வளர்த்துக் கொண்டார். இவையெல்லாம்தான்... பிற்காலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் ஓர் தலைவியாக அவரை உருவெடுக்கச் செய்தன!

சம்பவம்: பன்னிரண்டாம் வயதிலேயே திருமணம் நடந்து, சில வருடங்களுக்குப் பிறகு பிளேக் நோயினால் கணவர் இறந்துவிட, இளம் விதவையாக வீட்டுக்குள் முடக்கப்பட்டார் சௌந்தரம்.

ஒரு சமயம், அப்பா சுந்தரத்தைத் தேடி வீட்டுக்கு வந்திருந்தார் விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா. சௌந்தரத்தின் நிலை கண்ட அவர், 'வீட்டிலேயே பூட்டி வைத்து, வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். கல்வியைத் தொடரச் செய்யுங்கள்’ என்று சொன்னதுதான்... சௌந்தரத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. பள்ளிப் படிப்பு, அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் சென்னையில் மருத்துவப் படிப்புகளை முடித்து, சிறந்த மருத்துவ நிபுண ராக உருவானார்.

புரட்சி: அப்பாவைப் போலவே சமூக சேவை மற்றும் அரசியல் ஆர்வம் சௌந்தரத்துக்கும் இருந்தது. அதனால், மதுரையில் சொந்தமாக இலவச மருத்துவமனையை ஆரம்பித்தார்.

கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவையை அளித்தவர், கூடவே சமூக சேவைகளையும் மேற்கொண்டார். அப்பகுதிகளில் தீண்டாமை ஒழிப்பு, காங்கிரஸ் கட்சிப் பணி என்று ஈடுபட்டிருந்த 'ஹரிஜன சேவா சங்க' காரியதரிசி ராமச்சந்திரனோடு பழகும் வாய்ப்பு, சௌந்தரத்துக்கு கிடைத்தது. அவருடைய பணிகள், ஆங்கிலச் சொற்பொழிவு இவையெல்லாம்... அவரையே திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சௌந்தரத்துக்கு ஈர்ப்பை ஏற்படுத்தின. பெற்றோர் உள்பட பலரும் எதிர்த்தனர். அதை மீறி, 1940-ம் ஆண்டில், ராட்டையில் நூற்ற நூலில் மாங்கல்ய நாண் தயாரித்து, மஞ்சள் தடவிக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் காந்தி அடிகள். இந்த விதவை ப்ளஸ் கலப்புத் திருமணம்... அக்காலத்தில் படுபரபரப்பாக பேசப்பட, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வந்தார் சௌந்தரம்.

சேவை: சௌந்தரத்தின் சிறப்பான சேவைகளைப் பாராட்டியதோடு, கிராமப்புறங்களில் இன்னும் அதிக அளவிலான சேவைகள் நடைபெறவேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார் காந்தி. இதையடுத்து, 1947-ம் ஆண்டில் திண்டுக்கல் அருகே 'காந்தி கிராமம்’ தொடங்கப்பட்டு, பள்ளி, கல்லூரி, மாணவ மாணவியர் விடுதி, விவசாயம், நெசவு, சுகாதாரம், கட்டடவேலை, பயிற்சி முகாம், ஆராய்ச்சி மையம், வேலை வாய்ப்பு என அனைத்து உதவிகளும் மக்களுக்குக் கிடைக்கச் செய்தார் சௌந்தரம். இன்றைக்கு, 'காந்திகிராம் கிராமிய பல்கலைக் கழகம்' என விருட்சமாகத் தழைத்தோங்கி நிற்கிறது அந்த நிறுவனம். தொண்டு செய்தே வாழ்ந்து வந்த நல்லுள்ளம், 1984-ம் ஆண்டு மறைந்து போனது. அவருடைய கண்கள், தானமாக அளிக்கப்பட்டு, இன்னொருவருக்கு பார்வையைத் தந்தன.

சாதனை: மருத்துவத்தை சேவையாகக் கருதி தொண்டாற்றிய சௌந்தரம், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினர், மத்திய துணைக் கல்வி அமைச்சர் போன்ற பதவிகளையும் வகித்தார். குழந்தைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துக் காக இவர் செய்த சேவைகளைப் பாராட்டி, 1962-ம் ஆண்டு 'பத்ம பூஷண்’ என்ற உயரிய விருதைக் கொடுத்துக் கௌரவித்தது இந்திய அரசு.

படங்கள் உதவி: ஆர்.குமரேசன், வீ.சிவக்குமார்