பிரியாமணி

''தன்னலமற்ற சேவையாற்ற இன்றைய இளைஞர்கள் முன்வருவார்களா?' - இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி சென்னை வந்திருந்தபோது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் வந்து விழுந்த கேள்வி இது.

''ஏன் இல்லை... உங்கள் ஜோதியையே உதாரணமாகச் சொல்வேனே..!’' என்றார் ராகுல் சிறிதும் யோசிக்காமல்!

அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜோதி மணி, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த பெண். தன் நேர்மையான அரசியல் ஆர்வத்தால், தீவிரமான உழைப்பால் அரசியல் களத்தில் பல கட்டங்களைத் தாண்டி, இந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் இளைஞர் காங்கிரஸிலிருந்து ஒரு வேட்பாளராக கரூர் சட்டமன்ற தொகுதியில் களம் இறங்கும் இளம் நம்பிக்கை! இவர் ஒரு எழுத்தாளரும்கூட. இந்திரா பிரியதர்ஷினி என்ற புனைப் பெயரில் எழுதும் இவர், சிறந்த சிறுகதைக்கான இலக்கிய பரிசும் பெற்றிருக்கிறார்.

''ஏற்கெனவே அரவக்குறிச்சி பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலரா வெற்றி பெற்றிருக்கேன். டிஸ்ட்ரிக்ட் செக்ரெட்டரி, ஸ்டேட் கவுன்சில் மெம்பர், யூத் நேஷனல் காங்கிரஸ் கோ- ஆர்டினேட்டர் (கேரளா), யூத் நேஷனல் காங்கிரஸ் ஜெனரல் செக்ரெட்டரினு படிப்படியா பல பொறுப்பு களுக்கு முன்னேறியிருக்கேன். பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள்ல அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை தேசத்துக்காக தன்னலமற்ற சேவையாற்ற தயார்படுத்தற பயிற்சிகளை ராகுல்ஜியோட வழிகாட்டுதலோட செஞ்சுட்டு இருக்கேன். என்னோட உழைப்புக்கு அங்கீகாரமாத்தான் கட்சி எனக்கு ஸீட் கொடுத்திருக்கு!''

- ஜோதியின் குரலில் அத்தனை உற்சாகம்!

''ஒவ்வொரு தொகுதியோட வளர்ச்சியையும் மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிறைய நிதி ஒதுக்கும். ஆனா, அதெல்லாம் இதுவரை இந்த தொகுதிக்காக பயன்படுத்தப்படவே இல்ல. அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள்னு பலரோட பாக்கெட்டுக்கும்தான் அது போய்ச் சேருது. இந்த நிலையை நான் மாற்றுவேன். அரசியல் எனக்குத் தொழில் இல்ல. அதனால... எதுக்கும், யாருக்கும் வளைஞ்சு கொடுக்காம எல்லா முயற்சிகளையும் என்னால எடுக்க முடியும்'' என படபடவெனப் பொரிகிறார் ஜோதி.

''மக்களைப் பொறுத்தவரைக்கும் மேடையில பேசற அரசியல்வாதிகளைவிட, மக்களோட மக்களா இறங்கிப் பழகறவங்க மேலதான் நம்பிக்கை வைப்பாங்க. ஏற்கெனவே தொகுதி மக்கள் என்மேல நம்பிக்கை வெச்சாச்சு'' என்று தெம்பு நிறைந்த குரலில் சொல்லும் ஜோதி, இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை!