Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

ரிமோட் ரீட்டா
 படம்: பொன்.காசிராஜன்

கேபிள் கலாட்டா!

சன் டி.வி 'தென்றல்’ சீரியல்ல குடி, ரவுடினு இதுவரை முரட்டுப் பையனா வந்த 'மோகனு’க்கு இப்போ லவ் டிராக் ஸ்டார்ட் ஆயிடுச்சு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ரியல் லைஃப்ல ஏதாச்சும் விசேஷம் இருக்கா பாஸ்...?!''னு 'மோகன்’ ஐயப்பனுக்கு போன் போட்டேன்!

''வளசரவாக்கம் சாய்கிருபா ஷூட்டிங் ஹவுஸுக்கு வா ரீட்டா...!''னு வெத்தல பாக்கு வெச்சாரு பையன். சென்னை வெயிலுக்குப் பயந்து, முகத்துல துப்பட்டா முகமூடி, கையில் கிளவுஸ் எல்லாம் மாட்டிக்கிட்டு, 'மம்மி’ காஸ்ட்யூம்ல ஸ்கூட்டியை விட்டேன் ஸ்பாட்டுக்கு!

''பிறந்து வளர்ந்ததெல்லாம் ஊட்டி பக்கத்துல சின்ன கிராமம் ரீட்டா. படுகர் இனத்தைச் சேர்ந்தவன். ப்ளஸ் டூ வரைக்கும் அங்க இருக்கற கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிச்சுட்டு, கோயம்புத்தூர்ல டிப்ளமா முடிச்சேன். திருப்பூர், பெங்களூருனு நிறைய இடங்கள்ல வேலை பார்த்தேன். சம்பளம் பெரிசா ஒண்ணும் கிடைக்கல.

சென்னையில பெரிய 'பார்’ல கேப்டன் வேலை கிடைச்சுது. அங்க தினமும் நிறைய செலிப்ரிட்டீஸ் வருவாங்க. அப்படி வந்த விஜய் டி.வி-யோட  'கிரியேட்டிவ் ஹெட்’ பிரதீப் மில்ராய் பீட்டர் சார், எங்கிட்ட அன்பா பேசி, 'ஆபீஸுக்கு வந்து என்னைப் பாரு’னு சொல்லிட்டுப் போனார். போனா, 'கனா காணும் காலங்கள்’ சீரியல்ல எனக்கு ஒரு கேரக்டர தூக்கிக் கொடுக்கறாரு. 'ஐயோ... நடிக்கறதா... அதெல்லாம் தெரியாது

##~##

சார்’னு சொன்ன எனக்கு நம்பிக்கையூட்டி கேமரா முன்னால அவர் நிறுத்த, என் கேரக்டர் நல்ல ஹிட்!

தொடர்ந்து, 'ஜோடி நம்பர் 1’, 'திருமதி செல்வம்’, 'தென்றல்’, சினிமாவுல சின்னச் சின்ன ரோல்ஸ்னு இப்போ நானும் ஒரு நடிகனாயிட்டேன்! என்னை ரோட்டுல பார்க்கறவங்கள்ல சிலர், 'ஏம்ப்பா மோகனுதானே நீ... உங்க அப்பா சொல் பேச்சுக் கேட்டு நட... இல்லைனா உருப்பட மாட்டே’னு திட்டும்போது, 'ஆஹா... இந்தளவுக்கு நம்ம கேரக்டர் ரீச் ஆயிருக்கே..!’னு சிலிர்ப்பா இருக்கும்!''னு சந்தோஷப்பட்டவர்கிட்ட,

''ஓகே! ஏதாச்சும் விசேஷம் இருக்கானு கேட்டேனே.?!''னு ஞாபகப்படுத்தினேன்!

''வீட்டுல கல்யாண சாப்பாடு போடணும்னு ஆசைப்படறாங்க. சீக்கிரமே குட் நியூஸ் சொல்றேன் ரீட்டா!''னு சிரிச்சாரு பப்ளி பாய்!

ஓஹோ!

முரட்டுப் பையனின் லவ் டிராக் !

பாலிமர் டி.வி-யில... 'ரசிக்க, ருசிக்க’னு சமையல் காம்பயரிங்க்ல கமகமக்கிற நிஷா கிருஷ்ணன், கலகல காலேஜ் பொண்ணு... வீட்டுக்கு ஒரே பொண்ணு!

கேபிள் கலாட்டா!

''பெரிய டென்டிஸ்ட்டாகணும்தான் எனக்கு ரொம்ப ஆசை (யானையோட பல்லுக்கு வைத்தியம் பார்க்கத்தானே!). ஸ்கூல் படிக்கறப்பவே, விளம்பர படத்துல நடிச்சிட்டிருந்ததால, 'நீ எடுத்திட்டிருக்கிற ஃபீல்டையே படி. அதுதான் உனக்கு சக்சஸா இருக்கும்’னு பேரன்ட்ஸ் சொன்னாங்க. அதனால பல் ஆசையை கழற்றி வெச்சுட்டு, டி.வி. முன்னாடி புன்னகை பூக்க வந்துட்டேன்’'னு சொல்ற நிஷா... எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜுல சமர்த்தா எம்.எஸ்சி., பிராட்காஸ்டிங் கம்யூனிகேஷன் படிச்சிட்டிருக்கு.

''ராஜ் டி.வி-ல பேட்டி, காம்பயரிங்னு பண்ணிட்டிஇருந்தவள, பாலிமர் டி.வி-யில கூப்பிட்டு, படையல் நிகழ்ச்சியைப் பண்ணச் சொன்னாங்க. சாப்பிடறதுதான் பிடிச்ச விஷய மாச்சே... அதுவும் தலைவாழை இலை போட்டு சாப்பிடறதுனா... சும்மாவா..! கலக்கிக்கிட்டு இருக்கேன்.

ரெண்டு மணிக்கு காலேஜ் விட்டு வந்ததும், ஒரு மணி நேரம் தூக்கம். அப்புறம் ஷூட்டிங், ஃப்ரெண்ட்ஸுனு வாழ்க்கை ரொம்ப ஜாலியா ஓடிட்டேயிருக்கு ரீட்டா''னு சொல்ற நிஷா,

அடுத்த கட்டமா... 'மண் பேசும் சரித்திரம்’னு அந்தக் கால வரலாற்று இடங்கள் பத்தி விஷயங்கள அலசுற நிகழ்ச்சியை சீக்கிரமே வசந்த் டி.வி-யில தொகுத்து வழங்கப் போறாங்கோ..!

சேனல் சரித்திரத்துல இடம் பெற வாழ்த்துக்கள்!

வாசகிகள் விமர்சனம்

த்ரில்லோ த்ரில்!

''டிஸ்கவரி சேனல் என்றாலே... செம ஸ்பெஷல்தான். அதிலும் அன்றைய தினம் பார்த்த காட்சிகள்... பயங்கர த்ரில்!

மான் மற்றும் வரிக்குதிரைகள் நின்றிருக்க, அவற்றை விட்டுவிட்டு, மரத்தின் மீதிருந்த ஒரு குரங்கை குறிவைத்து விரட்டுகிறது ஒரு சிறுத்தை. இதைப் புரிந்து கொண்ட குரங்கு... மரம் மரமாக தாவி ஓடுகிறது. சளைக்காமல் தானும் தாவி குரங்கைப் பிடித்துவிடும் சிறுத்தை, அதை வாயில் கவ்விக் கொண்டு உயரமான ஒரு மரத்தில் ஏறி அமர்கிறது. இதைப் பார்த்த, ஆப்பிரிக்கா யானை, தன் தலையால் பலம் கொண்ட மட்டும் அந்த மரத்தை முட்டி மோதி, சிறுத்தையைக் கீழே விழ வைக்க முயற்சிக்கிறது. அந்த நேரத்தில், இரு காண்டாமிருகங்கள், யானையைச் சண்டைக்கு இழுக்க... 'திரில்லிங்கோ... த்ரிலிங்'தான் போங்கள்! எப்படித்தான் படமெடுத்தார்களோ?'' என்று வியந்து பாராட்டுகிறார் சத்தியமங்கலத்தில் இருந்து ஏ.ஜே.தில்ஷாத்பேகம்.

குருதட்சணை இல்லாமலே ஆங்கிலம்!

''வசந்த் டி.வி-யில் ஒளிப்பரப் பப்படும் 'தமிழ் வழி ஆங்கிலம்’ நிகழ்ச்சி மிகவும் அருமை. ஆங்கிலம் கற்று ஒரு நல்ல பணியில் அமர வேண்டுமென்ற ஆசையில்... நூலகங் களுக்கும், புத்தக நிலையங்களுக்கும் சென்று புத்தகத்தை சேமிக்கும் இன்றைய இளைஞர் பட்டாளத்துக்கு, இந்த நிகழ்ச்சி அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம். குருதட்சணை எதுவும் இல்லாமே குறுகிய காலத்தில் ஆங்கிலம் கற்றுக் கொள்ள இது ஒரு ஈஸி வழி’' என்று புகழ்கிறார் சென்னையில் இருந்து மல்லிகா திருமால்.

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

75