Published:Updated:

குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்கணுமா..?

குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்கணுமா..?

ரேவதி

'இருபத்தி நாலு மணி நேரமும் தண்ணிக்குள்ள இருந்தா தேவல...’ என்று கசகசக்கும் வியர்வையும், தகிக்கும் உடல் சூடும் நினைக்க வைக்கிறதுதானே! உங்களுக்காகவே... உடல் உஷ்ணம் தணிக்கும் இயற்கை யான குளுகுளு குளியல் முறைகளை இங்கு விவரிக்கிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் டாக்டர் கே.ஜி.ரவீந்திரன்.

குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்கணுமா..?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

''சிலரது உடம்பைத் தொட்டாலே கொதிக்கும். ஆனால், ஜுரமாக இருக்காது. இதை ஆயுர்வேதத்தில் 'உடற்காங்கை’ என்பார்கள். எரிச்சல், கோபம், பயம், மனக்கவலை, தலை வலி... இவை அதிகமாவதற்கு உடற்காங்கை ஒரு முக்கிய காரணி. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால் உடம்பில் சூடு ஒரே நிலையில் இருக்கும். மாதவிடாய் கோளாறுகள், வாயுத் தொல்லை, அஜீரணம், மூட்டுவலி, இளநரை, மலச்சிக்கல், மூலம், கண்கள் பாதிப்பு என பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு அதீத உடல் உஷ்ணமும் ஒரு காரணம்.

கேரள முறையில் பிழிச்சல், தாரா சிகிச்சை என பல்வேறு குளியல் சிகிச்சைகள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் உடலின் நிலை, ஒவ்வாமை, நோய்கள், பிரச்னைகளைப் பொறுத்துதான் இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டி லேயே எளிய முறையில் சில குளியல்களைக் கடைப்பிடித்தாலே... உடம்பைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இதற்கென பயன்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்தும் ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கும்'' என்று சொன்ன ரவீந்திரன், அதற்குத் தேவையான மூலிகைகள் மற்றும் குளியல் முறைகளைப் பட்டியலிட்டார். அவை -

சருமம் அதிகமாக வறண்டு போகும் இந்த நேரத்தில், உடலுக்கு எண்ணெய்ப் பதமிடுதல் அவசியம். நல்லெண் ணெய், திரிபலாதி தைலம், பிருங்காமல தைலம், பொன்னாங் கண்ணி தைலம்... இவற்றை வாரம் ஒரு முறை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். தலை முதல் பாதம் வரை நன்றாகத் தேய்த்து சிகைக்காய் பவுடரால் அலசும்போது, உடல் சூட்டினால் பொலி விழந்த சருமம், கூந்தல், இளநரை அத்தனைக்கும் தீர்வு கிடைக்கும்.

குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்கணுமா..?

தலை ஈரமாக இருக்கும்போது எண்ணெய் தடவுவது கூடாது. அதேபோல, எண்ணெய் தடவாமல் தலைக்குக் குளிப்பதும் கூடாது. சருமம் மற்றும் கூந்தலில் எப்போதும் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் உஷ்ணத்தால் உடல் தகிக்காமல் இருக்கும். ஆயுர்வேத மருத்துவரை அணுகி, உங்கள் உடம்புக்குப் பொருந்தும் தைலத்தை தேர்ந்தெடுப்பதும் நல்லது.  

பொதுவாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது சூடான நீரை பயன்படுத்த வேண்டும். எண்ணெயுடன் மிளகு, ஓமம் சேர்த்துக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால்... உடற்காங்கை குறையும்.

கசகசா விதைகளை வாங்கி பாலில் ஊற வைத்து அரைத்து, அந்த விழுதை தலையில் தடவிக் குளிக்கலாம். சருமத்தையும் ஜில்லென வைக்கும். அரைத்த சந்தனம், அகில், வெட்டிவேர் இந்த மூன்றையும் தண்ணீரில் போட்டு வைத்துக் குளித்தால் உஷ்ணக் கட்டி, கொப்பளங்கள் வராமல் கவசமாக உடலைப் பாது காக்கும்.

பசும்மஞ்சள், வேப் பிலை, முல்லைப்பூ இவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து குளித்தால், வெயிலினால் ஏற்படும் சரும பிரச்னை களை சடுதியில் விரட்டிவிடும்!

''குளியல்னு சொன்னதும்... எல்லாரும் எல்லாத்தையும் எடுத்துப் போட்டுக் குளிச்சுடக் கூடாது'' என்று அக்கறை காட்டிய 'இயற்கை அழகுக்கலை நிபுணர்' ராஜம் முரளி, வயது வாரியாக தந்த குளியல் பட்டியல் -

குழந்தைகளுக்கு: வாரம் இரு முறை தேங்காய்ப் பால் அல்லது இளநீர் வழுகலை அரைத்து தலை முதல் பாதம் வரை தேய்த்து... பயத்தமாவு, சீயக்காய் பவுடரால் அலசினால், உடல் குளிர்ச்சியாகவே இருக்கும். உடல் வளர்ச்சிக்கும் உதவும்.

டீன் ஏஜினருக்கு: வெப்பம், வியர்வை மற்றும் அழுக்கு போன்றவை காரணமாக முடி அதிக அளவில் கொட்டும். வார இறுதி நாட்களில் மருதாணியுடன் எண்ணெய் கலந்து அரைத்து தலையில் பூசி, ஒரு

குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்கணுமா..?

மணி நேரம் ஊற வைத்து, சிகைக்காய் பவுடர் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது நிற்கும். மல்லிகை, முல்லை, துளசி, மரிக்கொழுந்து, தவணம் போன்ற பூக்களை (காய்ந்தவையாக இருந்தாலும்) நன்றாக அரைத்து, எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி, உச்சி முதல் பாதம் வரை தேய்த்துக் குளிக்கலாம். டென்ஷன் பறந்துவிடும்.

கர்ப்பிணிகளுக்கு: லவங்கம், கடுக்காயை ரவை போல் அரைத்து சந்தனத்தூள், கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன் டெலிவரிக்கு பிறகு வயிற்றுப் பகுதியில் வரிகள் விழுவதையும் தடுக்கும்.

வயோதிகர்களுக்கு: தினமும் பயத்தமாவு தேய்த்து குளிப்பது சருமத்துக்கு மிகவும் நல்லது. பால் ஏடு, வெண்ணெய், தயிர், அரைத்த எள் விழுது இவற்றை ஒரு நாள் விட்டு ஒருநாள் உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் சருமம் சுத்தமாவதுடன்... எப்போதும் எண்ணெய் பசையுடன் பளபளவென்று மின்னும். அவ்வப்போது இடுப்பிலிருந்து தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் 'ஹிப் பாத்’ நல்ல பலனை அளிக்கும்.

குளியல் குளுமை தரட்டும்..!